லாசருவின் உயிர்த்தெழுதல் THE RESURRECTION OF LAZARAUS Erie Pennsylvania U.S.A. 52-07-29A நன்றி சகோதரர் பாக்ஸ்டர். நன்றி சகோதரர் பாக்ஸ்டர். மாலை வணக்கம் அல்லது மதிய வணக்கம். இந்த மதிய வேளையில், நாம் சேவிக்கும் இந்த மகா மேன்மையான தேவன் இயேசு கிறிஸ்துவின் மீது என் இருதயத்தில் உள்ள அன்பை பற்றி உங்களிடம் பேசுவதற்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மற்றும் அந்த மகிமையான பழைய பாடல், "நம்பிடுவேன்" என்பதை, எழுதிய பால் ரேடர் என்பவரையும் அந்த பாடலையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அந்தப் பாடலை அவர் இயற்றும் போது, நான் அவர் அவருடைய பாதத்தண்டை ஒரு சிறுவனாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். இந்த பாடல் தான் உலக முழுவதும் எனது கருப்பொருளை சுமந்து கொண்டு செல்கிறதை அவர் கொஞ்சம் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார் நான் ஃபோர்ட்-வேயின் என்னும் இடத்தில் பால் அந்த அறையில் முதல் இரவில் படித்துக் கொண்டிருக்கும் போது, போது அறிவிப்பு அமைப்பின் மூலமாய் அந்த பாடல் "நம்பிடுவாய் எல்லாம் கைகூடும்" என்பதை கேட்கும் போது, நான் அந்த சிறந்த கம்பீரமான தலைவனை பற்றி யோசித்தேன். எத்தனை பேர்கள் பால் ரேடரை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீகள்-? ஓ ஏறத்தாழ எல்லோரும், ஓ என்னே ஒரு வீர மரணம் அவருக்கு இருந்தது. அவர் மரணிக்கவே இல்லை. அவர் தேவனோடு இருப்பதற்காகவும் சென்றார். அவர் _ அவர் _ அவர்_............ 2. கிறிஸ்தவர்கள் மரிப்பதில்லை. வேதாகமத்தில் கிறிஸ்தவர்கள்_ கிறிஸ்தவர்கள் மரித்ததாக சொல்லப்படவில்லை. ஒரு மனிதன் சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது மரிப்பான், ஆனால் அவர்கள் வாழ்ந்துக் கொண்டிருப்பர். மரணம் என்றால் பிரிவு, தேவனிடத்தில் இருந்து பிரிவு. பாவம் செய்பவர்கள் தேவனிடத்தில் இருந்து பிரிந்து இருக்கின்றனர். ஆனால் கிறிஸ்தவர்கள் தேவனிடமிருந்து பிரிவதே இல்லை. அவர்கள் தேவனிடம் இருப்பதற்காக தங்கள் சரீரங்களை மட்டும் இங்கே விட்டு விட்டு செல்கின்றனர். மற்றும் பால்........அவர் சென்று விட்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வெட்டுவதற்கு அவர் ஒரு சிறந்த பாத்திரம். அவர் எப்படி நடந்து கொண்டார் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா, உங்களில் யாருக்காவது அவரைத் தெரியும்-? அவர் எப்போதும் வெட்டிக் கொண்டே இருந்தார். இருந்தது... அவர் எப்போதும் யாரிடமாவது ஏதாவது ஒரு சிறிய ஜோக்கை இழுப்பார். அப்போது அவர் கூறியதாவது... அவர்கள் சிறிய மூடி வேதாகம பள்ளி வைத்திருந்தனர், அங்கு அவர்கள் பாடும் ஒரு பாடகர் குழுவை வைத்திருந்தனர். அவர்கள் அந்த அறையிலே நிழல்களை இழுத்துக் கொண்டு, "உம் அண்டை தேவனே, நான் சேரட்டும்." என்று பாடிக் கொண்டிருந்தார்கள். மற்றும் பால் சுற்றி பார்த்து சொன்னார் "யார் மரித்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லுங்கள்-? நானா அல்லது நீங்களா-? அவர் சொன்னார், "அந்த திரைகளை மேலே உயர்த்துங்கள், அந்த திரைகளை உயர்த்தி அனல் பறக்கும், சில நல்ல சுவிஷேச பாடல்களை பாடுங்கள்." அதனால் அவர்கள் இந்த பாடலை பாடினார்கள், "சிலுவையின் கீழ்" மேலும் அவர் "அது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது என்று சொன்னார். 3. மற்றும் அவனுடன் இவ்வளவு காலமாக இருந்த தன்னுடைய சகோதரன் லூக்காவை தனது படுக்கைக்கு அருகில் கூப்பிட்டான். அவனுடைய கரங்களை பிடித்து சொன்னான், "லூக்கா நாம் அநேக நாட்களாய் ஒன்றாக இருந்திருக்கிறோம். ஆனால், "சற்று யோசித்து பார்: இந்நேரத்தில் இருந்து ஐந்து நிமிடங்களுக்குள் நான் இயேசுகிறிஸ்துவின் பிரசன்னத்தில் அவருடைய நீதியினால் அலங்கரிக்கப்பட்டு நின்றுக் கொண்டிப்பேன். "தலையை கவிழ்ந்து அவரை சந்திக்க புறப்பட்டான்." அவருடைய நீதியினால் உடுத்தப்பட்டு அவருடைய பிரசன்னத்தில், நின்றுக் கொண்டிருப்பேன். "எனக்கு அது போலத் தான் போக விரும்புகிறேன். உங்களுக்கும் அப்படித்தானே-? எல்லா சிறந்த மனிதர்களின் வாழ்க்கை, நமக்கு ஞாபகத்திற்கு கொண்டுவருவதை, நம் வாழ்கையை கரைந்து போக செய்யலாம் . .........அவர்கள் பிரிந்து போனாலும் , காலத்தின் மணலில் தங்கள் அடிசுவடுகளை விட்டுச் செல்கின்றனர். அது சரி அல்லவா-? நான் "வாழ்கையின் சங்கீதம் "என்னும் அந்த பாடலை நேசிக்கிறேன்" ஒரு நீண்ட கப்பல் உடைந்தது போல துயரத்தில் இருக்கும் ஒரு சகோதரன் அந்த அடிசுவடுகளை பார்க்கும் போது, மீண்டும் புத்துயிர் அடைவான். 4. இது போன்ற சிறு கவிதைகள் என்னை ஊக்குவிக்கும். கொலம்பஸ் என்பவர் இப்படி......... பாடுவார். "படகோடட்டும், படகோடட்டும், படகோடட்டும், ஓடிக்கொண்டே இருக்கட்டும்". இந்த மாதிரி ஊக்குவிக்கும் பாடல்கள் எனக்கும் பிடிக்கும். ஒரு கோழையை நான் விரும்புவதில்லை. நீங்களும் அப்படித் தானே-? பயப்படுகிறவர்கள் யாராவது இருப்பின்...... எழுந்து நிற்கவும். உங்களுக்கு பின்னால் சரியான காரியங்கள் இருக்கும் என்றால், நீங்கள் சரியென்று நினைக்கும் காரியத்திற்கு நில்லுங்கள். நிற்பதற்கு மட்டும் அல்லாமல், அதற்காக மரிக்கவும் செய்யுங்கள், அல்லது ஏதாவது செய்யுங்கள். அது சரி என்றால், அது சரி தான். மற்ற மனிதர்கள் எது சரியோ அதற்காக மரிதிருக்கிறார்கள். ஆகையால், சுவிஷேசமும் அப்படி தான். ஒருவேளை அது சரியில்லை என்றால், மற்றும் அவர் தேவ குமாரன் என்று நான் நம்பவில்லை என்றால், நான் அவருக்கு எதிர்ப்பவன் ஆவேன். நான் இங்கு அவருக்கு விரோதமாக எவ்வளவு சொல்ல முடியுமா அவ்வளவு அவருக்கு விரோதமாக சொல்லுவேன். ஏனென்றால் அது சரியானது என்று நான் நினைக்க மாட்டேன் . ஆனால் அவர் சரியாகத்தான் இருக்கிறார் என்று எனக்கு தெரியும். மற்றும் நான்...... என் முழு இருதயத்தோடும் நான் நம்புகிறேன். மற்றும் ஒருவேளை _ ஒரு பகுதி மட்டும் சரியாக உள்ளது என்றால், மற்றும் மீதம் உள்ளது சரியில்லை என்றால் அப்போது அது _ அது ஒன்றும் சரியில்லை. அது, ஒன்று, எல்லாம் சரியாக இருக்கவேண்டும், அல்லது எல்லாம் தவறாக இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாக இருக்கிறது. உங்களுடைய ஆத்துமாவை சுவிஷேசத்தின் எந்த திசையிலும் தொங்க வைத்துகொண்டு நம்பலாம்; காரணம் அதில் ஒவ்வொரு துளியும் உண்மையாக உள்ளது. மற்றும் பயப்பட வேண்டாம். நீங்கள் பயப்படுவீர்களானால் அதை செய்யாதீர்கள். ஆனால் நீங்கள் எங்கு நின்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அறிந்தீர்களானால் சரி. அது தான் வித்தியாசம். 5. நான் சற்று முன்பு அங்கு சில சகோதரர்களை சந்தித்தேன், அவர்கள். "சகோதரன் பிரன்ஹாமே, உங்களை ஏதாவது ஒரு சமயத்தில் வேட்டையாடுவதற்கு அழைத்து செல்ல விரும்புகிறோம்" என்று சொன்னார்கள். நிச்சயமாக எனக்கு பிடிக்கும், எனக்கு _ எனக்கு நான் வேட்டையாடுவதை மிகவும் நேசிக்கிறேன். அங்கு தான் நான் ஒரு சிறு பையனாக இருக்கும்போது தேவனை சந்தித்தேன். அவருடைய தன்மையில் அவரை நான் பார்த்த இருக்கிறேன். தேவனை அவருடைய தன்மையில் உங்களால் பார்க்க முடியும். மரங்களை பாருங்கள், பறவைகளை பாருங்கள், உங்களால் எதையெல்லாம் பார்க்க முடியுமோ, அவைகளில் எல்லாம் பாருங்கள். ஒரு பூவை பாருங்கள். அந்த மகா சிறந்த காலா லில்லி பூக்களை, சரியான _ சரியான மனதை உடைய எந்த மனிதனும் பார்த்து தேவன் இல்லை என்று சொல்லவே முடியாது. நான் நம்புகிறேன், நான் நம்புகிறேன், அந்த பூவை நேராக பார்த்து அந்த பூ எப்படி மரித்தும் பின் உயிரோடே ஜீவிப்பதை பார்த்தும் நம்பவில்லை என்றால், ஏதோ தவறு அந்த மனிதனுடைய உள்ளத்தில் இருக்கிறது. 6. இப்போது, ஜனங்களாகிய நீங்கள் உங்கள் வீட்டை சுற்றி அழகிய பூக்களால் வர்ணம் தீட்டுகிறீர்கள். நான் அதை நேசிக்கிறேன். இங்கு கொஞ்சம் குளிர் ஆகும் போது நான் கற்பனை செய்கிறேன். பிறகு இப்போழுதிலிருந்து சில மாதங்களுக்கு பிறகு பனி அந்த மலர் மீது மோதி, மேலும் அது தன்னுடைய தலையை கவிழ்ந்திருக்கும். மற்றும் இதழ்கள் எல்லாம் அந்தப் பூவில் இருந்து கீழே விழுந்து விடும். மற்றும் இலைகள் எல்லாம் அதின் தண்டிலிருந்து உதிர்ந்துவிடும், மேலும் அந்த பூவிலிருந்து ஒரு கருப்பு நிற விதை கீழே விழும். அதற்கு பிறகு அவர்களுக்கு ஒரு சவ ஊர்வலம் நடக்கும். கர்த்தர் ஒரு அடக்க ஆராதனையை கொண்டு வருவார், மேலும் இலை உதிர்காலத்தில் ஒரு பெரிய மேகத்தை கீழே கொண்டு வருவார். மற்றும் அது கண்ணீர் விடும் போது மேலும் மழை நீர் கீழே விழும் போது அந்த சிறு விதையை தரையின் ஆழத்தில் அடக்கம் செய்யும். அடுத்து அந்த உறையும் பனி கீழே வந்து ஆறு அல்லது எட்டு அங்குலம் (inch) வரை அது உறைந்து இருக்கும். அந்த சிறிய பழைய விதை வீங்க ஆரம்பிக்கும், பின் அது உறையும். மேலும் அது வெடித்து திறக்கும். அதில் உள்ள சத்து வெளிய வரும். பின்பு அந்த வறட்சியான பனிக்கால மாதங்கள் வரும். 7. நல்லது, நீங்கள் போய் உங்களுடைய பூவை பாருங்கள், அங்கு அதனுடைய கிழங்கு எல்லாம் காய்ந்த மறைந்து போயிருக்கும், அதன் தண்டு போய்விட்டு இருக்கும், அதன் பூ, சென்று விட்டிருக்கும், இதழ்கள், விதைகள் எல்லாம் சென்று விட்டு இருக்கும். அது வெடித்து விட்டது. சத்து போய் விட்டது. எல்லாம் போய்விட்டது. அது தான் அந்தப் பூவின் முடிவா-? இல்லை பாருங்கள், கொஞ்சம் அந்த சூரிய வெப்பம் அந்த தரையை குளிப்பாட்டும் போது, அதில் உள்ள ஜீவன் மனிதன் பார்க்காத அளவிற்கு எங்கேயோ மறைந்து இருக்கிறது. அந்த பூ மீண்டும் ஜீவிக்கும். மேலும் தேவன் ஒரு பூ விற்கு மீண்டும் வாழ்வதற்கு ஒரு வழி வகுத்திருப்பாரானால், தம்முடைய சாயலில் படைத்த உங்களையும், என்னையும் பற்றி என்ன-? எவ்வளவு அதிகமாக நாம் மீண்டும் வாழுவோம்.-? 8. சமீபத்தில் நான் ஒரு மனிதனோடு ஒரு சிற்றுண்டியில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் போது, "வேளாண்மை நேரம்" என்னும் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது, அதை கேட்டு கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் சோள விதையை செயற்கை மூலமாக பூரணப்படுத்தி இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். விஞ்ஞானிகள் அவ்வளவு சிறந்தவர்கள் அதை ஒரு இயந்திரத்தின் மூலமாக செய்திருக்கின்றனர், மேலும் ஒரு தானியத்திற்கும் இன்னொரு தானியதிற்கும் ஒரு வித்தியாசமும் பார்க்க முடியாது. ஒரு மூட்டை சோளம் இங்கே கொண்டு வந்து, ஒரு கைநிறைய அந்த உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்த சோளத்தையும், வயல் வெளியில் வளர்ந்த சோளத்தையும், கவனிப்பீர்கள் என்றால், இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாது. இரண்டையும் கலந்து விடுங்கள், உங்களால் அவைகளை பிரிக்க முடியாது. ஒரு ஆராய்ச்சி கூடத்திற்கு கொண்டு சென்று அதை பரிசோதிப்பீர்கள் என்றால், இரண்டிலும் அதே அளவு கால்சியம், ஈரப்பசை மற்றும் அது போன்ற காரியங்கள் எல்லாம் ஒரே அளவு தான் இருக்கும். ஆனால் சொன்னால், "ஒரே வழியில் மட்டும் தான் வித்தியாசத்தை சொல்ல முடியும், அது, அவைகளை நிலத்தில் புதைத்து வைக்கவேண்டும்." மற்றும் சொன்னார் மனிதனால் செய்யப்பட்டது இல்லாமல் போய் விட்டது, ஆனால் தேவன் உயர்த்தின சோள செடி மீண்டும் வளர்ந்தது. மேலும் அந்த வயதான மெத்தடிஸ்ட் ஊழியக்காரரிடம் நான் சொன்னேன், "நீங்கள் என் கரங்களை பிடித்துக் கொள்ளவும், ஏனென்றால் ஒரு வேளை நான் உங்களை இங்கே, சங்கடத்திற்குள் ஆக்கிவிடுவேன். ஏனென்றால் ஒரு வேளை இங்கு இரண்டு மனிதர்கள் இருக்கலாம். இரண்டு பேரும் ஒன்று போல இருக்கலாம் மற்றும் இரண்டு பேரும் .....இரண்டு பேரும் ஆண்களாகவே இருக்கலாம். இரண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் இரத்தம் கொடுக்கலாம். ஆனால் ஒருவரிடம், இயேசு கிறிஸ்துவை ஏற்றுகொண்டதின் நிமித்தம் ஜீவனை கொடுக்கும் வாழ்க்கை இருக்கும், மற்றவனோ பாவத்தில் மரித்து கடந்து செல்கிறான். கர்த்தர் ஒரு வழியை தந்துள்ளார், நாம் மட்டும் அந்த வழியில் உட்பிரவேசித்து அவர் வழியில் பயணிப்போம் என்றால், நிச்சியமாக கரை சேர்வோம். அது சரி என்று நினைக்கிறீர்கள் அல்லவா.-? 9. இப்போது, இன்று மதியம் நான் கொஞ்சம் தாமதமாக வந்துள்ளேன். நான் வழக்கமாக கால் மணி நேரம் கழித்து தொடங்குவேன் என்று நினைக்கிறேன். மற்றும் சகோதரன் பாக்ஸ்டர்... என் மனைவியிடம் இருந்து ஒரு குறிப்பை கேள்விப்பட்டேன், அவர் சொன்னதாக, நான் ஒரு பிரசங்கியார் என்று அவள் சொன்னாள். இப்போது நான் முதலாவது என்ன சொல்கிறேன் என்றால், அது தவறு . நான் அப்படியில்லை. நான் யார் என்றால், மாற்று சக்கரம் என சொல்லப்படும் அது தான். ஒரு மாற்று சக்கரம் எதற்கு உபயோகிப்பார்கள் என்று தெரியுமா-? ஒரு டையர் பஞ்சர் ஆகிவிட்டால், அப்போது ஒரு மாற்று சக்கரம் இணைத்து செயல்பட செய்வர். இப்போது, நாங்கள் பஞ்சர் ஆகி விட்டோம் என்பதாக நான் அர்த்தம் கொள்ளவில்லை. சகோதரன் பாஸ்டர், நான் அப்படி அர்த்தம் கொள்ளவில்லை. ஹா-ஹா-ஹா. நான் செய்யவில்லை- நான் செய்யவில்லை... அதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்காக அவர் என்னை அழைத்து வருவார். ஆனால் என் கருத்தை வெளிக்கொண்டு வரவே நான் இதைச் சொன்னேன், அதைப் பற்றித் தான் நான் பேசுகிறேன். அவர் அங்கு நான் சொல்வதைக் கேட்கிறார் என்று நினைக்கிறேன். சரி தான். எங்களுக்கு ஒரு பிளாட் இருப்பதாக நான் சொல்லவில்லை; ஏனென்றால் நாங்கள் இல்லை. ஆனால் ஒரு மாற்று சக்கரம் என்பது உங்களிடம் ஒரு பிளாட் இருக்கும் போது, நீங்கள் உருட்ட முடியும். ஆனால் அது ஓய்வு நேரத்தில் தான். 10. மற்றும் பொதுவாக ஞாயிற்றுக்கிழமை மதியம் சகோதரன் பாக்ஸர் என்னை கீழே கொண்டு வந்து, எனது வாழ்க்கை சுய கதையை பற்றி சொல்லவோ, அல்லது நம்முடைய தேவனை பற்றி பேசவோ, கொண்டு வருவார். மற்றும் அது எனக்கு ஒரு விடுதலையை கொடுக்கும். இப்போது, நீங்கள் பிரசங்கிக்கும் போது... ஏன் நான் ஒரு நாள் முழுவதும், இரவும் பகலும் பிரசங்கிக்க முடியும், அது என்னை காயப்படுத்தாது. அது என்னை ஒரு துளி அளவு கூட கஷ்டப்படுத்தாது. ஆனால் ஒரு சுகம் அளிக்கும் நபர் எனக்கு இருப்பார் என்றால், அல்லது ஒரு வெளிப்பாடு அதற்கு முன்பாக இருக்கும் என்றால், அது என்னுடைய பலத்தை எட்டு மணி நேரம் பிரசங்கிப்பதை காட்டிலும் அதிகமாக இழுத்து விடும். பாருங்கள் அது உங்களுடைய வாழ்க்கையை, உங்களிடம் இருந்து அப்படியே கிழித்து விடும். பாருங்கள். நீங்கள் பிரசங்கிக்கும் போது நீங்கள் கட்டியெழுப்புகிறீர்கள். மற்றும் இது வரும்போது, அது கீழே இறங்குகிறது, பாருங்கள், இரண்டுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. 11. நண்பர்களே இதைப் பற்றி எல்லாம் விவரிப்பதற்கு எனக்கு தேவை இல்லை. நான் எவ்வளவுக்கு எவ்வளவு இதைப்பற்றி விவரிக்க முயற்சிப்பேன் என்றாலும் அதை உங்களுக்கு விவரிக்க முடியாது. ஆகையால் சற்று புரிந்து கொள்ளுங்கள், (பாருங்கள்) சற்று என்னை நம்புங்கள். அதுதான் _ அதுதான் ஏதோ ஒன்று உங்களிடம் இருந்து உங்களுடைய ஜீவனை அப்படியே எடுத்த விடும். ஒரு முறை இயேசு, அந்தப் படகில் அலைகள் அடித்து கொண்டிருக்கும் போது அவர்களோடு எப்படி படுத்திருந்தார் என்று ஆச்சரியபடுவதுண்டு. புயல் அடித்துக் கொண்டிருக்கும் போது எப்படி அவரால் அறியாமல் இருக்க முடியும். ஆனால் நான் ஞாபகப்படுத்திக் கொள்கிறேன், அவர் ஒரு நாள் முழுவதும், ஜனங்களை சுகப்படுத்துவதும், வெளிப்பாடுகளை கண்டறிவதினால் பலம் அவரை விட்டு சென்று கொண்டிருந்தது, மற்றும் _ மற்றும் அது சற்று .......மிகவும் அவரை சோர்வுக்குள் ஆக்கியது. அவரால் எழும்பவே முடியவில்லை. ஆகையால் அது _ அதுவாக தான் இருந்தது. மற்றும் அவர்கள் அவரிடம் வந்து அவரை எழுப்ப வேண்டியதாக இருந்தது. 12. அது போகட்டும், ஒரு போதகர் இன்று காலை என்னிடம் சொன்னார் சகோதரன் பிரன்ஹாமே, நான் உங்களை ஒரு காரியத்தில் திருத்த விரும்புகிறேன். அது எல்லாம் சரி, நான் அதை பெற்றுக் கொள்ள சந்தோஷமாய் இருக்கிறேன். எப்போது... யாராவது ஒருத்தர் எனக்கு உதவி செய்யும் போது, மற்றும் _ அல்லது ஏதாவது சொல்லும் போது. அவர் சொன்னார், "இரவு நேரங்களில் நீங்கள் ஜனங்களிடம், நான் உங்களை பற்றி நினைவாய் இருக்கிறேன் என்று சொல்லுகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன், சிலர் இது மனோதத்துவ முறையில் உள்ளத்தை வாசிப்பதாக உள்ளது என்று சொல்கிறார்கள் என்றார்." ஆனால் சொன்னார், "நீங்கள் அவர்களிடம் சென்று, வருடக்கணக்கில் அவர்கள் நினைத்துக்கூட பார்க்காத காரியங்களை நீங்கள் சொல்லுகிறீர்கள். இப்படி சொல்ல உங்கள் தலையில் என்ன தட்டிகொண்டிருக்கிறது "அவர் சொன்னார்" அப்போது அவர்களுக்கு அது .......மற்றும் அவர் சொன்னது, அது உள்ளத்தை வாசிப்பதாக உள்ளது சகோதரன் பிரான்ஹாம் என்று சொன்னார். மற்றும் நான் சொன்னேன், "நல்லது, நான்.........." அவர், "உங்களுக்கு தெரியுமா அந்த ஜனங்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சொன்னார்." நான் சொன்னேன் "ஆமாம் " ஐயா அவர் சொன்னார், "நான் வேதாகமத்தில் இருந்து உங்களுக்கு கொடுக்கிறேன். இயேசு அவர்கள் எண்ணங்களை அறிந்தார்" தெரியும், அது ஒரு... பாருங்கள் நான் என்ன அர்த்தம் கொள்கிறேன் என்று அவருக்கு தெரியும்-? 13. அவருக்கு அவர்கள் எண்ணங்களை தெரியும். அவர் அறிகிறார், அது சரி தானே-? நல்லது, நான் என்ன பேசுகிறேன் என்று உங்களுக்கு தெரியுமா-? அப்படி இல்லையா-? இயேசு அவர்கள் சிந்தனையை அறிந்திருந்தார். அவருக்கு அவர்கள் என்ன.... அவர்கள் சொன்னார்கள்... அவர் சொன்னார், "உங்கள் இருதயதிற்குள் என்ன தீர்மானிக்கிறீர்கள், உங்களில் யார் பெரியவர் என்றா அல்லது அது போலவா-?" மற்றும் அதற்கு பிறகு அவர்கள், "இந்த மனிதன் அவதூறு சொல்கிறான், " என்று சொன்னார்கள்....... அவர் சொன்னார்.....அவர்கள் எண்ணங்களை அறிந்திருந்தார், மேலும் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். மற்றும் அவர் சொன்னார், "உன் பாவங்கள் மன்னிக்கபட்டது என்று சொல்வது எளிதா, அல்லது உன் படுக்கையை எடுத்து கொண்டு நட என்று சொல்வது எளிதா." பாருங்கள்-? எது எளிதா-? பாருங்கள்-? அவர்... ஆகையால் அது அவர் தான். அது மனிதன் அல்ல. அது கிறிஸ்து ஆகையால் அவர் மேல் விசுவாசம் வையுங்கள். அவரை நம்புங்கள். 14. இந்த சின்ன......... ஞாபகத்திற்கு வருகிறது. இந்த மேடையிலிருந்து சிரிப்பூட்டும் காரியங்களை பேசுவது எனக்கு பிடிக்காது, ஏனென்றால் இது சிரிபூட்டுவதற்கான இடமில்லை. மேலும் இது சிரிப்புக்குரிய காரியம் என்று நீங்கள் எண்ணுவது எனக்கு பிரியம் இல்லை. காரணம் இந்த மேடையில் இருந்து அதை நம்புவதில்லை. இது ........ நீங்கள் அறிந்திருக்கிர ஒரு சிறிய காரியம். இது, நான் முதல் முறை ஒரு பாப்டிஸ்ட் பாஸ்டர் ஆக அபிஷேகம் பண்ணப்பட்ட போது அந்த வேதாகமத்தை பெற்று கொள்ள மிகவும் விருப்பபட்டேன். மேலும் எங்கெல்லாம் சென்றேனோ அங்கெல்லாம் தூக்கிக் கொண்டு செல்வேன். காரணம் அதற்கு முன்னால் ஒரு கூச்சத்தன்மையுள்ள, தைரியம் இல்லாத மனிதரை தவிர யாரும் யாரும் வேதாகமத்தை எடுத்து செல்வதில்லை என்று நினைத்தேன். மற்றும், அதனால்........ என் காது ஒரு முறை அடிபடும் வரைக்கும், நான் எல்லோரிடமும் குத்து சண்டையில் ஈடுபடுவேன். நான் த்ரி ஃபால்ஸ் சிட்டீஸ் உடைய பாட்டம்வெய்ட் சாம்பியன்ஷிப் (Bantamweight Championship of the Three Falls Cities) என்று சொல்ல கூடிய ஒரு விருதை ஒரு போட்டியில் வென்றேன். மேலும் நான் நினைத்தேன், ஒருவரும் என்னை சாட்டையால் அடிக்க மாட்டார்கள். மற்றும் வெஸ்ட் விர்ஜினியா என்னும் மாகானத்தில், ஹங்கின்ஸ்டன் என்னும் இடத்தில் இருந்து, ஒரு சிறு பையன் பில்லி பிரிக் ஒரு இரவு என்னை கொல்ல வேண்டும் என்று இருந்தான். ஆகையால் அது என்னிடத்திலிருந்து எல்லாவற்றையும் எடுத்து விட்டது. ஆனால் எனக்கு பதினைந்து... சண்டைகள் இருந்தது, அவை எல்லாவற்றையும் வென்றேன். ஆகையால் அவன் நிச்சயமாக இன்னும் ஒரு சண்டைக்கு ஏற்பாடு பண்ணினான். ஹா. 15. ஆகையால் அந்த நாட்களில் நான் சொல்வதும், நினைப்பதும் என்னவென்றால், "நல்லது, ஒரு போதகர். ஒரு போதர் என்றால் தைரியம் இல்லாத கூச்சத்தன்மை உள்ளவர் என்று. மேலும் ஏதோ ஒரு நாள் நான் போதிக்க வேண்டும் என்று நினைப்பேன். மேலும் அது தான் உள்ளதிலேயே மிக பெரிய தைரியமற்ற கூச்ச தன்மை வாய்ந்த போதகனாய் இருக்கும் என்று நினைப்பேன். மேலும் நான் இரட்சிக்கபட்ட பிறகு ஓ என்ன ஒரு காரியம், நான் வேதாகமத்தை தூக்கி செல்ல விரும்பினேன். மற்றும் யாரிடமாகிலும், நான் ஒரு போதகர், ஒரு பிரசங்கியார் என்று சொல்ல விரும்புவேன். மற்றும் அந்த உள்ளூர் மிஷனரி பாப்டிஸ்ட் ஆலயம்.. ஆலோசகர் என்னும் ஒரு அனுமதியை எனக்கு கொடுத்து, இந்தியானா மாநிலத்திற்கு விவாகம் செய்து வைப்பதற்கும், அடக்கம் செய்வதற்கும், ஞானஸ்நானம் கொடுப்பதற்கும், அல்லது அது போல மற்ற காரியங்கள் செய்வதற்கும் லைசென்ஸ் கொடுத்தது. மற்றும் நான், "ஓ, என்ன ஒரு அற்புதம்" என்று நினைத்தேன். யாராவது ஒருவர், "நீங்கள் ஒரு பிரசங்கியாரா-?" என்று கேட்பார். நான் சொல்லுவேன், "ஆமாம் ஐயா, ஆமாம் ஐயா. "நான் பிரசங்கியார் என்று சொல்வதற்கு சந்தோஷம் அடைகிறேன். 16. மற்றும் எனக்கு ஞாபகதிற்கு வருகிறது .......எனது அப்பா சவாரி செய்பவர், மற்றும் அவர் நன்றாக சுடுபவர். அவர் படங்களை தொடர்ந்து பார்ப்பார். மேலும் அவர் துப்பாக்கியை எடுப்பார், நான் பார்த்த மட்டில் அவர் தான் சிறந்த துப்பாக்கி சுடுபவர். அவர் அந்த பெரிய கோலிகளை எடுத்து, மேலும் அதில் ஒன்றை எடுத்து இது போல அதை உருள விடுவார், மேலும் அது நின்ற உடனே அவரிடம் இரண்டு துப்பாக்கி இருக்கும். அதில் ஒரு துப்பாக்கி எடுத்து, அதை சுடுவார், அந்த கோலி பறந்து ஆகாயத்தில் இருக்கும் போது அதை வெடிக்க செய்து, அது கீழே தரையில் விழுவதற்கு முன், மற்றொரு துப்பாக்கியால், அதை வெடிக்க செய்வார். நான்கு அடிக்கு முன்னாள் வைக்கப்பட்ட பண்ணி கொழுப்பு நிறைந்த பாத்திரத்தை அடிக்க முடியவில்லை. ஆகையால் நான் என் அப்பாவை போல இருப்பதற்கு வெகு தூரத்திற்கு பின்னால் உள்ளேன். ஆனால் அவர் சவாரி செய்ய விரும்பினார். மேலும் குதிரைகளை வசப்படுத்துவார். அங்கு தான் அந்த... என் அம்மா அவரை சந்தித்தார்கள். ஓக்லஹோமா என்னும் இடத்தில் அவர் குதிரைகளை உடைத்துக் கொண்டிருந்தார். மேலும் அவர் ஒரு சிறந்த சவாரி செய்பவர். ஆகையால் நான் எப்போது... சொன்னால்," நான் வளர்ந்து ஆளாகும் போது, என் அப்பாவை போல தான் இருப்பேன், நான் ஒரு உண்மையான குதிரையை பழக்கப் படுத்துபவன் ஆவேன்." 17. மேலும் நான்.......இப்படி செய்வது ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு நாள் முழுவதும் ஏர் உழுது விட்டு, அந்த பழைய குதிரை மிகவும் களைபுற்று காணப்படும். நான் அதை பிடித்து விடுவேன். அது மிகவும் வயது சென்று விட்டது. அந்த பழைய தண்ணீர் பாய்ச்சும் பாத்திரம் ஒரு துண்டு பலகையில் ஓட்டை போட்டதாக இருக்கும். எத்தனை பேர் அந்த பழைய தண்ணீர் பாய்ச்சும் பாத்திரத்தை பார்த்திருக்கிறீர்கள்-? இன்றைக்கு ஒரு கூட்ட தென்னகத்தினர்கள் இங்குள்ளனர். ஒரு வைக்கோல் படுக்கையில் எத்தனை பேர் படுத்து இருக்கிறீர்கள். நான் ஒருவன் மாத்திரம் இங்கே நாட்டுப்புற பையன் இல்லை என்கிறேன், அப்படித் தானே. இல்லை, என்னே ஒரு-! அது, அமெரிக்காவில்-! அது மற்றும் சோள வெல்லம் போல இருக்கும் அப்படித்தானே-? இப்போது, நாங்கள் அந்த கொட்டகைக்கு பின்னால் போய் இருப்போம். மற்றும் _ மற்றும் அந்தப் பழைய குதிரைக்கு நான் தண்ணீர் வார்பேன், மற்றும் என்னுடைய சிறிய தம்பிமார்கள் எல்லாரையும் வரிசையாக நிற்க வைப்பேன். மற்றும் நான் தான் அவர்கள் எல்லாரையும் காட்டிலும் மூத்தவன். மேலும் அந்த பழைய குதிரை மேலே ஏறிக்கொண்டு அப்பாவின் சேணத்தை எடுத்துகொண்டு, ஒரு கை நிறைய ஊமத்தம் செடியை சேணத்தின் அடியில் போட்டு விட்டு, உங்களுக்கு தெரியுமா, அதை அப்படியே கீழே இழுத்து, குதிரை மேல் ஏறுவேன் . அந்த வயதான குதிரை மிகவும் சோர்வுற்று இருக்கும். உங்களுக்கு தெரியுமா, அது இரைந்து கிட்டே இருக்கும். தலையை கீழே போட்டுகொண்டு இரைந்துகிட்டே இருக்கும். மற்றும் அவன் இரண்டு முன் கால்களை மேலே தூக்கிகொண்டு இறுக நிற்க முயற்சிப்பான். மற்றும் அவன் அதிக இறுக நிற்பான். அவனால் முடியாது, அவன் அதிக களைப்பாய் இருப்பான். மேலும் அவனுக்கு அவன் கால்களை தரையிலிருந்து மேலே தூக்க முடியாது, உங்களுக்கு தெரியுமா. மேலும் நான் இந்த வைக்கோல் தொப்பியை எடுத்து இங்கும் அங்குமாக அசைப்பேன். தொப்பியை அந்த குதிரையை சுற்றி சுற்றிக்கொண்டு, நான், ஒரு உண்மையான, மாட்டுக்கார பையன் என்று நினைத்தேன். மற்றும்............ 18. ஒரு நாள், நான் மேற்குக்கு செல்ல தீர்மானித்தேன். மேலும் நான் வீட்டில் இருந்து ஓடி விட்டேன். அரிசோனாவிற்கு சென்று விட்டேன். குதிரை பந்தயம் நடக்கும் இடத்தில் சேர்ந்தேன். ஆகையால் நான் நினைத்தேன், "இப்போது தான் சரியான நேரம், நான்_ நான் உண்மையாகவே ஒரு கௌபாய் ஆக ஆவேன். "இப்போது தான் என்னுடைய அப்பாவிடம் இருந்து என்னிடம் வந்துள்ளது. "நான் இருப்பேன்னு எனக்குத் தெரியும்..." என்றேன். குழந்தைகள் எப்படி இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியுமா-? பதினெட்டு வயதாய் இருக்கும் போது, நான் சொன்னேன் "நான் கீழே சென்று ஒரு ஜோடி கால்களுக்கு போடும் தோல் காலணிகளை வாங்கி கொண்டு வருகிறேன்" மேலும் நான் ஒரு அழகான ஜோடி பூட்ஸ்களை நான் பார்த்தேன், நான் நினைத்தேன்... அவைகளை அணிந்தும் பார்த்தேன். அவைகளை சுமார் 18 இன்ச் நீளம் தரையில் நீண்டிருப்பதை பார்த்தேன். நான் சொன்னேன், "இந்தியானாவில் இருப்பதைக் காட்டிலும், இங்கே நீளமான காலணிகள் தான் உள்ளது" என்றேன். ஆகையால் நான் எனக்கு ஒரு ஜோடி ஜீன்ஸ் பேண்ட் வாங்கிக் கொண்டேன். மற்றும் நான் வெளியே சென்றேன், அவர்கள் என்னை சரிவு கால்வாய் வழியே வர சொன்னார்கள். மற்றும் அவர்கள்... அந்த அழைப்பர் சென்று ஒரு குதிரையை கொண்டு வந்தார். அவைகளை பிரான்க் என்னும் அரைகுறையாக பழக்கப்பட்ட காட்டு குதிரையை கொண்டு வந்தார்கள். அவைகள் அவ்வளவு காட்டுதனம் வாய்ந்தவைகள். ஆகையால், அவைகளுக்கு முன்னாள் வைக்கோல் போட்டாலும் அவைகள் சாப்பிடாது. மேலும் அவைகளை அந்த சரிவு கால்வாய் வழியாக ஓட வைப்பார்கள். ஒரு காளை தான் துவக்கி வைக்கும். மேலும் அவர்கள் வெளியே வரும் போது நீங்கள் சென்று அவைகளை பிடித்துக் கொள்ள வேண்டும், அவைகள் வெளியே வரும் போது அதில் ஒன்றை நான் பார்த்தேன். அவைகள் அந்த பழைய நிலத்தை உழும் குதிரைகள் அல்ல என்று உணர்ந்தேன். 19. நான் அவைகள் மேல் சவாரி செய்து, கொஞ்சம் பணம் சம்பாதிப்பேன். உங்களுக்கு தெரியும். மேலும் நான் அங்கு சென்று அந்த கிளிஞ்சல்களால் செய்யப்பட்ட வேலியின் மேல், அந்த மாறுபட்ட உருவத்தோடு இருந்த மாட்டிடையான் பையன்களோடு நின்றேன். கால்கள் வளைந்து... அவர்கள் கால்கள் வளைந்து, காற்று, மழை, வெய்யிலால் தாக்குண்ட மாட்டிடையான்கள். மற்றும் நான் ஒரு சிறு பையன்,, உங்களுக்கு தெரியுமா, நான் அங்கு. உட்கார்ந்து கொண்டு அவர்கள் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தேன். "அவர்கள் போலவே நானும் இருப்பேன் போல" என்று அவர்களை பார்த்துக் கொண்டே நினைத்தேன்" ஆகையால் இது....அந்த கூப்பிடுபவர் தொடர்ந்து சொன்னார்..... குதிரை இப்பொழுது சவாரி செய்யப் போகிறது. யாரோ ஒரு ஆள் அதை சவாரி செய்வார். மேலும் அவன் இங்கே நிற்கிறான், மற்றும் அவன் மேல் சேணம் பூட்டப்படவில்லை. அவன் சரிவு கால்வாய் வழியாக வரும் போது, அவனைப் பிடித்துக் கொள்ளுங்கள். மற்றும் அந்த குதிரை கடந்து செல்லும் போது, அவன் அந்த சேணத்துக்குள் சென்றான். நான் அந்த குதிரையை பார்த்தேன், அது சைடு வழியாக இரண்டு முறை குலுங்கி... மற்றும் அது அதை செய்தவுடன் அந்த மனிதனை தலை கீழாக தூக்கி வாரி போட்டது. அவன் தரையில் விழுந்தான், மற்றும் இரத்தம் காது, மூக்கு வழியாக வந்தது. வண்டி அந்த குதிரையை எடுத்து சென்றது, ஆம்புலன்ஸ் அந்த மனிதனை எடுத்து சென்றது. 20. இதோ அந்த கூப்பிடும் ஆள், கீழே சென்று சொன்னார், "60 நொடிகள் இந்த குதிரை மீது சவாரி செய்பவருக்கு நான் 50 டாலர் தருவேன்" என்று கூறினார். அவனை பிடித்தார்கள், எல்லோரும் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். அவன் நேரே என்னிடம் வந்து சொன்னான், "நீங்கள் ஒரு சவாரி செய்பவரா-?" என்று கேட்டான். நான் சொன்னேன் "இல்லை ஐயா." சொன்னேன். "இல்லை ஐயா." அது போல தான் நான் இரட்சிக்கப்பட்ட போது, வேதாகமத்தை அடியில்... நான் அந்த வட்டாரத்தின் பாப்டிஸ்ட் போதகர் என்றும் " நான் ஒரு பிரசங்கியார் " என்றும் சொன்னேன். மற்றும் ஒரு நாள் நான் தூய லூயிஸ் என்னும் இடத்தில் கூடார கூட்டம் ஒன்றில் இருந்தேன். அங்கு ஒரு டாட்ரி (Daugherty) என்னும் பரிசுத்த போதகர் இருந்தார். மற்றும் அவர் பெந்தேகோஸ்தே போதகர். மேலும் நான், அவர் போதகத்தை கேட்க மேலே சென்றேன். மற்றும் அவருடைய சிறு பெண் பிள்ளையை அழைத்தனர். மற்றும் அது... அவளுடைய கதையை நீங்கள் கேட்டு இருக்கிறீர்களா-? அவள் தான் முதலில் சேயின்ட் விட்டஸ் டான்ஸ் (saint vitus dance) என்னும் ஒரு கொடிய நரம்பு தளர்ச்சி நோயிலிருந்து சுகம் பெற்றவள். அந்த போதகர் அந்த கூட்டத்தில் இருந்தார், மேலும் அவர் பிராசங்கிக்க ஆரம்பித்தார், ஒரு செய்தியை கொடுத்தார். அவர் முகம் நெருப்பு போல் ஆகும் வரை அவர் செய்தியை கொடுத்துக் கொண்டே இருந்தார். அவர் மிகவும் தளர்ந்து பெலவீனம் ஆகி, முழங்கால்களை மடக்கி தரையில் விழுந்தும், பிரசங்கித்து கொண்டே இருந்தார். பின் மீண்டும் எழுந்து, தனது மூச்சியை பிடிப்பார். அவர் பிரசங்கிக்கும் தொனியானது நான்கு அல்லது ஐந்து வீடுகள் தள்ளி தெருவில் கேட்கும். யாரோ ஒருவர் சுற்றி நடந்து சொன்னார் "நீங்கள் ஒரு பிரசங்கியார் தானே-?" நான் சொன்னேன், "இல்லை ஐயா." ஹ_ ஹ _ஹ "இல்லை ஐயா." என்னுடைய பழைய, பாப்டிஸ்ட் வழியாக, மெதுவாக பிரசங்கிப்பது அவ்வளவு வேகமாக செல்லாது. அவ்வளவு தான். ஆகையால் என்னால் அப்படி செய்ய முடியாது. 21. ஆனால் நான் ஞாயிற்று கிழமை மதியம், இது போல கூட்டங்களில், அந்த அபிஷேகத்தின் கீழ் இல்லாமல், வார்த்தையை மட்டும் பேசி மற்றும் அந்த.... கீழ் இல்லாமல் பிரசங்கிப்பேன். பாருங்கள், இரவில் உங்கள் நரம்புகள் எவ்வளவு அழுத்தத்திற்குள் ஆகும் என்று ஆச்சரியபடுவீர்கள். அது போல தான், சாத்தானின் வல்லமை அசைவாடி கொண்டு இருக்கிறது, காரியங்கள்... நீங்கள் முன்னதாக இருந்த கூட்டங்களில் நடந்ததை பார்த்து இருப்பீர்கள். உங்களை விமர்சிப்பவர் மேலே ஓடி வருவார், அல்லது ஏதாகிலும் அது போல சொல்லுவார். நீங்கள் அந்த குறிப்புக்கு சரியாக இருக்க வேண்டும். ஒரு தவறான வார்த்தை போதும் எல்லாவற்றையும் எடுத்து விடும். இங்கே யாரோ ஒருவர் அந்த மனிதனை போல இந்த மேடையில், சில வாரங்களுக்கு முன் வந்தார், மற்றும் அவர் சொன்னார்... நான் அப்படியே எங்கோ போய்விட்டேன். நான் அவர் கரங்களை பிடித்தேன், ஒரு வெளிப்பாட்டை காண முயற்சிக்காமல் வெறும் கைகளை மட்டும் பிடித்து ஜெபம் செயல்லாம் என்று நினைத்தேன். அவர் என்னுடைய கரங்கள் மீது அப்படியே அவர் கரத்தை வைத்தார். மேலும் நான் சொன்னேன், "நல்லது ஐயா, உங்களுக்கு சரீர பிரகாரமாக எந்த பிரச்சனையும் இல்லை" என்று நான் சொன்னேன். அவர் சொன்னார் "ஓ ஆமாம், எனக்கு உண்டு." மற்றும் நான் சொன்னேன் "இல்லை ஐயா, மீண்டும் பார்ப்போம்." நான் அவர் கரங்களை பிடித்தேன். அது ஒரு கிருமி நோயாக இருந்தால், உடனே தொற்றிவிடும். நான் சொன்னேன் "இல்லை ஐயா அங்கு ஒன்றுமே இல்லை......." "என்னுடைய ஜெப அட்டையை பாருங்கள்."என்று சொன்னார். நான் சொன்னேன், "உங்கள் ஜெப அட்டையில் நீங்கள் என்ன எழுதி இருக்கிறீர்களோ, அதைப்பற்றி, ஒன்றுமே இல்லை ஐயா." நான் சொன்னேன்" இங்கிருக்கும் இந்த ஒரே காரியத்துக்கு தான் நான் பொறுப்பு." அவர் சொன்னார்... மற்றும், அந்த சகோதரன், ஜெப அட்டையை கொண்டு வந்து வாசித்தார். அவர் சொன்னார் அவருக்கு காச நோய் இருக்கிறது என்று. எனக்கோ அது பற்றின எல்லா காரியங்களும் மறந்து விட்டது. நான் சொன்னேன், "இல்லை ஐயா உங்களுக்கு அது இல்லை." நான் சொன்னேன், "இப்போது, நீங்கள் அந்த அரங்கத்தினரோடு இருக்கும் போது விசுவாசம் இருந்தது அதனால் இந்த மேடைக்கு வரும் முன் இருந்து இருக்கலாம். நீங்கள் சுகம் பெற்றுவிட்டீர்கள். பின்பு அவர் அந்த, 8500 ஜனங்களிடம் திரும்பி, "அங்கே தான் நீங்கள், அங்கு தான் காரியம் நடந்தது. என்னுடைய சிறந்த விசுவாசம் அங்கே தான் இருந்தது. 22. மற்றும், நான் சுற்றி நின்று பார்க்கும் போது, ஏதோ ஒன்று வெண்மையான நிறத்தில் என் முன் அசைவாடினது. அதோ, அங்கே தான் அது இருந்தது. நான் சொன்னேன், "பிசாசின் மகனாகிய நீ, ஏன் இந்த நடை மேடையின் மீது வந்து தேவனை வஞ்சிக்கிராய்-? நீ வெளிப்படுத்தப்பட்டாய். நேற்று இரவு நீ ஒரு சாம்பல் நிற சூட்டும், சிகப்பு நிற டை அணிந்த ஒரு மனிதனோடு ஒரு மேஜை அருகில் உட்கார்ந்து இருந்தீர்கள். மற்றும் நீ ஒரு குறிப்பிட்ட... சேர்ந்தவன். "நல்லது, நான் அந்த ஆலயத்தை பற்றி சொல்ல விரும்பவில்லை," ஆனால் எப்படி ஆயினும்... " நீ ஒரு குறிப்பிட்ட சபையை சேர்ந்தவன். மற்றும் நீங்கள் இரண்டு பேரும் நேற்று இரவு ஒன்று சேர்ந்து, இங்கு வருவதாக சொல்லி இருந்தீர்கள். மற்றும் அது மனோவசியத்தால் உள்ளதை அறிகிறீர்கள். அதாவது அந்த மனிதன் ஜெப அட்டையை எடுப்பதாகவும் மற்றும் அந்த நோயாளி அந்த ஜெப அட்டையை வைத்துக் கொள்வதாகவும் இருக்கிறது." "நீ நினைக்கிறாயா அந்த நோயாளி, அவர்களுடைய விபசாரங்களையும், மேலும் அவர்கள் வாழும் முறையையும் அது போல அட்டையில் போடுவார்கள் என்று நான் சொன்னேன்." மற்றும் அது மனோதத்துவ தொடர்பு என்று நினைக்கிறாயா-? அவர்கள் ஜெப அட்டையை எடுத்து, மேலும் அதை என்னிடம் மனோவசியம் மூலமாய் அனுப்பி வைப்பார்கள் " என்று நினக்கின்றாயோ-? " நான் சொன்னேன் "அது ............-?........…" 23. மற்றும் ஒரு மனிதன் அரங்கத்தினர்களிலிருந்து உரத்த சத்தமாய் கூக்குரலிட்டான். சொன்னான், "அது சரி சகோதரன். பிரன்ஹாமே. நான் தான் அவனோடு உட்கார்ந்து கொண்டு இருந்தேன்." மற்றும் அவன் நடை மேடைக்கு ஓடி வந்தான். "அந்த காரியங்கள் உன் மேல் வரும்."என்று நான் சொன்னேன். மற்றும் அந்த நடை மேடையிலேயே விழுந்து என் கால் சட்டையை பிடித்து கொண்டு, "கர்த்தாவே என் பாவம் நிறைந்த ஆத்துமாவின் மேல் இரக்கமாய் இரும் என்று சொன்னான். "பாருங்கள்-? நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை குறித்து கவனமாய் இருங்கள். பாருங்கள். அது சரி, அவருக்கு எந்த இறையியல் போதனை கொடுக்கப்பட்டது என்பதை குறித்து எனக்கு ஒரு கவலையும் இல்லை. இது _ இது தேவன் அவருடைய ஜனங்கள் மத்தியில் இடைப்பட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் அபிஷேகத்தின் கீழ் அது இல்லாமல் இருந்தால், அது எப்படி இருந்திருக்கும். அங்கே பாருங்கள்-? நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் கர்த்தர் என்னிடம், அவர் என்னோடு கூட நிற்பார் என்று சொன்னார். அது அவருடைய கடமை. என்னுடைய கடமை என்ன வென்றால், இங்கு நின்று கொண்டு உண்மையை உங்களுக்கு சொல்ல வேண்டும். என்னோடு கூட நிற்பது அவருடைய கடமை. அது உண்மை. 24. ஆகையால், அது ஒரு அக்கினியினூடாக இருக்கக்கூடிய ஒரே பரிட்சை, நண்பர்களே. நம்ப வேண்டாம். ஆனால் அதில் என்ன இருக்கிறது... ஆனால் கர்த்தருக்கு நன்றி, நாம் இன்னும் வெற்றியின் பக்கமாக இன்று நின்றுக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் நாம் கிறிஸ்துவுடன் கூட இருக்கிறோம். மற்றும் அந்த பாதி இன்னும் சொல்லப்படவில்லை. அது இன்னும் குழந்தை பருவத்தில் தான் உள்ளது. அது அப்பால், ஒரு பெரிய சிறந்த முத்திரையில் எப்போது வருகிறது என்று கவனிக்கவேண்டும். அந்த நேரமானது, இந்த பழைய உலகம் இதற்கு முன் இருந்த எல்லா நாட்களிலும் பெற்றிடாத, ஒரு பெரிய அசைவை பெற்றுக் கொள்ளும் நேரமாக உள்ளது. பெரிய காரியங்கள் எதிர் நோக்கி இருக்கின்றன. சற்று......அவைகளை நாம் நடை முறையில் கொண்டு வர முடியாது. தேவன் அதை காட்டும் வரைக்கும் காத்திருப்போம். ஆனால் நாம் இப்படியாக ஒரு மத்தியான வேலையில் வந்திருக்கும் போது, உங்கள் சட்டையின் காலரை கீழே இழுத்து, தாராளமாய் பேசுவதால், நான் நன்றாக உணர்கிறேன். நீங்களும் அவ்வாறே உணர்கிறீர்கள் என்று நம்புகிறேன். 25. நான் வேதாகமத்தில் இருந்து ஒரு பகுதியை வாசித்து ஒரு சில விமர்சனம் செய்ய இருக்கிறேன். நான் நீண்ட நேரம் எடுப்பேனானால் யாராவது எழுந்து நின்று நான் நிறுத்துமாறு என்னிடம் கூறுவீர்களா-? ஏனென்றால் எனக்கு _ எனக்கு பேசுவதற்கு மிகுந்த ஆசை. ஏன், நான் அதிக நேரம் பேசுவதற்கு எடுப்பேன். மேலும் அதிக நேரம் உங்களை வைக்க மாட்டேன், கொஞ்ச நேரம் மாத்திரம் வைப்பேன். இப்போது, அநேக சிறு பகுதிகள் அநேக தரம் வாசிப்பதுண்டு. மற்றும் இந்த மாதிரி, மதிய நேரத்தில், நான் பேசுவதை பற்றி எதையும் வாசிப்பது கிடையாது. காரணம் நான் அப்படி செய்ததே கிடையாது. நான் எப்பொழுதுமே பரிசுத்த ஆவியை பொறுப்பேற்று கொள்ளுமாறு விட்டுவிடுவேன். அவர் என்னை என்ன சொல்ல விரும்புகிறாரோ அதையே சொல்லுவேன். ஒரு வேளை ஒரு வேதாகம பகுதியை வாசித்ததை நான் தொட்டு கூட பார்த்ததில்லை. ஒரு வேளை நான் வேறு ஏதாகிலும் செய்ய அவர் விருப்பமாக இருக்கிறாரோ என்னமோ, அது எனக்கு தெரியாது. ஆனால் இந்த மதியம் ஒரு நான் வாசித்த ஒரு பிரபலமான பகுதியை வாசிக்க இருக்கிறேன். எனக்கு... வேண்டும். நான் நினைத்து கொண்டு இருந்தேன். ஒரு வேளை, கர்த்தர் அதின் மேல் நான் பிரசங்கிக்க விரும்புவார். "வந்து ஒரு மனிதனை பார்க்கவும்." ஆனால் இந்த வாரம், அநேக முறை நான் அதை குறிப்பிட்டேன். நான், பரிசுத்த யோவான் எழுதிய சுவிஷேசம் 11 அதிகாரம் வாசிப்பேன் என்று நினைத்தேன். "லாசருவின் உயிர்த்தெழுதல்." லாசரு உண்மையிலேயே உயிர்த்தெழுந்தார் என்று எவ்வளவு பேர் நம்புகிறீர்கள்.-? உங்கள் கரங்களை நான் பார்கட்டும். அற்புதம், எவ்வளவு கிறிஸ்தவர்கள் இந்த மதியம் இங்கே இருக்கிறீர்கள்-? கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள்-? உங்கள் கரங்களை பார்க்கலாமா-? இந்த கட்டிடம் முழுவதும். நல்லது. இது 100 சதவீதம். எல்லாம் சரி. அது அற்புதம். 26. நல்லது. நான் அதை வேறு விதத்தில் அனுகுகிறேன், பாவிகளுக்கு பிராசங்கிப்பதை காட்டிலும் நான் கிறிஸ்தவர்களுக்கு பிரசங்கிக்கலாம் என்று நம்புகிறேன். மேலும் கர்த்தர் தாம்.... நாம் தெய்வீகச் சுகமளிப்பதற்கு எடுத்து செல்வோம். ஒரு வேளை கர்த்தர், உங்களுக்கு தெய்வீகச் சுகமளிப்பதை பற்றி உற்சாகப்படுத்துவதற்காக ஏதாகிலும் பேசுவார். ஒரு வேளை அப்படியே செய்வார். பரிசுத்த யோவான் 11 அதிகாரத்திற்கு திருப்புவோம். மேலும் சில வேத வாக்கியங்கள் பரிசுத்த யோவான் 11-ம் அதிகாரம் 18 -வது வசனத்திலிருந்து தொடங்கும் வேதாகமத்தின் சில வசனங்களை இங்கே வாசிக்கலாம். மேலும் இப்போது நீங்கள் நினைவு கூறுங்கள், உங்களுக்கு இந்த நாளில் நாம் சேர்ந்து வாசித்து, படித்துக் கொண்டே வேத வாக்கியங்களை, குறித்து வைத்து கொள்ளவும். இப்போது 11: 18 பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது. யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள். இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டு போனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள். மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்து எழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள். 27. நாம்... இப்போது, நம் தலைகளை தாழ்த்துவோமா. எங்கள் பரலோகப் பிதாவே இன்று, பல, பல வருடங்களுக்கு முன்னாள் ஒரு பெரிய நிகழ்வு நடந்ததை பற்றி உம்முடைய வார்த்தையை வாசித்தோம். ஆனால் அது இன்றைக்கு எங்களுக்கு புதியதாய் உள்ளது. ஒவ்வொரு முறையும் அதை வாசிக்கும் போது ஏதோ ஒன்று எங்கள் உள்ளத்தில் கொடுக்கிறது. மேலும், நாம் காலங்கள் தொட்டு உம் வார்த்தை பாதுகாக்கப்பட்டிருந்ததினாலும், மற்றும் இந்நாளில் நம் கரங்களில் வேதாகமம் கிடைப்பதற்கு, இந்த பூமியை இரத்தத்தால் கரைப் படுத்தின மனிதர்களுக்காக நன்றி. அவர்களுடைய வாழ்க்கைக்காக தாழ்மையோடும், நன்றியோடும் எங்கள் தலையை தாழ்த்தி உமக்கு நன்றி சொல்லுகிறோம். மேலும் கர்த்தர் தாமே அவர்கள் சரீரங்கள் அழியாமையை பெறும்படி எழும்பும் நாள் வரைக்கும், அவர்களுடைய கம்பீரமான ஆத்துமாக்களை நித்திரையில் இருக்கும்படி செய்வாராக. மேலும் இப்போது, இந்த மரித்த மனிதனை கல்லறையிலிருந்து எழுப்பின அதே இயேசு தான், இந்த மதியம் இங்கு இருக்கிறார் என்று நம்புகிறோம். மேலும் அவர் எங்களையும் எழுப்ப கூடும் என்பதையும், மேலும் அவர் மரித்தவர்களையும், எழுப்பிக் கொண்டிருகிறார், சரீரப்பிரகாரமாக மரித்தவர்கள். மேலும் உடற்கூறுகளை பற்றி நன்றாக படித்து, அது மரித்து விட்டதாக அறிக்கை செய்யும் மருத்துவர்களின், தவறு இழைக்காத அத்தாட்சி உடன் உறுதி செய்யப்படுகிறது. அதற்கு பிறகு அவர்கள் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவினால் ஜீவனுக்கு திரும்புகின்றனர். 28. மேலும் இப்போ.., இந்த மதியம், இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் அநேகர் பெலவீனமாக உள்ளனர், அதாவது அவர்களுக்கு சரீரபிரகாரமான சுகம் தேவைப்படுகிறது. மேலும் நாங்கள் இந்த சில வார்த்தைகளை உம்மிடம் இருந்த வாசிக்க, நாங்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறோம். மேலும் நீங்கள் அனுப்புவேன் என்று சொன்ன பரிசுத்த ஆவியானவர், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவர், ஆறுதல் அளிப்பவர், திருத்துவத்தின் மூன்றாம் நபர், தேவனுடைய காரியங்களை எடுத்து எங்களுக்கு காட்டுவார். மற்றும் உம்முடைய தாழ்மையான ஊழியக்காரன் பேசும் போது, அவர் உதடுகளை சுத்திகரியும். அவைகளை விருத்தசேதனம் செய்யும். தேவனே தகுதி இல்லாத எல்லா வார்த்தைகளை எடுத்து போடும். மேலும் அதை பெற்றுக் கொள்ளும் அந்த இருதயமும், காதுகளையும் பரிசுத்த ஆவியானவர் தாமே வார்த்தையை நேராக இருதயத்திற்கு எடுத்து செல்லட்டும். மற்றும் அது நல்ல, செழிப்பான, நிலத்தின் மேல் விழுந்து நூறத்தனையாய் பலன் தரட்டும். மேலும் இந்த மத்தியான வேளையில், கர்த்தாவே நாங்கள் பேசிக்கொண்டு இருக்கையில், பரிசுத்த ஆவியானவர் தாமே, பெந்தேகோஸ்தே நாளில் வந்தது போல பலத்த காற்றை போல இந்த கட்டிடத்திற்குள் வரட்டும். இந்த வீதி முழுவதும் மக்களால் நிரம்பட்டும். கர்த்தாவே, அதை அருளும் தகப்பனே. நலிந்த, பெலவீனமுடையவர்கள் சுகம் அடையட்டும். முடவர்கள் நடக்கட்டும், குருடர்கள் பார்க்கட்டும், சேவிடர்கள் கேட்கட்டும், ஊமையர் பேசட்டும், சுகவீனர்கள், விடுதலை பெற்றுக் கொள்வார்களாக. இந்த முகாமில் அவ்வளவு மகிழ்ச்சி பொங்கி இருப்பதால், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றும், என்ன செய்கிறார்கள் என்றும் அறியாமல் இருக்கும் வரை ஒவ்வொரு இருதயமும் அவ்வளவு குதுகலம் அடையட்டும். 29. தேவனே எங்களை இந்த உணர்வுகளால் கட்டப்பட்டிருக்கும் வாழ்க்கையிலிருந்து எடுத்து போடும். எல்லாம் கூடும் என்று இருக்க கூடிய அந்த உலகத்திற்கு எங்களை கொண்டு செல்லும். இன்றைக்கே அதை அருளும் கர்த்தாவே. இன்னும் ஒரு பெந்தேகோஸ்தே நாளை எங்களுக்கு திரும்ப அனுப்பும். இப்போதும் கர்த்தாவே, எங்கள் அழுத்தத்தினாலும், எங்கள் உண்மையான ஜெபங்களை ஏறெடுத்துக் கொண்டிருபத்தினாலும் நாங்கள் உம்மை கேட்பது என்னவென்றால், பரிசுத்த ஆவியை அனுப்பி எங்கள் ஜெபத்தை கேட்குமாறு செய்யவும். மற்றும் உம்முடைய ஊழியகாரனின் உள்ளத்தையும் எண்ணங்களையும், வார்த்தைகளையும், நீர் ஒருமுகப் படுத்தி, அதை பெற்றுக் கொள்ளுகிற இருதயங்களையும் சரிப்படுத்தும். கர்த்தாவே எங்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, ஆனால் இந்த அரங்கத்தில் உள்ளவர்களுக்கு என்ன வேண்டும் என்று உமக்கு தெரியும். மற்றும் கர்த்தாவே, அந்த விசுவாசம் கட்டப்பட இன்றைக்கு அருள்செய்யும், அதனால் இன்று இரவு, இருந்த எல்லா கூட்டங்களிலும், இந்த கூட்டத்தில் ஒரு உச்ச கட்டம் ஏற்படட்டும். இந்த இரவு, அப்படிபட்டதோர் வெளியேற்றம் நடக்கட்டும், அது மனிதனுடைய பிள்ளைகள் மத்தியில் மறக்க கூடாத அளவிற்கு இருக்கட்டும். உம்முடைய ஊழியக்காரர் ஜெபத்தை கேளும், அவர்கள் இங்கிருப்பதினால் அல்ல, நீர் இங்கே இருப்பதினாலும், மற்றும் உம்முடைய சபையை எடுத்து கொள்வதற்கு சமயம் நெருங்கி கொண்டு இருப்பதினால், அவர்கள் ஜெபத்தை கேளும். எங்களை ஆசீர்வதியும், மேலும் இரட்சிக்கபடாத யாராயினும் இங்கே இருப்பார்கள் என்றால், அவர்கள் இயேசுவை இன்று பார்க்கும்படி அருள் செய்யும், மேலும் அவர்களை இரட்சித்து கொள்ளும். இவையெல்லாம் அவருடைய நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 30. இப்போது, லாசுருவின் உயிர்த்தெழுதல் என்னும் இந்த தலைப்பின் கீழ் சில கனங்களுக்கு பேச இருக்கிறேன், மேலும் நம்புவதற்கான ஒரு பாடம். இப்போது கர்த்தர் மிகவும் அதிசயமானவர், சமீபமாக இந்த பெரிய ஆய்வுகூடத்தில் நின்று கொண்டு அந்த கண்ணாடி வழியாக பார்க்கும் போது, 1200 லட்சம் வருடங்களான விண்வெளி வெளிச்சத்தை பார்க்கும் போது இந்த பிரபஞ்சத்தின் விஸ்தாரத்தை பார்ப்பீர்கள். மேலும் நீங்கள் நினைப்பீர்கள் என்றால்... நாம் இந்த சூரியனை பார்த்து, இது ஒரே சூரியன் தான் உண்டு என்று நினைக்கிறோம். அங்கு சூரியன்கள், மேலும் சூரியன்கள், ஆர்பிட்டுகள், மற்றும் சூரியன்கள் மற்றும் கோல்கள், மேலும் சூரியன்கள் அதற்கு அப்பால் மேலே இன்னும் பல லட்ச கணக்கில் உண்டு, மேலும் கர்த்தர் இந்த பிரபஞ்சத்தின் மேலே உட்கார்ந்து கொண்டு ஆளுகை செய்கிறார். தேவன் யார் என்பதை உங்களுக்கு கற்பனை பண்ணி பார்க்க முடிகிறதா-? அவர் யாராக தான் இருப்பார் என்றும் அவர் என்னவாக இருப்பார் என்பதை குறித்து ஏதாகிலும் கருத்து... உண்டா. இப்போது, உங்களுடைய ஜெபங்கள் எனக்கு தேவைப்படுகிறது. இன்று நான் தயக்கத்தோடு இங்கு நின்று கொண்டு இருக்கிறேன் என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா, இங்கு உட்கார்ந்துக் கொண்டிருக்கும் போதகர்களை குறித்து சுய நினைவாய் இருப்பதினால் தான். இங்கு நன்கு படித்த, பட்டங்களை பெற்ற மேதாவிகளும், மேலும் போதிக்கும் போதகர்கள், ஒரு பிரசங்கத்தை எப்படி தயார் செய்து அதில் பரிசுத்தாவியை உள்ளே அனுப்புவார்கள். மேலும் நான் இங்கு நின்று கொண்டு என்னுடைய தவறான தரமற்ற இலக்கணத்தில் பேசும் போது எனக்கு மிகவும் தயக்கம் வரும். ஆனால் எனக்கு அதில் இருந்து தூரமாக விலகி போகவேண்டும் என்பது தான் ஆசை. அது, என்னுடைய சகோதரர்கள் எனக்காக இருக்கின்றனர் என்பதை பற்றி எனக்கு தெரியும், மற்றும் அவர்கள் என்னை நேசிக்கின்றனர். மேலும் இன்றைக்கு, நமக்கு பரிசுத்த ஆவி வரவேண்டும். மேலும் அதற்கு தான் நாம் எல்லோரும் இங்கிருக்கிறோம். மேலும் அந்த உணர்வுகளை கட்டுப்படுத்தும் உணர்ச்சிகளில் இருந்து அசைக்கப்பட்டு வெளியேற வேண்டும் என்று, நாங்கள் விரும்புகிறோம். 31. இப்போது கர்த்தர் அவருடைய மகா சிறந்த அண்ட சராசரங்களில்... உங்களால் சற்று கற்பனை பண்ணி பார்க்க முடிகிறதா-?....தேவன் யார் என்று நான் நினைப்பதை, ஒரு சிறு படமாக தருகிறேன். தேவனின் திருத்துவம் என்றால் என்ன-? என்று காட்டுகிறேன். தேவத்துவத்தின் திருத்துவத்தை பற்றி, உலகத்தில் வித்தியாசமான வாக்குவாதங்கள் உள்ளன அவர்கள் கொஞ்சம்... அவர்கள்... எல்லோரும் ஒரே காரியத்தை தான் நம்புகிறார்கள், ஆனால் சாத்தான் அவர்களுக்கு இடையில் புகுந்து எல்லாவற்றையும் உடைத்து போட்டான். அவ்வளவு தான். தேவன் காற்றை போல உள்ளவர். முழு அண்ட சராசரங்களையும் நிரப்புகிறவர்... (நாடாவில் காலி இடம் _ ஆசி) ...அவருடைய குமாரன், பிறந்ததாக வேண்டும். ஆகையால் தேவகுமாரனாகிய லோகோஸ் தேவனிடத்தில் இருந்து புறப்பட்டு, இந்த பூமியின் மீது அடை காத்தார்... இப்போது விண்வெளியிலிருந்து ஒரு வெள்ளை வட்டம் வருவது போல கற்பனை பண்ணி பார்ப்போம். அது தான் தேவ குமாரன், அது அந்த லோகோஸ். மற்றும் அது ஒரு சிறு பிள்ளை தன் பெற்றோர் முன் கதவருகே விளையாடி கொண்டிருப்பது போல் வின்வெளியில் சுற்றி கொண்டிருந்தது. மேலும் அவர் தன் சிந்தனையில் அது என்னவாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து கொண்டிருந்தார். 32. மேலும் அவர் சுற்றி பார்த்து, என்ன சொன்னார் என்பதை கேட்க முடியும், அங்கே ஒரு இடத்திலும் ஒன்றுமில்லை _ எல்லையற்ற பரந்த இடம் முழுவதும் விண்வெளி தான். பிதா தான் எல்லா இடங்களையும் நிரப்பினார். மற்றும் இந்த தேவன் தான் சரீர பிரகாரமாக இந்த லோகோஸிற்குள் புகுந்தார். அவர் சொல்வதை என்னால் கேட்க முடிகிறது, "வெளிச்சம் உண்டாகட்டும்." என்றார் மற்றும் ஒரு அணு வெகு தூரத்தில் வெடித்தது. அப்பொழுது சூரியன் உண்டாயிற்று. அந்த சூரியன் சுழல ஆரம்பித்தது. மில்லியன் வருடங்கள் கடந்து சென்று விட்டன. கொஞ்ச நேரம் கழித்து ஒரு துண்டு அதில் இருந்து பறந்து சென்றது..(சகோதரன் பிரன்ஹாம் அதை செய்முறையில் விளக்குகிறார் _ ஆசி)... நட்சத்திரம். மேலும் அவர் அங்கு நின்று கொண்டு அதை பார்க்கிறார். மேலும் அது கீழே சென்றது. சில மில்லியன் ஆண்டுகள் அது சென்று கொண்டு இருக்கும் போது அவர் இங்கே நிறுத்தினார். (சகோதரன் பிரன்ஹாம் அதை செய்முறையில் விளக்குகிறார்_ஆசி)... பறந்து வேறொன்று சென்றது. அதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் விழும்படி செய்தார். மேலும் அதை அங்கே நிறுத்தினார். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்-? இப்போது, அவர் உள்ளத்தில் என்றோ ஒரு நாள் ஒரு உலகம் இருக்க போவதாக அவருக்கு நன்றாக தெரியும். மனிதர்கள் இந்த பூமியில் இருப்பார்கள் என்று தெரியும். 33. தேவன் மேலே இருக்கிறார். விண்ணில் கோல்கள் செல்லும் விதியை எழுதிக் கொண்டிருக்கிறார். அந்த ராசி கண்ணி ராசியாக துவங்குகிறது, இயேசுவின் முதலாம் வருகை. சிம்ம ராசியில் முடிகிறது, அந்த சிங்கம், அவரது இரண்டாம் வருகை. மற்றும் அவர் தனது முதலாம் வேதாகமத்தை எழுதுகிறார். அவைகளில் மூன்று உண்டு. ஒன்று வானத்தில் எழுதுகிறார், ஒன்று கூர்நுனி கோபுரத்தில், ஒன்று இதில். ஒரு மனிதன் எப்படி திருத்துவத்தில் இருக்கிறானோ அதே போல தேவனில் எல்லாம் திருத்துவத்தில் தான் உள்ளது. நல்லது. மற்றும், அவர் நட்சத்திரங்களையும், கோல்களையும், மற்றும் சூரியனையும், அவைகள் எல்லாவற்றையும், எழுதின பின்பு, நான் ஒரு பெரிய பந்து, பணிகட்டியால் மூடியிருக்க, அப்பால் எங்கேயோ ஒரு இடத்தில் கிடக்க கண்டேன். அது தான் இந்த பூமி. மேலும் அவர், அது காய்ந்து போகும் வரைக்கும், சூரியனை சுற்றி வந்து அதை அடைகாத்து வந்தார். மற்றும் இந்த பூமியில் தனது சிருஷ்டிப்பை துவங்கினார். 34. மற்றும் அவர் எல்லா சிருஷ்டிப்பையும் செய்த பிறகு, அவர் சொன்னார், "மனிதனை நமது சாயலின்படியும் (பன்மையில்) "நமது ரூபத்தின்படியும்" (பன்மையில்) உண்டாகுவோம். இப்போது, கர்த்தர் காணக்கூடாதவராய் இருப்பார் என்றால், மேலும் லோகோஸ் அந்த உருவத்திலிருக்கும் என்றால், சற்று புராண சமந்தமான கற்பனை நாடகத்தில் இருப்பது போல் சொல்லப் போனால், அது ஒரு வெளிச்சமான வட்டம் போல் இருக்கும் என்றால் அது இயற்கைக்கு மேம்பட்டது. பின்பு அவர் மனிதனை தன்னுடைய சாயலின் படி உண்டாக்க வேண்டும். யோவான் 4 சொல்லுகிறது, தேவன் ஆவியாய் இருக்கிறார். மற்றும் அவர் ஒரு ஆவியான மனிதனை உண்டாக்க வேண்டும். மேலும் அதை இப்போது அவர் கீழே கொண்டு வந்தார். அந்த தெய்வ தன்மையை பார்க்க முடியாது. தெய்வ தன்மை என்பது இயற்கைக்கு மேம்பட்டது. பின்பு அவர் ஒரு புனிதமான வட்டமான வெளிச்சத்தில் இருந்து ஒரு சிறிய வெள்ளை மேகத்தில் கொண்டு வந்தார், ஏதோ ஒன்று நன்றாக பார்க்கக் கூடியதாக இருந்தது, அது தான் மனிதன். அவருடைய ராஜ்யத்தை ஆளக்கூடிய அதிகாரத்தை அவனுக்கு கொடுத்தார். மேலும், பரிசுத்த ஆவியானவர் இன்றைய சபையை நடத்துவது போல், அவன் எல்லா மிருகங்களையும் ஆண்டு கொண்டான். ஆனால் அங்கே நிலத்தை உழுவதற்கு ஒரு மனிதனும் கூட இல்லை. பின்பு அவர் மனிதனை, பூமியின் மேல் மனித சாயலாய் வைத்தார், அவனை பூமியின் புழுதியிலிருந்து சிருஷ்டித்தார். 35. மற்றும் இங்கே தான் அறிவியல் குழப்பியது. அவர்கள் சொல்லுகிறார்கள் "இல்லை" அவர் குரங்கை போன்று கரங்களையும், மனித குரங்கு போன்று முகத்தையும், கரடியை போல பாதங்களையும் கொடுக்ககூடும், ஆனால் தேவன் மனிதனுக்குள்ளே ஒரு ஆத்துமாவை வைத்திருக்கிறார். இந்த வெள்ளை மேகமான தெய்வ தன்மை கீழே மிருகத்திற்குள்ளே அல்ல, மனிதனுக்கு உள்ளே வந்தது. மேலும் இப்போது, அவர்களுக்கு வேண்டுமானால், சென்று பழைய எலும்புகளை தோண்டி பார்க்கட்டும். எத்தனை எலும்புகளை தோண்ட முடியுமோ அத்தனை தோண்டினாலும், அத்தனை எலும்புகளும் தேவனுடைய வார்த்தையின் மீது ஒரு காரியமும் செய்ய முடியாமல் போகும். அங்கே தான் அவர். பின்பு, இதோ இந்த மனிதன். இப்போது அந்த மனிதன் பாவம் செய்தான். மற்றும் அவன் எப்போது பாவம் செய்து வீழ்ச்சி அடைந்தானோ அப்போது அந்த மேகம் தாறுமாறாக மாறி கறுத்து போய்விட்டது. பின்பு அந்த லோகோஸ் கீழே இறங்கி வந்து, இந்த மனிதனை தேவனுடைய அன்பிற்கு திருப்பி, அவனை மீட்கும் பொருட்டாக, நமது மத்தியில் மாம்சமானார். மேலும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் மீண்டும் வந்து, பாவத்தை மனிதனிடம் இருந்து துரத்தி அடித்து, மீண்டும், மீண்டும் மனிதனை தேவனுடைய ஆளுமைக்குள் கொண்டு வருகிறார். நீங்கள் அதை நம்புகிறீர்களா-? திரும்பி...... 36. இப்போது கவனியுங்கள். பின்பு இங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். பெந்தேகோஸ்தே ஜனங்களே, இது தான் உங்கள் காரியமாக இருக்கிறது. இப்போது, உங்களுக்கு பிரசங்கிப்பது தான், இந்த மதியம் நான் குலுக்கி எடுக்கப்பட்டதாக உள்ளது. மேலும் இந்த மேடையில் பிரசங்கிப்பது என்னுடைய உரிமை. மேலும் நான் இங்கு நின்று கொண்டு இருக்கும் போது, எனக்கு மாம்சீகத்திலுள்ள எந்த மனிதனையும் அறிய எனக்கு விருப்பம் இல்லை. அது தான் பெந்தேகோஸ்தே ஜனங்களின் காரியமாக உள்ளது. அவர்கள் யார் என்று அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் தேவனின் குமாரர்களும் மற்றும் குமாரத்திகள். உங்கள் கரங்களில்... வைத்திருக்கிறீர்கள், பாருங்கள். பின்பு இயேசு, வேதாகமத்தில் ஒரு முறை கூறினார், "நீங்கள் தேவர்களாய் இருக்கிறீர்கள்." 37. பாருங்கள். தேவத்துவத்தின் தன்மை... நான் சார்லஸ் பிரன்ஹாமின் ஒரு பகுதி, ஏனென்றால், என் தகப்பனாகிய சார்லி பிரன்ஹாம் இடமிருந்து பிறந்துள்ளேன். நான் அவரின் ஒரு பகுதி. அவருக்கு இருக்கும் நெற்றியை போல தான் எனக்கும் உண்டு. எனது முடி அவரை போன்று உள்ளது. அவரை போலவே நான் சிறிய உடல் அமைப்பு உள்ளவன். அவருடைய தன்மை போலவே நானும் உள்ளேன். காரணம் அவர் என் தந்தை. மேலும், நாம் தேவனின் ஆவி குமாரர்களாய் ஆகும் போது, தேவத்துவத்தின் தன்மை மனிதனில் வாசம் செய்யும். அல்லேலூயா-! அதற்கு பிறகு குருடர்கள் பார்வை அடைந்தனர் என்று பேசுவீர்கள். அவர்கள், தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று சொன்னார்கள். தேவன் சொன்னார் உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால் உங்களால் கூடாத காரியம் ஒன்றுமே இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தரால் அல்ல, ஆனால் உங்களால். தேவத்துவத்தின் தன்மை மனிதனுக்குள். நித்திய நித்திய. காலமாக புராண மேடைக்கு பின்னால் நின்று கொண்டிருந்த அதே ஆண்டவர் தம்முடைய கரங்களில் இருந்து உலகங்களை உருண்டோட செய்தவர், இந்த காரியங்களை எல்லாம் சிருஷ்டித்து, அவருடைய குமாரனாகக்கூடிய தகுதியை தந்து, மேலும் நீங்கள் அவருடைய பகுதியாக இருக்கிறீர்கள். மற்றும் தேவன் மனிதனில் வாசம் செய்கிறார், மற்றும் மனிதனே தேவத்துவத்தின் தன்மை உள்ளவன். அல்லேலூயா-! அங்கே தான் நீங்கள். அது உங்கள் தொண்டையை நெருக்கும், ஆனால் சிறிது நேரம் அதை வாசியுங்கள். பாருங்கள். அவர் தான்... தேவன் மனிதனுக்குள் வாசம் செய்கிறார். மற்றும் மனிதன் தேவனுடைய குமாரனாகிறான். அவன் தன்னில் தான் அல்ல, ஆனால் அவனில் உள்ள பரிசுத்தாவியே தேவனாக இருக்கிறது. சிருஷ்டி கர்த்தா, சிருஷ்டியில் வாசம் செய்கிறார். ஓ என்னே ஓரு. எப்படி அதை எண்ணுகிறேன். பின் அசைக்க முடியாத விசுவாசத்தில் நின்று கொண்டு, உனக்கு என்ன வேண்டும் என்று கேள், அது உனக்கு நடந்து விடும். அங்கே தான் அவர் இருக்கிறார். தேவன். அங்கே தான் இருக்கிறார். 38. இப்போது, நமது நாட்களில் இருக்கும் செய்தியின்படி, அந்த மீட்பர் வருவதற்கு முன், இயேசு மிகவும் பிரபலமானார். அவருடைய பிறப்பு மிகவும் ஏளனத்தோடு இருந்த போதிலும், அவர் மாட்டு கொட்டகையின் வழியாக வந்து, வெளியே செல்லும் போது ஒரு குற்றவாளிக்குரிய தண்டனையோடு சென்றார் (உங்களுக்கு அது தெரியுமா) அவர் மதவெறி பிடித்தவன் என்று எண்ணப்பட்டார், பரிகாசம் செய்யப்பட்டார், அவரை துப்பினார்கள், கேலி செய்தார்கள், அவரோ மகிமையின் ராஜாவாக இருந்தார். அவர் ஒரு மாட்டு கொட்டகையின் வழியாக வந்தார். ஏன், இயேசு ஒரு மாட்டு கொட்டகையில் அல்லது முன்னனையில் பிறந்தார்-? நீங்கள் எப்போதாவது அதை பற்றி நினைத்ததுண்டா-? அவர் அப்படி தான் இருக்க வேண்டியதாய் இருந்தது. அவர் ஒரு ஆட்டுகுட்டியாக இருந்தார். ஆட்டுகுட்டிகள் வீட்டில் பிறப்பதில்லை. ஆட்டிகுட்டிகள் வயல் வெளிகளில் பிறக்கின்றன. ஆபேல் தனது ஆடுகளை திராட்சை கொடியின் பக்கமாக அழைத்து சென்றான். பலிபீடத்தின் மேல் பலியிட்டான், மேலும் அந்த ஆடு பலியிட்டு மரித்த அதே பலிபீடத்தின் மேல் ஆபேல் மரித்து போனான். மேலும் கிறிஸ்துவின் இடத்தில் வரும் ஒவ்வொரு விசுவாசியும், கிறிஸ்து என்னும் அந்த மரித்த ஆட்டுகுட்டியோடு அந்தே பலிபீடத்தின் மேல் மரிக்க வேண்டும். ஒரு புது சிருஷ்டி ஆவதற்கு கிறிஸ்துவில் மரிக்க வேண்டும்: உலகத்தின் காரியங்களுக்கு மரித்து, மீண்டும் இயேசு கிறிஸ்துவில் ஒரு புது சிருஷ்டியாக பிறக்க வேண்டும். சுயத்தை தியாகமாக்கும் அதே பலிபீடத்தில் மரிக்கவும். எல்லாம் சரி. 39. கவனியுங்கள், தேவன் ஏதாவது ஒரு காரியத்தை இந்த பூமியில் செய்வதற்கு முன், அவர் எப்பொழுதுமே ஒரு செய்தியை அனுப்புகிறார், காரியங்களை ஆயத்தப்படுத்துவதற்காக, அது எசரிப்பதாக இருக்கும். ஓ, நான் இப்பொழுதே பரவசப்படுகிறேன். பாருங்கள். எல்லாம் சரி. இப்போது, ஒரு அசைவு நடந்து கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன். நோவாவின் காலத்தில் தேவன் எச்சரித்தது போல, ஜனங்களை ஆயத்தபடுத்துகிறார். ஏதோ ஒன்று நடக்கவிருக்கிறது. அணு ஆயுதங்களின் சக்தி மற்றும் காரியங்கள், நம் மேல் வெடிக்க ஆயத்தமாக உள்ளது. ஒரு நொடி பொழுதில் பல லட்சக்கணக்கானவர்கள் மரித்து விடுவர். ஆனால், ஓ, என்னே ஒரு காரியம், ஆண்டவர் தமது, சபையை எடுத்து கொள்ளபடுவதற்கு ஆயத்தப்படுத்துகிறார். தேவகுமாரன் வருகைக்கு..... கவனியுங்கள். தேவன் ஏதோ ஒன்றை பூமிக்கு அனுப்புவதற்கு முன்னால், அவர் ஏபொழுதுமே அவருடைய செய்தியை அனுப்புகிறார். அதை மெய்பித்து காட்ட அல்லது சில காரியங்களை சரி பார்க்க, தேவன் தமது தூதர்களை அனுப்புகிறார். 40. இப்போது அங்கு சிறிய தூதர்களும் பெரிய தூதர்களும் உண்டு. இப்போ... இயேசுவின் வருகைக்கு முன்னாள், தேவன், காபிரியேல் என்னும் பிரதான தூதனை அனுப்பினார். பாருங்கள், 4000 வருடங்களாக மேசியாவுக்காக அவர்கள் காத்து கொண்டிருந்தனர். இப்போது அந்த பழைய தீர்க்கதரிசன சக்கரங்கள் ஒன்று சேர்ந்து வருகின்றன. சரியான நேரத்துக்கு. ஜனங்கள் அவர்களுடைய பிரசங்கத்திலிருந்து மற்றும் அது போன்ற காரியங்களில் இருந்து வெளி வருகின்றனர். எகிப்திய இரவுகளை பற்றி ஒரு மேய்ச்சல் தொழில் கொண்ட தென் ஆப்பிரிக்க நாடோடி இனத்தவர் (hottentots) என்று சொல்லக்கூடிய பழங்குடியினருக்கு தெரிந்த அளவுக்கு கூட சிலருக்கு தேவனை பற்றி ஒன்றுமே தெரியவில்லை, இருந்த போதிலும் அவர்கள் வேதாகமத்தை பற்றி எல்லாம் சொல்வார்கள். வேத வாக்கியங்களை அறிந்துகொள்வதன் மூலம் நீங்கள் ஒரு முறை பிசாசை எதிர்த்துப் போராட முயற்சிக்கிறீர்கள். அதை உங்களில் எவரையும் விட அவன் நன்கறிவான். "அது, அவர் தான் என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறார்" 41. கவனியுங்கள். பின்பு அவர்கள் அது எப்படி இருந்திருக்க வேண்டுமோ அதை அப்படியே கண்டு பிடித்து கொண்டனர். ஆனால் தேவன், தன்னை-தன்னை ஒருபோதும் ஒரு சாட்சி இல்லாமல் வைக்கவில்லை. இப்போது இயேசுவின் வருகைக்கு முன்னால்... காபிரியேலை மகிமையில் இருந்து தேவன் கீழே அனுப்பினார் என்று எடுத்து கொள்ளுவோம். இப்போது சிறிய தூதர்கள் வருவதை உங்களால் கேட்க முடிகிறது. ஆனால் காபிரியேல் வரும் போது, பெரிய காரியம் நடக்கவேண்டும். காபிரியேல் வரும் போது... அவன் பிரதான தூதன், மேலும் ஏதோ ஒரு பிரமாண்ட காரியம் நடக்கவிருக்கிறது. கேளுங்கள்; காபிரியேல் கிறிஸ்துவின் முதலாம் வருகையை அறிவித்தான் மற்றும், காபிரியேல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை அறிவிப்பான். அங்கே தான் நீங்கள். ஏனென்றால் அவன் தேவனின் எக்காளம் ஊதுவான். நல்லது. முதலாம் வருகை .....நாம் ஒரு சிறு நாடக வடிவில் முன்னால் கொண்டு செல்லுவோம். ஒரு வயதான சகரியா என்னும் பெயருள்ள ஆசாரியனை என்னால் பார்க்க முடிகிறது. அற்புதமான ஒரு வயதான மனிதன். அவனும் அவன் மனைவியும், தங்கள் முழுமனதோடு தேவனுக்கு ஊழியம் செய்த நல்ல மனிதர்கள். மற்றும் அவனுடைய ஊழியம் என்ன என்றால், ஜனங்கள் ஜெபித்து கொண்டிருக்கும் போது பீடத்தில் தூபம் காட்டுவது. மேலும் அவர்கள் தேவனுடைய எல்லா கற்பனைகளையும், சட்ட திட்டங்களையும் பின்பற்றினர். தேவனுக்கு முன்பாக குற்றமற்றவர்களாக நடந்து கொண்டனர். 42. மற்றும் என்னால் சகரியாவை அந்த நாளில் ஆலயத்தில் பலி... பார்க்க முடிகிறது. ஜனங்கள் ஜெபித்து கொண்டிருக்கும் போது, அவன் தூபம் காட்டிக் கொண்டிருந்தான். மேலும் அதற்கு பிறகு, பாருங்கள். மகிமையில் இருந்து ஒரு மகத்தான பிரதான தூதன் கீழே இறங்கி வருகின்றான். அவன் அருகே நின்று சொல்கிறான், "சகரியா, பயப்படாதே. நீ இப்போது... உன்னுடைய ஊழிய நாட்கள் இங்கே முடிந்த பிறகு, உன்னுடைய மனைவியோட இருப்பதற்கு வீட்டிற்க்கு போகிறாய். மேலும் நீ ஒரு குழந்தையை பெற்றெடுக்க போகிறாய், மற்றும் அவன் யோவான் என்று அழைக்கப்படுவார்." என்ன ஒரு வரவேற்பு அந்த மனிதனுக்கு. அவர் சொன்னார், "இந்த காரியங்கள் எப்படி முடியும்-? " இதை நன்றாக கவனிக்க நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன். வேதத்தின் பின்னால் இருப்பவன், வேதம் எல்லாம் அறிந்த மனிதன், ஒரு ஆசாரியன், ஒரு முன் குறிக்கபட்டவன், தேவனுடைய தூதனை நம்புவதற்கு தோற்று விட்டான். நல்லது, கவனியுங்கள். பின்........... கர்த்தர் எப்போதோ ஏதோ ஒன்றை நிர்ணயிக்கும் போது, அவருடைய முன் அபிஷேகிக்கப்பட்ட தீர்மானம் நடந்தே தீரும். 43. அதற்குப் பின், காபிரியேல் சொல்வதை நான் பார்க்கிறேன், தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்; இதோ, தகுந்த காலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால், இவைகள் சம்பவிக்கும் நாள் மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான். இப்போது சகரியாவுக்கு நிறைய உதாரணங்கள் இருந்தது. குழந்தை பிறக்கும் வயதை கடந்து, 90 வயது சென்ற, பெண்களுக்குரிய வழிபாடுகள் எல்லாம் முடிவுற்ற சாராள் அங்கே இருந்தாள், ஆனால் அவள் தேவனை விசுவாசித்தாள், அதனால் அவளுக்கு ஒரு குமாரன் கிடைத்தது, அதனால் இந்த உலகமே ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது. அங்கே ஆகார் இருந்தாள்... அன்னாள், நான் சொல்வது அன்னாள், குழந்தை பெறும் காலத்தை தாண்டி, ஒரு நாள் சீலோவாவில் உள்ள ஆலயத்துக்கு தடுமாறி, பீடத்தின் மேல் விழுந்து, தான் கரங்களை உயர்த்தி, ஜனங்கள் அவள் குடித்து வெறித்து இருக்கிறாள் என்று சொல்லும் வரைக்கும் உரத்த சத்தமாக கூப்பிட்டாள். அவள் குடிக்க வில்லை, அவளை தவறாக எண்ணினர். அன்று ஒரு இரவு அநேக ஜனங்கள் கூறினார், அவர்கள் கீழே சென்று கொண்டிருந்தனர். "அங்கே ஒரு கூட்ட பரிசுத்த உருளைகள் இருக்கின்றனர் போலும், எல்லோரும் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர்." நீங்கள் பைத்தியம் பிடித்தவர்கள் அல்ல. நீங்கள் தவறாக எண்ணப்படுகிறீர்கள். அவ்வளவு தான். 44. அன்னாள், ஆழ்ந்த உத்தமத்தில் இருந்தாள். அதனால் ஒரு ஆசாரியன் கூட தடுமாறி அவள் குடித்து இருக்கிறாளா என்று அவளிடம் கேட்டார். அவள் சொன்னாள் "நான் குடிக்கவில்லை, ஆனால் நான் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். தேவன் என் நிந்தனையை எடுத்துப் போடுவார்." அவள் என்ன விதமான தொப்பிகளை பெண்கள் அணிந்திருந்தனர் என்று பார்த்துக் கொண்டு இருக்கவில்லை, எந்த விதமான ஆடைகளை அணிந்து இருந்தனர் என்று பார்க்கவில்லை. அவள் தேவனை தொழுது கொள்வதற்கு மற்றும் அவரிடம் ஏதோ ஒன்றை கேட்கும்படி அங்கு சென்றாள். மற்றும் இந்த மதியம் நீங்கள் கக்க தண்டோடும், சக்கர நாற்காலியில் வந்திருந்தாலும், நீங்கள் என்னவாக இருந்தாலும், அதை பற்றி ஒரு காரியமும் இல்லை, தேவனிடத்தில் ஏதாவது கேட்க வந்திருந்தால், கேளுங்கள் அதை பெற்று கொள்வீர்கள். மற்றும் அவள் தவறாக எண்ணப்பட்டாள். ஆனால் அவள் எழுந்திருக்கும் போது, அந்த ஆசாரியன் அவள் உத்தமமாக இருப்பதை கண்டு சொன்னார், "கர்த்தராகிய தேவன் உன்னை ஆசீர்வதிப்பார்." மற்றும் அவள் தேவனுக்கு நன்றி செலுத்தி, நம்பிக்கையோட வீட்டிற்கு சென்றாள், தேவன் அந்த நேரமே ஒரு குழந்தையை அவளுடைய கரங்களில் போட்டிருக்கலாம். ஆனால் 9 மாதத்தில் சின்ன சாமுவேல் பிறந்தான். அவள், அவனை ஆலயத்திற்கு அழைத்து சென்றாள். 45. இப்போது, சகரியாவுக்கு இந்த எல்லா காரியமும் உதாரணமாக இருந்தது, ஆனால் அவனோ அந்த தூதனை நம்புவதற்கு தவறி விட்டான். மற்றும் தேவன் அவனிடம் சொன்னார்... அல்லது அந்த தூதன் அவனிடம் அவன் ஊமையாய் இருப்பான் என்று சொன்னார். பின் அவன் வீட்டிற்கு சென்றான். மேலும் அவன் மனைவி கற்பமுற்றாள். அதற்கு பிறகு, 6 மாதம் சென்ற பின் ஒரு சிறிய கன்னி பெண் ஒரு நாள் தண்ணீர் மொண்டுக் கொண்டிருந்தாள். சுமார் 18 வயது நிரம்பிய அவள் ஒரு 45 வயது நிரம்பிய யோசேப்பு என்னும் மனைவியை இழந்த ஒருவருக்கு நிச்சயிக்கப்பட்டாள். அவருக்கு 4 பிள்ளைகள் இருந்தன. மற்றும் அவள்... அது திங்கட்கிழமை என்று வைத்து கொள்ளவும், அது தான் உள்ளதிளேயே பெண்களுக்கு மிகவும் மோசமான நாள். காரணம் அவர்கள் துவைப்பார்கள். நான்-நான் திங்கள் அன்று வீட்டில் இருக்கும் போது, துவைப்பதற்கு தண்ணீர் சேர்க்கணும். ஆகையால் அங்கே... ஓ அது திங்கள் என்று சொல்வோம். மேலும் அவள் அந்த கிணற்றில் இருந்து வந்துக் கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன். மேலும் நாசரேத்து இந்த பூமியிலேயே ஒரு மோசமான பட்டணம் ஈரியை (Erie) காட்டிலும் மோசமானது... ஆமாம். மேலும் அங்கே தான் அவள் தண்ணீரை தண்ணீர் கொள்ள வந்தாள். ஆனால் அவள் ஒரு கன்னி பெண். அவள் சரியாக வாழ்ந்தவள். உங்கள் பட்டணம் எவ்வளவு மோசமான பட்டணமாக இருந்தாலும் எனக்கு அக்கறை இல்லை, எப்படியும் நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருக்க முடியும். ஆமென், அவள் கர்த்தரை நம்பினாள். 46. பண்டைய காலத்தில் தண்ணீரை தலையின் மேல் சுமந்து வருவது தான் பழக்கம். அந்த சிறிய கண்ணி பெண் தலையின் மீது தண்ணீரை சுமந்து வருவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. திடீரென்று ஒரு பெரிய வெளிச்சம் அவள் முன் பிரகாசிக்கிறது. அங்கே அந்த வெளிச்சத்தில், அந்த வல்லமையுள்ள தூதன் காபிரியேல் நின்றுக் கொண்டு சொன்னார் "மரியாளே வாழ்க! ஸ்திரீகளுக்குள் நீ ஆசீர்வதிக்கப்பட்டவள். "என்ன ஒரு மரியாதை, அவருடைய வழிகளை பற்றி ஆச்சரியப்பட்டாள். அவள் அந்த தூதன் அவளை நெருங்கி சென்றான். அது அந்த சிறிய பெண்ணை பயமுறுத்தியது. அது உன்னையும் பயமுறுத்தும். அது என்னையும் பயமுறுத்தியது. மேலும் அவளை நான் கவனித்தேன், அவள் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் அவளுடைய இனத்தாள் எலிசபெத் முதிர் வயதிலும் ஒரு புத்திரனை பெறுவாள் என்று சொன்னார். மரியாளும் எலிசபெத்தும் முதல் உறவினர்கள். யோவானும், இயேசுவும் இரண்டாம் உறவினர்கள். மற்றும் அவர் அவளுக்கு, புருஷனை அறியாமலே ஒரு குழந்தையை பெறுவாள் என்று சொன்னார். இப்போது, வார்த்தையினால் நிறைய உதாரணங்கள் இருந்தும் தூதனின் செய்தியை நம்புவதற்கு மறுத்த ஒரு ஆசாரியனுக்கும் மரியாளுக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள். ஆனால் அந்த சிறிய பெண்... அந்த மாதிரி ஒரு குழந்தை பிறந்ததாக இல்லவே இல்லை, ஆனால் அவள் சொன்னாள், "இதோ நான் ஆண்டவருக்கு அடிமை. உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது என்றாள்." அல்லேலுயா. பயப்படாதீர்கள். நான் எங்கே இருக்கிறேன் என்று எனக்கு தெரியும். பாருங்கள், அல்லேலூயா என்றால் "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" மேலும் அவர் எல்லா துதிகளுக்கும் பாத்திரராக இருக்கிறார். நல்லது. 47. அவள், அவரை நம்பினாள். அவள் கேள்வி கேட்கவில்லை. அவள் அவரை நம்பினாள். தேவ தூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தாவி உன் மேல் வரும்; உன்னதமான-வருடைய பலம் உன் மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். அவள், "உம்முடைய வார்த்தையின்படியே ஆகக்கடவது." என்று சொன்னாள். மேலும், அவள் ஒரு குழந்தை பிறக்கிறதற்கு முன்பாகவே தனக்கு ஒரு குழந்தை பிறக்க போகிறது, என்று ஜனங்களிடம் சாட்சி சொல்ல ஆரம்பித்தாள். மேலும், அவள் ஒரு மனிதனையும் அறியாமல், தனக்கு ஒரு குழந்தை இருக்க போவதாக, அந்த குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே, ஜனங்களிடம் சாட்சி பகர ஆரம்பித்தாள். அவள் அதை பற்றின உணர்வு அடைவதற்கு முன்னதாகவே, ஒரு ஜீவன் இல்லாமல் இருப்பதற்கு முன்னதாகவே, எந்தவித அத்தாட்சியும் இல்லாமல் இருக்கும் போதே சாட்சி பகர சென்று கொண்டு இருந்தாள். தேவனுடைய வார்த்தையை அப்படியே விசுவாசிக்க, தேவன் இன்னும் கொஞ்சம் மரியாள்களை ஈரியை சுற்றி தருவாராக. நீங்கள் பார்ப்பதற்கு முன்பு, உணர்வதற்கு முன்பு அவருடைய வார்த்தையை அப்படியே விசுவாசியுங்கள். அல்லேலூயா. ஓ, என்ன ஒரு அருமையான உணர்வு எனக்குள். நான் பயித்தியம் பிடித்தவன் என்று நினைக்க வேண்டாம். அப்படி இருந்தால் நான் சந்தோஷமாக இருப்பேன். அப்போது என்னை தனிமையாக விட்டு விடுங்கள். நல்லது. 48. ஓ சகோதரனே, தேவனை அவருடைய வார்த்தையில் ஒருவர் துணிந்து எடுப்பாரானால், தேவன் அப்படி சொன்னார். அவள் அது அப்படி தான் என்று சொல்லி, சாட்சி சொல்லிக் கொண்டிருந்தாள். தேவன் உங்களை சுகமாக்குவார் என்று சொல்லியிருந்தால், மேலும் அதை நீங்கள் நம்பினால், அவருடைய வார்த்தையை, அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு முடமாய் இருக்கிறீர்கள் என்ற பார்க்க வேண்டாம், எவ்வளவு குருடாய் இருக்கிறீர்கள் என்று எண்ண வேண்டாம். அவருடைய வார்த்தையில் தரித்து நில்லுங்கள். அதை சாட்சியாய் சொல்லிக் கொண்டு இருங்கள். தேவன் அதை நிறைவேற்ற கடமைபட்டு இருக்கிறார். ஆமேன். நல்லது. நான் ஒரு பாப்டிஸ்ட்டுக்கு மாறாக, சற்று அதிகமாக கத்துகிறேன் என்று நினைக்கிறீர்களா? ஓ-! பாப்டிஸ்ட்டுகளும் கொஞ்சம் உணர்ச்சி வசப்படு்வார்கள். நான் ஒரு வித்தியாசமான பாப்டிஸ்ட். நான் ஒரு பரிசுத்த ஆவியின் பாப்டிஸ்ட். ஆமென். அது சரி. என்னிடம் பரிசுத்த ஆவி உள்ளது. ஆகையால் பரிசுத்தாவியானவரோடு இருக்கும் அப்படிபட்டதான பாப்டிஸ்ட் தான் நாம் பெற்று இருக்க வேண்டும். என்னுடைய சில சகோதரர்கள் வெளியே வந்து, அதே காரியத்தை பெற்றார்கள் என்றால் பாப்டிஸ்ட் சபை மீண்டும் உயிர்ப்பிக்கும். அது சரி தானே. ஓ... 49. அவள் களிகூர்ந்து கொண்டே, சந்தோஷமாக எல்லாரிடமும் சென்று ஒரு மனிதனும் அறியாமல் அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறது என்று சொல்லி கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன். கொஞ்சம் கற்பனை பண்ணி பார்க்கிறீர்களா-? எனக்கு தெரியும்... தூதன் அவளுடைய இனத்தாளை பற்றி சொன்னார். மேலும் யூதேயாவின் மலைகளின் வழியாக அவளை பார்க்க சென்றாள். அவளால் கொஞ்சம் கூட தாமதிக்க முடியவில்லை. அந்த நல்ல செய்தியை கேட்டிருந்தாள். மேலும் எனக்கு சாராளை பார்க்க முடிகிறது... அல்லது எலிசபெத், ஒரு வேளை நெசவு பின்னி கொண்டு இருந்திருப்பாள். மேலும், மரியாள் வருவதை அவள் பார்க்கிறாள். மேலும் அவள் ஒடி சென்று மரியாள் மேல் தன் கரங்களை போட்டு, கட்டி பிடித்து அரவனைக்கிறாள். அவர்கள், ஒருவர் மீது ஒருவர், அன்பு கொண்டிருந்தனர். இந்நாட்களில், அந்த நாட்களை நாம் இழந்திருக்கிறோம். அது தான் உண்மை என்பது உங்களுக்கு தெரியுமா-? அது சரி. ஜனங்களால்... உங்களால் கூட... ஜனங்களுக்கு செய்ய முடியவில்லை... உங்களால் கூட முடியாது... யாராவது ஒருவர் கீழே நகரத்து பக்கம் செல்லுங்கள், அவர்களிடம் பேச முடியாது, அவர்களைப் போல உயர்ந்த பதவியில் இருந்தால் ஒழிய யாரும் அவர்களிடம் பேச முடியாது. மேலும் கீழ் நகரத்துக்கு சென்று பேசுங்கள், அவர்கள் ஒரு விதமான அலட்சியபடுத்தும் வித்ததில் சிரிப்பார்கள். ஓ சகோதரனே, எனக்கு அந்த பழைய மாதிரியான பம்ப் கைப்பிடி கைக்குலுக்குதல் பிடிக்கும். கீழே அடிமட்டத்திற்கு சென்று விடுங்கள். எப்படி இருந்தாலும் , நீங்கள் யார்-? ஆமென். அது சரி. யாரிடமும்... அன்பு கிடையாது. செய்தி தாள்களில், உங்கள் அண்டை வீட்டுக்காரர் இறந்ததை பற்றி வாசிக்கும் வரை அவர் இறந்ததது கூட தெரியாது. இனி ஜனங்களுக்கு அன்பு காட்டவே முடியாது. நீங்கள் அதை இழந்து விட்டீர்கள். 50. முந்திய காலங்களில் பணம் இல்லாமல் போனால், அண்டை வீட்டாரிடம் சென்று 50 டாலர் கடன் வாங்கி வீட்டை நடத்துவோம்.ஏன் -? நாம் எந்த பத்திரத்திலும் கையெழுத்து போட அவசியமில்லை. ஒருவரை ஒருவர் நம்பினோம். இப்பொழுதோ 5 டாலர் கடன் வாங்குவதற்கு 10 டாலர் பத்திரம் பாதுகாப்பிற்காக வாங்க வேண்டும். அது சரியா. அன்பு இல்லை. வேதாகமம் சொல்கிறது, "அன்பு தணிந்து போகும் காரணத்தால்_ அந்த அன்பு... அக்கிரமம் பெருகுவதால், அநேகருடைய அன்பு தணிந்து போகிறது." அது தான் இந்த உலகத்தின் காரியமாக உள்ளது. அன்புக்காக ஏங்குகின்றனர். நமக்கு அதிக அளவு போதிக்க முடியும், அதிக சபைகள் உள்ளன, ஆனால் தேவனின் அன்பு நமக்கு தேவை. அல்லேலுயா. இன்றைக்கு என்னுடைய காரியம் என்னவென்று தெரியுமா....... பாருங்கள். உங்களுக்கு சொல்லுகிறேன் சகோதரனே. அவர்கள் அங்கே இருந்தனர். அவள் சந்தோஷமாக களிகூர்ந்ததை என்னால் பார்க்க முடிகிறது. மேலும் அவள் ஓடினாள், அவள் கரங்களை அவள் மீது போட்டு கட்டிப்பிடித்தாள், ஓ எவ்வளவு சந்தோஷமாக இருந்தாள்; காரணம் அதை _ அதை பற்றி கேட்டிருந்தாள். 51. இப்போது, அவள் சொல்லுவதை என்னால் கேட்க முடிகிறது......... அவளை கட்டிப் பிடித்தாள், மற்றும் அவளை நேசிக்க ஆரம்பித்தாள், மேலும் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொண்டனர். அது எனக்கு பிடிக்கும். உங்களுக்கும் அப்படித் தானே-? பெண்கள் ஒருவரை ஒருவர் அப்படி சந்திப்பதை பார்க்க எனக்கு பிடிக்கும்-? மேலும் ஆண்கள் கட்டி இழுப்பதை பார்க்க எனக்கு விருப்பம். கொஞ்சம் நாட்களுக்கு முன்னாள் ஒரு மனிதன் அங்கே வந்தார், என் கரங்களை பிடித்தார், தன் கரங்களை என் மீது போட்டு அரவனைத்தார். ஒரு வாலிபன். அவர் சொன்னார் "சகோதரன் பிரன்ஹாமே நான் உங்கள் கூட்டங்களில் இருந்தேன். மற்றும் என் சிறுமி குணமடைந்தாள்." ஏதோ ஒன்றினால் சுகம் பெற்றாள், என்னவென்று நான் மறந்து விட்டேன். மற்றும் அவர் சொன்னார். "நீங்கள் அங்கு நின்று கொண்டு சொன்னீர்கள், கர்த்தர் உரைக்கிறதாவது, அந்த குழந்தை ஒரு குறிப்பிட்ட பொருளாய் இருப்பாள். "கவனியுங்கள் அவர் சொன்னப் பிரகாரமாக அப்படியே நடந்தது. அது சரி தானே. மேலும் அவர் தனது கரங்களை என் மேல் போட்டு அரவணைத்தார். அது எனக்கு பிடிக்கும் நான் ஒரு பழைய காலத்து காட்டகம் உட்காட்டில் வசிக்கும் துணிச்சலான போதகர் போல இருக்க எனக்கு பிரியம். ஆமாம் ஐயா. அதை நான் நம்புகிறேன். எனக்கு அந்த பழைய காலத்து, வானநிற நீல, பாவத்தை கொல்லும் மதம் தான் பிடிக்கும். அது உங்களை வெள்ளை அடிக்காது, ஆனால் அது உங்களை வெண்மையாக கழுவும், கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புது சிருஷ்டியாக மாற்றும். ஆமென். சாத்தானை பைத்தியம் ஆக்கும். 52. கவனியுங்கள், சமீபத்தில் கீழே ஃப்ளோரிடாவில் நான் இருந்தேன். மற்றவர்களை விட தாங்கள் மேலானவர்கள் என்று எண்ணும் மனிதர்களை நான் பார்க்கிறேன். சகோதரனே நமக்கு நிறைய அப்படிப்பட்டத்தான காரியங்கள் உண்டு. அது சரி தானே. எப்படி இருந்தாலும் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள். 6 அடி அழுக்கு. சமீபத்தில் நான் ஒரு அருங்காட்சியகம் பக்கமாக சென்றுக் கொண்டிருந்தேன். 150 பவுண்ட்ஸ் எடையுள்ள ஒரு மனிதனின் சரீரத்தை ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தனர். அதின் மதிப்பு 84 சென்ட். அது சரி தானே. 150 பவுண்ட் எடை உள்ள மனிதனுக்கு 84 சென்ட் மதிப்புள்ள ரசாயனங்கள் தான் உள்ளது. அது ஒரு கோழிக் கூண்டை வெள்ளை அடிப்பதற்கு தூவும் அளவிற்கு தான் அது உள்ளது. ஓ எனக்கு தெரியாது, ஒரு பேனா முனையில் ஒரு சிறிதளவு கால்சியம் வைக்கும் அளவிற்கு அல்லது அது போன்ற ஏதோவொன்று வைக்கும் அளவுக்கு தான் அது உள்ளது. 84 சென்ட் மதிப்பு தான் உள்ள அதின் மீது நீங்கள் 5 டாலர் மதிப்புள்ள தொப்பியை போட்டு மூக்கை உயர்த்தி, பெருமிதமாக நடக்கிறீர்கள். மழை பெய்தால் நீங்கள் மூழ்கி விடு்வீர்கள். சில பெண்கள்... இருக்கிறார்கள். அது சரியா. நீங்கள் நினைக்கிறீர்கள், நீங்கள் ஏதோ பெரிய ஆள் என்று. அது சரியா. சகோதரனே, இந்த நாட்களில் இந்த உலகிற்கு என்ன தேவை என்றால், ஒரு புது மனிதன் அல்ல, அல்லது ஒரு புதிய ஜனாதிபதி அல்ல, ஆனால் பழைய மாதிரியான தூய பவுலின் எழுப்புதல், மற்றும் வேதாகமம், பரிசுத்த ஆவி தன்னுடைய ஆலயத்தில் வல்லமை கொண்டு போதிப்பது. அது சரியா. 53. நாம் கூட்டங்களையும் எழுப்புதலையும் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். நமக்கு........ கூட்டங்கள் உண்டு. ஆனால் ஒரு எழுப்புதலும் கிடையாது, நமக்குத் தேவையானது எழுப்புதல். கிழித்துக் கொண்டு அடி மட்டத்துக்கு செல்லுங்கள். போதகர்கள் பீடத்தை பிடித்துக் கொண்ட கண்ணீர் விட வேண்டும், ஆமென் ஆமென். நீங்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம். அது என்ன அர்த்தம் கொள்ளும் என்றால், அது அப்படியே ஆகட்டும். எனக்கு ஒரு பழைய நாய் ஒன்று இருந்தது, அந்த நாய் இந்த உலகத்தில் எதற்கு வேண்டுமென்றாலும் மரம் ஏறுவான், ஆனால் ஒரு மரநாய் அல்லது முடைவலிமா என்று சொல்லக் கூடிய துர்நாற்றம் வீசும் பாலூட்டி இனத்தை சேர்ந்த மிருகத்தை பார்த்தால், மரம் ஏற மாட்டான், நான் அவன் மரம் ஏற வைத்தாலும் அவன் அந்த முடைவலிமா சுத்தி சுத்தி ஓடுவானே தவிர அதை எனக்கு பிடித்துக் கொண்டு வர மாட்டான், ஒரே ஒரு வழி தான் எனக்குத் தெரிந்தது. அவனை அணைத்துக், தட்டி கொடுத்து, தழுவி சொன்னேன், "மேற் கொண்டு வா ஃபிரிட்ஸ்" சகோதரனே, அவன் சென்று அந்த முடைவலிமாவை, பிடித்து வந்தான். நான் அறிந்ததிலேயே, மிகவும் மோசமான முடைவலிமா எது என்றால் அது தான் சாத்தான். மேலும் இந்த மதியம் அவனை கட்டவேண்டும் என்றால் உரத்த சத்தமாக விரட்டுங்கள்." ஆமென் "அது, அது" அவனை மேற்கொள்ள வேண்டும், நாம் சென்று அவனை பிடித்து, கட்டி போடவேண்டும், அது சரியா. 54. இப்போது கவனியுங்கள், ஒரு முறை மியாமி என்னும் ஒரு இடத்தில், ஒரு ராணி அல்லது அது போல ஒருத்தி இருந்தாள், சகோதரன் போஸ்வார் சொன்னார், "சகோதரன் பிரன்ஹாம், ஏதோ ஒரு தீவின் ராணி, உங்களை சந்திக்க வேண்டும் என்றாள்." என்று சொன்னார். நான் சொன்னேன், "நல்லது, அவள் யார், வேறொருவரை விட மேலானவளா-?" பாருங்கள்-? அவர், "நல்லது, அவள் உங்களை சந்திக்க வேண்டும் என்று சொன்னாள், நீங்கள் அந்த கூடாரத்துக்கு பின் பகுதியில் இருப்பீர்களா" என்று சொன்னார். மற்றும் நான் சொன்னேன்......நல்லது, அவர் மேலாளர், ஆகையால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மேலும் நான் சொன்னேன் " சரி ஆகட்டும். அவர் அந்த கூடாரத்துக்கு வெளியே சென்ற போது, அங்கே ஒரு சிறிய பழைய இடம் இருந்தது _ கைறுகள் பிடுங்கப்பட்டு இருந்தன. மேலும், அதன் வழியாக ஒரு பெண் வந்தாள், ஒரு துப்பாக்கி துணியை அடைப்பதற்கு தேவையான துணியை மட்டும் உடுத்தி இருந்தாள். காதணிகள் கீழ் வரைக்கும் தொங்கி கொண்டு இருந்தன. அதை பார்கும் போது சாத்தான் அவள் கழுத்தை குதிரையின் சேணம் ஆகவும் மற்றும் காதனியை குதிரையின் சேணத்தின் வலையமாகவும் உபயோகிப்பது போல் இருந்தது. எப்படியும் அவன் அவளை நரகத்தை சுற்றி சவாரி செய்தான். அது சரி தானே. 55. இதோ அவள் கீழ வருகிறாள், ஒரு ஜோடி கண்ணாடியை ஒரு கம்பின் மீது இவ்வளவு தொலைவில்... வைத்துக் கொண்டு வருகிறாள், உங்களுக்கு தெரியுமா-? ஜனங்கள் அவ்வளவு தூரம் இருக்கும் கண்ணாடியின் முன் பார்க்க முடியாது. அதை அப்படி வைத்து கொண்டு வந்தாள், அதை ஒரு கம்பின் மேல் இப்படி வைத்து கொண்டு வந்தாள். மேலும் அவள் அதின் வழியாக வந்தாள். அந்த காம்பை அப்படி வைத்து கொண்டு, அதை பார்த்து கொண்டு, கீழே பார்த்தபடி வந்தாள். ஏதோ ஒன்றின் மீது விழாமல் வந்தது ஆச்சரியமாக உள்ளது. அவள் அப்படி இருந்தாள். மேலும் அவள் என்னிடம் நேராக வந்து. "நீங்கள் டாக்டர் பிரன்ஹாமா-? " என்று சொன்னாள். நான் சொன்னேன், "இல்லை அம்மையாரே, இல்லை அம்மையாரே" "நான் சகோதரன் பிரன்ஹாம்" என்று நான் சொன்னேன். அவள் கையை உயர்த்தினாள். அவள் சொன்னாள், "உங்களை சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று வசீகரித்தாள்." நான் சொன்னேன், "கீழே போடு இங்கே, உன்னை மீண்டும் பார்க்கும் போது, நீ யார் என்று தெரியும் ." அது சரியா. சகோதரனே எப்படி ஆயினும் நாம் யார்-? 6 அடி அழுக்கு. அல்லேலூயா. தேவனுடைய கிருபையினால் நம்முடைய இருதயம் மாற்றப்பட்டிருக்கிறது. மேலும்......-?.......மற்றும் நாம் நம்மாலே அல்ல, அவருடைய கிருபையால் நாம் இரட்சிக்கப்பட்டோம். 56. அன்றொரு நாள் நான் ஒரு சிறிய வயதான பெண்மணி ஒரு பெரிய ஆலயத்துக்குள் செல்வதை அந்த பட்டணத்தில் பார்த்தேன். மேலும் அவள் கீழே வந்த தன்னுடைய மகளையும் வந்து அழைத்துக்கொண்டு சென்றார். மேலும் அவள் நடந்து சென்றாள். அவள் ஒரு பழைய காலிகோ ஆடை என்று சொல்லக்கூடிய பலவர்ண கோமாளி உடையை போல் உடுத்தி இருந்தாள். அது சரக்கு துணிகள் என்று கூறுவோம். மேலும் அவள் அங்கு நடந்து சென்றாள். மற்றும் அந்த போதகர் ஏதோ ஒன்று கூறினார், அதற்கு அந்த பெண், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று கூறினாள். மற்றும் எல்லாரும் தங்களுடைய கழுத்தை அப்படியே நீட்டி, ஒரு குளத்துக்குள் இருந்து வாத்துகள் பார்ப்பது போல் சுற்றி அது என்ன என்று அவளை பார்த்தார்கள். ஏன் அது எல்லோரையும் உற்சாகபடுத்தியது. அவர்கள் யாரும், "ஆமென்" என்று சொல்வதை கேட்கவில்லை. அவள் கென்டக்கியில் இருந்து வந்தாள், அங்கே கொஞ்சம் பக்தி இன்னும் இருந்தது. அதன் பின் அந்த பெண் சுற்றி வந்தாள், மேலும் அந்தப் போதகர், "மற்றும் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து." சொன்னார். அவள் சொன்னாள், "மகிமை" அந்த போதகர் சொன்னார் "ஆகா-! ஆகா-! அஹம்-!" "நான் தடை செய்யபடுகிறேன்." ஓ சகோதரனே, ஒருவேளை நீங்கள் அதை சொல்லவில்லை என்றால், அது என்னை தடை செய்யும். நல்லது. கவனியுங்கள். அதற்குப் பிறகு, அவர் இன்னும் சில வார்த்தைகளை சொன்னார். மற்றும் அவள் சொன்னாள், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அது நல்லது." மற்றும் அங்கு நடத்துபவர்கள் ஆலயத்தினின்று அவளை வெளியே தள்ளிவிட்டனர். நான் நினைத்தேன், "ஓ ஆம். அவளுடைய பெயர் ஒரு வேளை, யாரு, யாருடைய என்பதில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நான் சவால் விட்டு சொல்கிறேன் அது ஆட்டுகுட்டி ஆனவரின் ஜீவ புத்தகத்தில் எழுதி இருக்கிறது. அங்கு தான் என்னுடைய பெயரும் இருக்க விரும்புகிறேன். சகோதரனே, "யார் யார்" என்று அல்ல. தேவன் யார் யார் என்பதில் என் பெயர் இருக்க வேண்டும். 57. நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த நாட்கள் ஒரு சிறந்த பொருத்திக் கொள்ளும் நேரம் என்று சொல்வேன். நீங்கள் அதை நம்புகிறீர்களா-? உங்களுடைய படிகளை சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசுவீர்கள் என்றால், உங்கள் அண்டை வீட்டுக்காரர்களும் உடனே அப்படி செய்வர்: பொருத்தி கொள்ளும் நேரம் எல்லோரும் வேறொருவர் போல் ஆள் மாறாட்டம் செய்கின்றனர். பொருத்துதல். நான் எப்பொழுதும் சொல்வேன், என்னுடைய கால் அணிகள் என்னுடைய கால் சட்டையோடு பொருத்துகிறதா அல்லது என்னுடைய மேல் சட்டை என்னுடைய கோட்டுடன் பொருத்துகிறதா இல்லையா என்பதை பற்றி எனக்கு அக்கறை இல்லை. என்னுடைய அனுபவம் தேவனுடைய வேதாகமத்தோடு பொருத்துகிறதா என்பது தான் எனக்கு வேண்டும். "நீ மறுபடியும் பிறக்க வேண்டும்" என்று அவர் சொன்னதும், அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்ற அந்த பெந்தேகோஸ்தே நாளின் அனுபவம் தான் எனக்கு தேவை. என்னுடைய அனுபவமும் அதோடு பொருந்த வேண்டும் ஆமென். பேதுரு சொன்னார், "இது தான் அது" ஒருவேளை இது அதுவாக இல்லை என்றால்; அது வரும் வரைக்கும் நான் இதை வைத்திருப்பேன். நான் அதை செய்யப் போகிறேன். ஆமென். இதோட எனக்கு நல்ல நேரம் இருந்து கொண்டு இருக்கிறது. எல்லாம் சரி. 58. மரியாள் அவளை அரவணைத்து சொல்லுவதை என்னால் காண முடிகிறது, "ஓ எலிசபெத், உன்னை மீண்டும் பார்க்கிறது எத்தனை இனிமையாக உள்ளது. உனக்கு, உன் வயது சென்ற இந்த காலத்தில் ஒரு குழந்தை பிறக்க போவதாக நான் இப்போது தான் கேள்விப்பட்டேன் என்று சொன்னாள்." எலிசபெத் சொல்லுவதை என்னால் கேட்க முடிகிறது,"ஆமாம், மரியாலே அது சரியானது. எனக்கு-எனக்கு ஒரு குழந்தை பிறக்க போகிறது. ஆனால் அது என்னை வருத்தத்துக்குள் ஆக்குகிறது. பார்-? 6 மாதம் ஆகிறது. ஆனால் இன்னும் ஒரு ஜீவனும் இருப்பது போல் தெரியவில்லை. முற்றிலுமாக குறைபாடு உள்ளதாக இருக்கிறது. பார்-? ஜீவன்... வரும். உனக்கு 3 அல்லது 4 மாதங்கள் இருப்பது போல் தெரிகிறது, அது போல ஏதோ ஒன்று, 2 1/2 மாதம், சொன்னாள், "ஆனால் அதற்கு இன்னும் ஜீவன் இல்லை." மேலும் மரியாள் சொன்னாள், "உனக்கு தெரியுமா ..........." ஓ. எனக்கு தெரியும், நான் இங்கே இருக்க வேண்டும், ஆனால் என்னால் முடியாது. 59. பார், சொன்னாள், "உனக்கு தெரியுமா, பரிசுத்த ஆவி என் மீது வந்து நிழலிட்டது, மற்றும் ஒரு மனிதனும் அறியாமல் எனக்கும் ஒரு குழந்தை பிறக்க போகிறது. மேலும் அக்குழந்தையை இயேசு என்று அழைக்க வேண்டும் என்று கூறியது " என்றாள். மற்றும் அதை அவள் "இயேசு" என்று சொன்ன மாத்திரத்தில், சின்ன, யோவான் அவனுடைய தாயின் வயிற்றில் துள்ளினான். இப்படி குதித்தான், ஜீவனை பெற்றுக் கொண்டான். முதன் முறையாக இயேசு கிறிஸ்து என்னும் பெயரை, மரணிக்கும் உதடுகளில் சொன்ன போது, ஒரு செத்த குழந்தை தன் தாயின் வயிற்றுக்குள், ஜீவனை பெற்றது. சகோதரனே, ஒரு செத்த குழந்தையை ஜீவனுக்குள் கொண்டு வரும் என்றால், மறுபடியும் பிறந்த சபைக்கு அது என்னவெல்லாம் செய்யும். அல்லேலூயா. அது சரி தானே, அது ஒரு முடவன் நடப்பதையும், குருடன் பார்ப்பதையும், செவிடர் கேட்பதையும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அது செய்யும் என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. சின்ன யோவான் தன் தாயின் வயிற்றுக்குள் செத்த நிலையில் இருந்தான், மற்றும் எலிசபெத் சொன்னாள், "என்னுடைய தேவனின் தாய் என்னிடம் வந்த மாத்திரத்தில்-?" சொன்னாள், என்ன ஒரு குழந்தை (அல்லேலூயா), என்ன ஒரு பெயர்: "உன்னுடைய வாழ்த்துதல் என் காதில் வந்த போது, என்னுடைய குழந்தை என் வயிற்றில் சந்தோஷத்தினால் துள்ளி குதித்தது." 60. சகோதரனே, ஒரு கூட்ட மறுபடியும் பிறந்த ஜனங்களுக்கு அது என்னவெல்லாம் செய்யும்-? ஆனால் அந்த பெயரை உங்களால் சபிக்க முடியாது, அதை கேலி பரியாசம் செய்ய முடியாது. மேலும் அந்த பெயரில் சந்தேகித்து அதில் சந்தோஷத்தை பெற முடியாது. அதை உன் இருதயத்தில் மரியாதை செலுத்த வேண்டும். உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்க வேண்டும்.நல்லது. அங்கே சில நாள் அவர்கள் தங்கி இருந்தனர். பின் கொஞ்சம் நாள் கழித்து சின்ன யோவான் பிறக்க போகிறான். அவன் பிறந்த உடன்... சுமார் 9 வயதாகும் போது, அவன் எந்த இறையியல் கல்லூரிக்கும் போகவில்லை அல்லது கல்லறைக்கு போகவில்லை. அது ஒரு _ ஒரு இறையியல் கல்லூரி என்று பொருட்படுத்தினேன். அது எல்லாம் ஒரே மாதிரி தான். அது செத்த இடம். அது சரிதானே. உங்களுக்கு ஒன்று தெரியுமா-? ஒரு இறையியல் கல்லூரி போதகர் ஒரு கோழி அடைகாக்கும் சாதனம் (incubator) உள்ள கோழியை போல் இருப்பதாக என் மனதில் தோன்றும். ஒரு சிறிய, பழைய கோழி குஞ்சு, கொக் கொக் கொக் என்று கூப்பிட்டு கொண்டே இருக்கும். ஆனால் ஒரு அம்மாவிடமும் போக முடியாது. ஒரு அடைக்காக்கும் போதகரின் (incubator preacher) வழியும் அது போல தான் இருக்கிறது. வாசிப்பதிலும், எழுதுவதிலும் கணிதம் போடுவதிலும், தவிர தேவனை பற்றி ஒன்றுமே தெரியாது. அதைவிட ஒரு முயலுக்கு பணி காலணிகளை போட நன்றாக தெரியும். உங்களுக்கு தெரியுமா அது தான் உண்மை. அது சரி. 61. அதற்கு விரோதமாக எனக்கு ஒரு காரியமும் இல்லை. ஆனால் இன்றைக்கு நமக்கு என்ன தேவை ........ எனது மகனுக்கு ஒரு உடைந்த பீன்ஸ் (split beans) க்கும் காப்பிக்கும் (coffee) வித்தியாசம் தெரியாமல், பரிசுத்த ஆவியை பெற்றிருக்கும் ஒரு மனிதனை காட்டிலும் உலகத்தில் உள்ள எல்லா கல்வியை பெற்று அவனுக்குள் புகுத்தும் மனிதன் வேண்டாம். அது சரி தானே. அல்லேலூயா, நான் கொஞ்சம் பரவசம் அடைகிறேன். பாருங்கள், சகோதரனே, உங்களுக்கு ஒரு காரியம் சொல்கிறேன். கர்த்தர் உரைக்கிறதாவது, "பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்". அங்கே தான் அது. ஆமாம் ஐயா அவர் அவரை நம்பினார். 62. மற்றும், இப்போது கவனியுங்கள். வனாந்தரத்தில் ஒன்பது வயது குழந்தை தங்கி இருக்கும் என்றால் அது... எப்படிபட்ட குழந்தையாய் இருக்கும்-? மற்றும் 30 வயதில் வெளியே வரும் போது, சகோதரனே மிகவும் வல்லமையாய் சுவிசேஷத்தை பரப்பினார். அவர் சுவிசேஷத்தை யோர்தான் நதி கரையில் பிரசங்கித்து கொண்டு வந்தார். அவர் எருசலேமை சுற்றி உள்ள எல்லா இடங்களையும் கலக்கினான்., எல்லோரும் அவன் சொல்வதை கேட்க நதிக்கரையில் நின்றுக் கொண்டு இருந்தனர். அவன் விலை உயர்ந்த ஆடை (tuxedo suit) அணிந்து, தன் சட்டை காலரை தூக்கி விட்டு வரவில்லை. இல்லை. அவன் ஒரு ஜோடு பழைய முடி நிறைந்த கால் சட்டைகளை அணிந்து, ஆட்டு மயிர் கொண்ட இடைக்கச்சையை தன் இடுப்பில் சுற்றி, இப்படி கட்டி கொண்டு தோன்றினான். ஆனால் யோர்தானை சுற்றி இருந்த எல்லா இடங்களையும் கலக்கினான். காரியம் என்ன-? அவன் கிறிஸ்துவை பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பற்றி பிரசங்கித்தான். மேலும் நான் சொல்கிறேன் சகோதரனே; அது தன் வல்லமையினாலும், எளிமையினாலும் பிரசங்கிக்கப்படும் என்றால், அது எந்த தேசத்தையும் கவர்ந்து, கிறிஸ்துவின் சுவிசேஷத்தை கவர்ந்திழுக்கும். ஆமென். 63. நான் கீழே வரும்படி சகோதரன் பாக்ஸ்டர் சொன்னது என்னை மகிழ்விக்கிறது: நான் பக்தி பரவசமடைகிறேன். கவனியுங்கள். முதலாவது காரியம் என்னவென்றால், அவன் என்ன செய்தான்-? அவன் எல்லா இடங்களையும் கலக்கினான். ஒரு நாள் சுமார் பகல் 11 மணி அளவில், அவன் பிரசங்கித்து கொண்டிருந்தான். மற்றும் அங்கே ஒரு வயதான பிரசங்கியார் சொன்னார், "நமக்கு அனுதின பலி செலுத்த கூடாத நேரம் வந்து கொண்டிருக்கிறது என்று எனக்கு சொல்லுகிறீர்களா-? ரபி. நீங்கள் தவறு செய்கிறீர்கள்." அவன், "ஒரு நேரம் வரபோகிறது, அப்போது ஒரு மனிதன், பலியாவார்." என்று சொன்னான். "ஓ" அவர் சொன்னார். "அது அப்படி இருக்கலாகாது." நதியின் அந்த புறத்தில் அனேகர் நின்றுக் கொண்டிருந்தனர். அவனுடைய கூட்டம் பெரிதாகி கொண்டே இருந்தது. சிறிது நேரம் கழித்துத் நான் பார்க்கிறேன், மற்றும் இங்கே ஒருவர் கீழே வந்துக் கொண்டிருக்கிறார். அவன் சொன்னான், "இதோ......." "இதோ" என்றால் குறிப்பிட்ட ஒன்றை பார்க்கவும். "இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவாட்டு குட்டி." அதோ அவர் அங்கே வருகிறார், ஒரு சாதாரண சிறிய மனிதன், நீல நிற அங்கியை உடுத்திக் கொண்டு மற்றும் முடி பறந்து கொண்டு சுமார் 30 வயது உடையவராய் நடந்து கொண்டு வருகிறார். ஓ, என்ன ஒரு மனிதன். சகோதரனே, நான் உங்களுக்கு சொல்லுகிறேன், அதோ எல்லா ராஜகுமாரர்களுக்கும் ராஜகுமாரன், ராஜாதி ராஜா, தேவாதி தேவன், ஜீவனுள்ள தேவனுடைய குமாரன், தேவனின் தெய்வீக வாக்குத்தத்தம். 64. தேவன் அவருடைய வாக்குத்தத்தக்கத்தை காப்பாற்றுவதற்கு கடமைப்பட்டிருக்கிறார் இஸ்ரவேலர்களை தேவன் வனாந்தரத்தில் கொண்டு வந்த போது, வெளியே வனாந்தரத்தில் அவர்களை பாதுகாப்பதாக வாக்கு அருளினார். தேவன் என்ன வாக்குத்தத்தம் செய்தாரோ அதை நிறைவேற்ற அவர் கடமைப்பட்டு இருக்கிறார். தண்ணீர் தேவைபடும் போது அவர்கள் கன்மலைக்கு ஓடினார்கள். உணவு வேண்டும் போது, தேவன் பரலோகத்தில் இருந்து மன்னாவை அனுப்பினார். சிவந்த சமுத்திரத்தை பிளந்தார். கீழே விழுகிற மன்னாவை பாருங்கள், இந்நாட்களில் நமக்கு இருக்கும் சபைக்கு என்ன ஒரு அழகான மாதிரி. கர்த்தர் இயற்கையாக இஸ்ரேவேலரை நடத்தி சென்றது போல இன்றைய சபையை ஆவிக்குரிய விதமாக நடத்தி செல்கிறார். இதை கவனியுங்கள். அவர்கள் சிவந்த சமுத்திரத்தை கடந்த பிறகு எல்லா ஆளோட்டிகளும் இறந்து போய்விட்டனர். சிவந்த சமுத்திரம் இயேசு கிறிஸ்துவின் இரத்தம். உலகத்தின் காரியங்களில் இருந்து சுத்திகரிக்கபட்டு இரத்தத்தின் வழியாக வருங்கின்ற மனிதன், புதிய மக்களுடன், ஒரு புதிய பூமியில், இந்த அக்கரையில் உட்கார்ந்திருப்பான். அங்கே தான் மிரியாம் மிகுந்த சந்தோஷம் அடைந்தாள். ஒரு தம்புருவை எடுத்து கொண்டு நடனமாடிக் கொண்டு சென்றாள். கீழே கரையோரம் நடனமாடிக்கொண்டு செல்லும்போது, இஸ்ரவேலின் குமாரத்திகள் அவளை பின்தொடர்ந்தனர். மோசே ஆவிக்குள்ளாகி, ஒரு பாடலை ஆவியில் பாடினார். அது ஒரு பழைய மாதிரியான பரிசுத்த ஆவியின் கூட்டமாக இல்லாமல் போனால், என்னுடைய வாழ்க்கையில் நான் ஒன்றை பார்த்ததே இல்லை. அங்கே தான் நீங்கள். அவர்கள் புதிய தேசத்துக்கு கடந்த சென்ற பிறகு, கர்த்தர் அவர்களை நான் பாதுகாப்பேன் என்று சொன்னார். 65. அதற்கு பின், நான் கவனித்த போது, அந்த இரவு, அவர்களுக்கு அப்பம் இல்லாமல் இருந்தது. அவர்கள் எதை குறித்தும் கவலைப்படவில்லை. ஆனால் கர்த்தர், பரலோகத்தில் இருந்து மன்னாவை பெய்ய பண்ணினார், அது பூமியின் மேல் விழுந்தது. மேலும் அவர்கள் சென்று அதை அள்ளிகொண்டனர். அவர்கள் அது தேனை போல ருசியாக இருந்தது என்று சொன்னார்கள். நீங்கள் அதில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டு இருக்கிறீர்களா-? ஓ அது நன்றாக இருக்கும். ஓ என்ன, நீங்கள் கொஞ்சம் தேனை ருசிபார்த்து இருக்க வேண்டி இருந்தது. உங்களுக்கு தெரியுமா, பழைய ஏற்பாட்டின் தாவீது-? அவன் ஒரு மேய்ப்பனாக இருந்தான். அவன் தான், அது தேனை போல ருசியாக இருக்கும் என்று சொன்னான். கன்மலையின் தேனை போல ருசியாக இருக்கும் என்று சொன்னான். தாவீது அதை பற்றி பேசும் போது... அவன்... இதை எடுத்து செல்வான். மேய்ப்பர்கள் ஒரு பையை அவர்கள் இருபக்கத்திலும் எடுத்து செல்வார்கள். மேலும் அதில் தேனை போடுவார்கள். மேலும் அவர்களின் ஆடுகள் வியாதியாய் படுக்கும் போது இந்த தேனை பாறையின் மீது வைப்பார்கள், மேலும் அந்த ஆடுகள் அந்த பாறையில் வழியும் தேனை நக்கும். அந்த பாறையில் உள்ள தேனை நாக்கும் போது, அதிலிருக்கும் சுண்ணாம்பையும் நக்கும், அதன் பின் சுகமடையும். பாருங்கள்.-? அவர்கள் தேனை அந்தப் பாறையின் மீது வைத்து, அதை அந்த ஆடுகள் நக்கும்படி செய்வார்கள். மேலும் அவைகள் அந்த தேனை நக்கும். அந்தத் தேனை நக்கும் போது அவைகளுக்கு கொஞ்சம் சுண்ணாம்பு சத்து அந்த சுண்ணாம்பு பாறையில் இருந்து கிடைக்கும். மற்றும் அந்த சுண்ணாம்பு சத்து அந்த ஆடுகளை சுகமாக்கும். 66. பண்டைய காலத்தில் ஜனங்களை வெறி நாய் கடித்தால், அவர்களை எடுத்து பயித்திய கல் (madstone) என்று சொல்லக்கூடிய கல் மீது போட்டு விடுவார்கள், அந்த நபர் அந்த கல் மீது ஒட்டிக்கொண்டால், அவர்கள் சுகம் பெறுவார்கள். அப்படி ஒட்டிக் கொள்ளவில்லை என்றால் அவர்கள் மரித்து விடுவர். மேலும் கொஞ்சம் நேரத்துக்கு முன்பாக நான் சொன்னேன், எனக்கு தெரிந்த மிகவும். மோசமான வெறி நாய் எதுவென்றால், அது சாத்தான். அவன் உங்களை கடித்து விட்டு, உங்களை சுகவீனமாக்கினால் இயேசு கிறிஸ்து என்னும் கன்மலைக்கு ஒடிவிடுங்கள். அவரோடு ஒட்டிக் கொள்ளுங்கள்; அதோடு தொங்கிக் கொண்டு இருங்கள், பிடித்துக் கொள்ளுங்கள், விட்டுவிடாதீர்கள், சிலுவையின் இறக்கைகளின் மீது தொங்கிக் கொண்டு இருங்கள். நீங்கள் நிச்சயமாக சுகம் பெறுவீர்கள். ஆமென். மீண்டும் அந்த மன்னா....... உங்களுக்கு வேற ஒன்று இங்கே நான் தருகிறேன். அந்தப் பழைய பண்படுத்தப்படாத தங்க கட்டிகள் (nuggets) எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கும் அப்படித்தானே-? ஆமாம் ஐயா, அதை நன்றாக உரசி விட்டு அது எப்படி இருக்கிறது என்று பாருங்கள். 67. பின்பு, தேவன் ஆரோனிடம் சொன்னார் .......இப்போது, அவர் சொன்னார், "இப்போது அதில் ஒன்றையும் மீதம் வைக்காதே. அதை வைப்பாய் என்றால் அது கெட்டுப்போய் விடும்." அது தான் எல்லா பெந்தேகோஸ்தே ஜனங்களுடன் இருக்கும் காரியம். நீங்கள் மீதம் உள்ளதை வைத்துக் கொள்கிறீர்கள். "20 வருடங்களுக்கு முன்னால் எனக்கு ஒரு அனுபவம் உண்டு. சகோதரனே அந்த அனுபவம் இப்போது வாலை ஆட்டிக்கொண்டிருக்கிறது. சரியாக இப்போது அது எப்படி இருக்கும்.-? நீங்கள், "நான் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்ற போது எனக்கு சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை பெற்றேன் என்று சொல்லுகிறீர்கள்." இப்போ மட்டும் என்ன-? முந்தி இருந்த அந்த அனுபவம் போய்விட்டது. இன்றைக்கு ஒரு புது அனுபவம் கிடைத்தால் என்ன-? ஒவ்வொரு நாளும் அவர்கள் புதிய மன்னாவை சேகரித்தார்கள், மற்றும் ஒரு மன்னாவானது, தேவனிடத்தில் இருந்த வருகின்ற பரிசுத்த ஆவிக்கு பரிபூரண மாதிரியாக உள்ளது. வனாந்தரத்தில் அவர்களை நடத்தி சென்றவர், இன்றைய நாளில் நம்முடைய பிரயாணத்தில் நடத்தி செல்லும் பரிசுத்த ஆவி. நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்றுக் கொண்டிருக்கிறோம். அது சரி தானா-? "என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உள்ளன. அது அப்படி இல்லை என்றால், நான் உங்களுக்கு சொல்லி இருப்பேன். நான் சென்று உங்களுக்கு ஒரு இடத்தை ஆயத்தம் செய்கிறேன்" அது சரி தானா-? நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இடத்திற்கு சென்று கொண்டு இருக்கிறோம். கவனியுங்கள், நாம் அனுதினமும் பரலோகத்திலிருக்கும் தேவனிடத்தில் இருந்து வரும் பரிசுத்த ஆவியினால் ஊட்டப்படுகிறோம். அது நமது ஆத்துமாவிற்கு கன்மலையிலிருந்து வரும் தேனை போல மதுரமாக இருக்கும். என் வாழ்கையில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அது எனக்கு தேவைப்படுகிறது. இல்லை என்றால் நான் மரித்து விடுவேன். அது உண்மை. அது கண்டிப்பாக என்னிடம் வரவேண்டும் அல்லது எனக்கு வாழ முடியாது. அது வரும் உங்களிடம் கண்டிப்பாக வரும் அல்லது நீங்கள் வாழ மாட்டீர்கள். அது சரியா. 68. இப்போது கவனியுங்கள். நான் நெருங்கி வரலாம் என்று இருக்கிறேன். நல்லது முதலாவது இந்த மாதிரியை உங்களுக்கு காட்டலாம் என்றிருக்கிறேன். மோசே ஆரோனிடம் சொன்னான், "வெளியே சென்று அநேக ஓமர்கள் நிறைய நிரப்பி, மகா பரிசுத்த ஸ்தலத்தில் அதை வையுங்கள்" "அதன் பின், ஒவ்வொரு சந்ததிக்கு பிறகு வரும் சந்ததியில் இருந்து ஆசாரியனான பிறகு, ஆசாரியன் ஆவதற்கு தகுதி பெற்ற பின், அவர்கள் உள்ளே சென்று, அந்த நிஜமான மன்னாவில் இருந்து இந்த மன்னாவை எடுத்து, ருசித்து மற்றும் கொஞ்சம் புசிப்பார்கள். பிறகு அதை பற்றி எல்லாம் சொல்லுவார்கள். இதை மகா பரிசுத்த ஸ்தலத்தில் வையுங்கள். அது அங்கே இருக்கும். அது அங்கே கெட்டு போகாது, காரணம் அது பரலோகத்தில் இருந்து நேராக வந்திருக்கிறது. தேவனுடைய வல்லமை மகாபரிசுத்த ஸ்தலத்தில் இருக்கிறது. 69. மேலும் ஒவ்வொரு ஆசரியனுக்கும், தான் ஒரு ஆசாரியனானவுடன், அந்த ஆதியில் விழுந்த உண்மையான மன்னாவில் இருந்து கொஞ்சம் ருசி பார்க்க தனக்கு உரிமை உண்டென்று அறிந்திருந்தான். இப்போது அவர்களுடைய பிரயாணம் முழுவதற்கும், அது தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மன்னா _ அது தேவன் அவர்களை மரணத்தில் இருந்து ஜீவனுக்கு கொண்டு வந்து, மற்றும் இஸ்ரவேல் ஜனங்களை போஷிபார் என்பதற்கு அது ஞாபகார்த்தமாக இருந்தது. மேலும் பெந்தேகோஸ்தே நாளன்று, சபை பிரதிஷ்ட்டை பண்ணபட்ட பிறகு, பரலோகத்தில் இருந்து நம்முடைய மன்னா தேவனால் அனுப்பப்பட்டு, மற்றும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்காக காத்துக் கொண்டு இருக்கும் போது, இயேசு சொன்னார், "இதோ என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை உங்கள் மேல் வரப் பண்ணுவேன். ஆனால் பரத்திலிருந்து வல்லமை உங்கள் மேல் வரும் வரைக்கும் எருசலேமில் தரித்திருங்கள். அதன் பின் பரிசுத்தாவி உங்கள் மேல் வந்த பிறகு, நீங்கள் எனக்கு, எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும், ஈரியிலும், பென்சில்வேனியாவிலும் உலகத்தின் முடிவு பரியந்தம் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள். ஆமென். 70. கவனியுங்கள், இப்போது அவர்கள் சிவந்த சமுத்திரம் கடந்த உடனே அவர்கள் அங்கே சென்றார்கள். அதே போல, இயேசு கிறிஸ்துவின் சிவந்த இரத்தம் சபையை சுத்திகரிக்க ஊற்றப்பட்ட பின் சீசர்களும் சென்றனர். மற்றும் பெந்தேகோஸ்தே நாள் முழுமையாக வந்த போது ........ ஓ என்ன ஒரு. இப்போது, இந்நாட்களில் அது எப்படி கிடைத்துள்ளது பாருங்கள். பிராட்டஸ்டன்ட் ஆலயங்களில் நாம் நடந்து சென்று, "நீங்கள் ......எடுங்கள்....கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறீர்களா-? "நான் விசுவாசிக்கிறேன்" உங்கள் பெயரை அந்த புத்தகத்தில் போடுங்கள். நாங்கள் ஆறு மாதத்திற்கு திறமையைக் கண்டறியும் புரோபேடியன் காலத்தில் வைத்து, உங்களை ஆலயத்திற்குள் எடுத்துக் கொள்வோம். நீங்கள் சென்று குடித்து, புகைப் பிடித்து தொடர்ந்து உங்களுக்கு என்ன வேண்டும் என்றாலும் செய்யுங்கள்." கத்தோலிக்க ஆலயத்தில் நாம் சென்று, உங்கள் நாக்கை வெளியே விட்டு புது நன்மை பெறுங்கள், பரிசுத்த நற்கருணை. நல்லது. அதற்கு பின் நீங்கள் ஆலயத்தில் ஒரு நபர் ஆகிவிடலாம். இப்போது, அவர்கள் இரண்டு பேருமே சரியில்லை. பெந்தேகோஸ்தே நாள் முழுமையாக வந்த போது, ஒரு ஆசாரியன், இராபோஜன பெட்டியை தான் கையில் பிடித்துக் கொண்டு அந்த சாலை வழியாக வரவில்லை. இறையியல் கல்லூரியில் இருந்து ஒரு போதகர் வந்து, "நான், டாக்டர் ஜோன்ஸ், இப்போது நான் உனது வலது கையை பிடித்துக் கொண்டு சபையின் தோழன்மையை தருகிறேன், ஒரு கடிதம் மூலம் நான் உன்னை உள்ளே எடுத்துக் கொள்கிறேன்." என்று சொல்லவில்லை. 71. ஆனால் பெந்தேகோஸ்தே நாள் முழுமையாக வந்த போது, அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் ஒரே மனதோடு, "நான் மெத்தடிஸ்ட், நான் லுத்தரன், நான் பாப்டிஸ்ட், நான் இது." என்று யாருமே சொல்லவில்லை. அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் ஒரே மனதோடு இருந்தனர். மேலும் திடீரென்று பரலோகத்திலிரருந்து ஒரு சத்தம் வந்தது, சாலையின் வழியாக அல்ல. இறையியல் கல்லூரியில் இருந்து அல்ல, ஆனால் பரத்தில் இருந்து வல்லமையான காற்று அடித்துக் கொண்டு வந்தது போல ஒரு சத்தம் வந்தது. மேலும் அது அந்த வீட்டில் உட்கார்ந்துக் கொண்டு இருந்த அனைவரையும் நிரப்பிற்று. மற்றும் பரிசுத்த ஆவி அவர்கள் மேல் விழுந்தது. அவர்கள் வெளிய வீதிகளில் சென்று, தடுமாறிக் கொண்டும், திக்கி திக்கி பேசிக் கொண்டும் ஒரு கூட்ட குடிகாரர்கள் போல சென்றனர். நண்பனே ஒரு நிமிடம் காத்திருக்கவும், அந்த ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளும் கூட அங்கே சென்று அதே காரியத்தை பெற்றாள். மற்றும் பரிசுத்தாவியின் அபிஷேகத்தை பெறாமல் பரலோகத்திற்கு கன்னி மரியாளை தேவன் அனுமதிக்கவில்லை என்றால், ஏதோ ஒரு சபையில் உன்னை சுற்றிக் கொண்டு பரலோகம் சென்று விடலாம் என்று எண்ணாதே. நீ பரிசுத்தாவியை பெற்றுக்கொள் அல்லது வெளியே போ. அவ்வளவு தான். அவ்வளவு தான். சகோதரனே, அது தான் சுவிசேஷம் போதிப்பதாகும். அது உன்னை எரிக்கலாம், வெந்து போக வைக்கலாம், கொப்பளங்களை வரவைக்கலாம், மற்றும் எல்லாவற்றையும் செய்யலாம், ஆனால் அது உனக்கு நன்மையையே கொடுக்கும். 72. இப்போது, சிறுவனாக இருக்கும் போது, எப்பொழுதும் விளக்கெண்ணையை எடுப்போம். எங்களுக்கு சாப்பிட ஒன்றுமே இருக்காது, பழைய இறைச்சியின் தோலை வேகவைத்து அதில் இருந்து கொழுப்பை எடுத்து சோள ரொட்டியின் மீது தடவி உண்போம். மேலும் ஒவ்வொரு சனி இரவும் விளக்கெண்ணையை எடுப்போம். கீழே சென்று ஒரு பழைய டப் எடுத்து... பழைய டப் குளியல் நடக்கும். அம்மா எங்களை நன்றாக சுரண்டி இன்னும் கொஞ்சம் தண்ணீரை டீ போடும் கெட்டிலில் (பாத்திரம்) தண்ணீரை எடுத்து அதில் ஊற்றி ... சுரண்டுவார்கள். பின்பு மூக்கை பிடுத்து கொண்டு விளக்கெண்ணையை குடிக்க வைபார்கள். எனக்கு-எனக்கு அவ்வளவு சுகவீனம் ஆகும் வரைக்கும் அதை குடிப்பேன். நான் சமையல் அறைக்கு வந்தவுடன் நான் திணறிக்கொண்டு வாந்தி எடுக்க ஆரம்பிப்பேன். மேலும் என் மூக்கை பிடித்துக் கொண்டு, நான் பெரு மூச்சி தினறிக் கொண்டு பொங்கி வாந்தி எடுக்க முயற்சிப்பேன். நான், "அம்மா, இந்த பொருள் என்னை அதிக சுகவீனத்திற்குள் ஆக்குகிறது." என்று சொல்லுவேன். அவர்கள், "அது உன்னை சுகவீனம் படுத்தவில்லை என்றால், அதனால் உனக்கு எந்த நன்மையும் இல்லை." என்று சொல்லுவார்கள். அது இந்த மதியும் இங்கே நிகழ்கிறது. ஒரு வேளை இது உங்களை சரி படுத்தி நல்லது செய்யவில்லை என்றால் அது ஒரு நன்மையும் செய்யாது. ஆகையால்... அதை செய்யுங்கள், சரியாகுங்கள் அது ஒன்று மாத்திரம் செய்ய வேண்டியுள்ளது. கிறிஸ்துவுக்குள் புதிதாக தொடங்குங்கள். ஆமென். பழைய காலத்து சுவிசேஷம் உங்களுக்கு தேவையான நல்லதை அது செய்யும். ஆமென். உங்களுக்கு அது அது தான் நல்லது என்று தெரியுமா. அது சரி. இயேசு கிறித்துவுக்கு உங்களை ஒரு புது சிருஷ்டியாக்கும். உங்களுக்கு தேவை இல்லாத சில காரியங்களை தூக்கி வீசும்படி செய்ய இருக்கும். எல்லாம் சரி. 73. அவர்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றாக வேண்டும் அல்லது தேவன் அவளை அவருடையதில் ஒன்று என்று அறிந்துக் கொள்ள மாட்டார். நல்லது. மற்றும் அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்ட பிறகு, வெளியே வீதியில் அவர்கள் கத்திக் கொண்டு ஒரு கூட்ட குடிகார்கள்ளை போல தடுமாறி சென்றார்கள். மற்றும் இன்று அவர்கள் பேசுகிறார்கள்-பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டு, ஏதோ ஒன்றை நாக்குக்கு அடியில் போட்டு கொண்டு, அல்லது கைகளை போதகருடன் குலுக்கி கொண்டு ஓ சகோதரனே எனக்கு அந்த பழைய காய்ந்து போன கண்களோடு பாவ அறிக்கை செய்வது வெறுத்து போய் விட்டது. அதனால் ஒன்றும் இல்லை, அது ஒருவன் ஒரு காய்ந்த பழைய எங்கோ கிடக்கும் கிழிந்த துருத்தியிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு சமம் ஆகும். அது சரி தானே. இன்று நமக்கு தேவைப்படுவது என்னவென்றால் ஒரு நல்ல புதிய பரிசுத்த ஆவியின் ஞனாஸ்தானம் பெற்று ஜனங்களை மீண்டும் கிளறவேண்டும். உங்கள் ஏரியை நான் அன்றொரு நாள் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் அங்கு சென்ற போது ஒரு பெரிய உயிர் மீட்சி நடந்து கொண்டிருந்தது. அலைகள் குதித்து கொண்டு, ஏகிறிக்கொண்டு, மீண்டும் குதித்து கொண்டு இருந்தது. நான் சொன்னேன் அது அமைதலாய் இருக்கும் போது, அதற்கு தண்ணீரே இல்லை ஆனால் அதற்கு உயிர் மீட்சி உண்டு. "அது தான் நமக்கு இன்றைக்கு தேவை: காற்று நம் மீது அடித்து, உங்களை கொஞ்சம் அசைக்க வேண்டும். 74. கவனியுங்கள். மற்றும் எவ்வளவு மகிமை...........இப்போது, பேதுரு சொன்னான், "இப்போது இங்கே பாருங்கள்" எல்லா மக்களும், அந்த சகோதரர்களும் ஒன்றாக ஓடி சொன்னார்கள், "இந்த ஜனங்களை பாருங்கள் (பக்தி உள்ள ஜனங்கள்); அவர்கள் எல்லோரும் புது மதுவினால் நிறைந்திருக்கிறார்கள். அந்த பெண்களை பாருங்கள். நான் உங்களிடம் என்ன சொன்னேன். ஏன் அவர்கள் எல்லோரும் புது மதுவினால் நிறைந்திருக்கிறார்கள்." அங்கு தான் பேதுரு அடி எடுத்து வைக்கிறான். நான் அவன் ஒரு பெட்டியை (soapbox preacher) வைத்து அதன் மீது ஏறி பிரசங்கிப்பவன் என்று நினைக்கிறேன். என்னை அப்படித் தான் சொல்லுவார்கள். அது பரவாயில்லை. அவனுக்கு ஒரு சோப்பு பெட்டியோ அல்லது கட்டையோ அல்லது ஏதுவாய் இருந்தாலும் சரி, அவன் அதின் மீது ஏறி சொன்னான் "யூதேயா மக்களாகிய உங்களுக்கும், மற்றும் எருசலேமில் குடியிருக்கும் உங்களுக்கு தெரிய வேண்டியது நீங்கள் நினைக்கின்றபடி இவர்கள் குடித்து இருக்கிறவர்கள் அல்ல. பொழுது விடிந்து மூன்றாம் மணி நேரமாக உள்ளது. இது யோவேல் தீர்க்கதரிசியால் உரைக்கபட்டது. " என்றான். அவன் பிரசங்கித்த பிரசங்கமானது அப்படிப்பட்டதான ஒன்றாக இருந்ததால் அது நரகத்தில் உள்ள கட்டடங்கள் எல்லாவற்றையும் சாத்தான் பார்க்க அதிர செய்தது. அது சரி தான். மேலும் அதை செய்யும் போது, அவன் சொன்னான்... அவர்கள் இந்த எல்லாவற்றையும் பார்த்தனர். "இது தான் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டது என்று சொன்னான். அவர்கள், "நாங்கள் இரட்சிக்கபடுவதற்கு என்ன செய்ய வேண்டும்" என்று சொன்னார்கள்-?" அவன், "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுவீர்கள்." என்று சொன்னான். 75. அது என்ன-? அதே வாக்குத்தத்தம் தான். நித்திய ஜீவனை அளிப்பதற்கு அதே மன்னா தான் அவர்கள் மேல் விழுந்தது. அது இஸ்ரவேல் ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தி சென்ற அதே மன்னா போல தான் இதுவும். பரிசுத்த ஆவியின், அதே ஞானஸ்நானம் தான் சபையை மகிமைக்குள் எடுத்து செல்லுகிறது. மற்றும் ஒவ்வொரு மனிதனும், அன்றிருந்த ஆசாரியன் போல.... அந்த நடுத்திரை கிழிந்தது. கிறிஸ்துவுக்குள் வருகின்ற ஒவ்வொரு மனிதனும், அவர் இருக்கிறார் என்றும், அவரை தேடுகிறவர்களுக்கு அவர் வெகுமதி அளிப்பவராக இருக்கிறார் என்றும், மற்றும் பாவங்களை விட்டு, கரங்களை விரித்து தேவனை ஏற்றுக் கொண்டால், ஏதோ ஒன்று போல அல்ல, ஏதோ பாவனையாக இருப்பதை போல அல்ல, ஆனால் அந்த பெந்தேகோஸ்தே நாளில் விழுந்தது போல, ஒரு நேர்மையான இருதயம் முழுவதும் இருக்கும். உண்மையான பரிசுத்த ஆவியின் ஞானஸ்தானம் அளித்து, அதே அடையாளம், அற்புதங்கள் மற்றும் எல்லாம் நடக்கும்படி செய்வார். அல்லேலூயா. உங்களுக்கு தெரியுமா அது தான் சரியானது. பெந்தேகோஸ்தே நாளில் நடந்துபோல, ஒரு குடிகாரனை போல உன்னையும் அதே விதமாக நடிக்க வைக்கும். ஆசாரியத்துவத்துக்குள் ஒரு ஆசாரியன் வந்து அந்த மன்னாவை பெற்றுக் கொள்வது போல ஒவ்வொரு விசுவாசியும் அதை பெற்றுக்கொள்வதற்கு உரிமை உண்டு. அல்லேலூயா. என்னுடைய அளவுக்கு இரண்டு மடங்கு அதிகமான அளவு இருக்க விரும்புகிறேன். அப்போது இரண்டு மடங்கு சத்தம் இடுவேன். 76. சகோதரனே, எப்படியும் அதை பற்றி நிஜமாகவே நன்றாக உணருகிறேன். இன்றைக்கு இந்த ஆலயத்துக்கு என்ன வேண்டும் என்று சொன்னால், அது ஒரு நல்ல உயிர்மீட்சி, ஒரு புதிய கோட்பாடு அல்ல, ஒரு புதிய ஆணை, உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததை சற்று கிளறி விடவேண்டும். சமீபத்தில், ஒரு சகோதரனும் நானும் ஒரு பிளவு ஏற்பட்ட இடத்தில் நடந்து கொண்டு இருந்தோம். ஒரு பழைய ஆமையை அங்கு பார்த்தோம். இந்த இடத்தில் ஆமைகள் இருக்கிறதா என்று எனக்கு தெரியாது, மேலும் அவன் சிரிக்கும் வண்ணமாக இருந்தான். அவனுடைய கால்களை இப்படியாக விரித்துக் கொண்டு, மேலும் நான், "அங்கே பாருங்கள் அவன் எப்படி சிரிக்கும் வண்ணமாக இருக்கிறான்." என்று சொன்னேன். நாங்கள், அவன் கிட்ட சென்ற போது அவன் தன்னை அந்த ஓட்டுக்குள் இழுத்து கொண்டான். இது சில கிறிஸ்தவர்களை பற்றி என் உள்ளத்தில் தோன்றுகிறது. அந்த பழைய அனலுமில்லாமல் குளிருமில்லாமல் இருக்கின்ற சபையில் புகுந்துக் கொள்ளுவர். "நான் இன்னார், இன்னாருக்கு சொந்தமானவன். டாக்டர் இன்னார் இன்னார் அப்படி சொன்னார்கள்." உள்ளே செல்லுங்கள். நான் சொன்னேன், "நான் அந்த ஆமையை நடக்க வைப்பேன்." நான் அங்கு சென்று ஒரு நீண்ட தண்டு கொண்ட செடியை வெட்டி அதன் சாற்றை அதன் மீது ஊற்றினேன். அது ஒன்றுமே செய்யவில்லை. நீங்கள் அதை அடிக்கவும் செய்யலாம். 77. நான், "நான் அவனை சரி படுத்துவேன்." என்று சொன்னேன். நான் அவனை அந்த ஓடையின் அருகே கொண்டு சென்று தண்ணீரில் மூழ்கினேன், ஒரு சில நீர் மட்டும் கொப்பளித்து மேலே வந்தது. சகோதரனே, நீங்கள் ஒரு காய்ந்த பாவியாக உள்ளே சென்று நனைந்த ஒன்றாக சில கொப்பளித்த நீரோடு வெளியே வரலாம். நீங்கள் அவர்களை இந்த விதத்தில், அந்த பெயரில், மேலே, கீழே இந்த விதத்தில் முன்னும் பின்னுமாக, தெளித்து ஞானஸ்நானம் கொடுக்கலாம். என்ன செய்தாலும் அவன் இன்னும் பாவியாகவே இருப்பான். அது சரியா. நான் சென்று ஒரு துண்டு காகிதத்தை எடுத்து, ஒரு சிறு நெருப்பை அதில் மூட்டி, மற்றும் அந்தப் வயதான பையனை உட்கார.... சகோதரனே, இன்றைய நாளில் நமக்கு என்ன தேவை என்றால், பீடத்திற்கு பின்னால் வல்லமையான இயேசு கிறிஸ்துவின் சுவிஷேசத்தை, பரிசுத்த ஆவியினால் பிரசங்கித்து, ஜனங்கள் மீது அக்கினி அபிஷேகம் வரக்கூடிய அளவிற்கு பிரசங்கிமார்கள் தேவை. அதற்கு பிறகு அவர்களை நடக்கப் பண்ணும். இந்த இடத்தில் அல்ல, ஞாயிறு மதியம் இந்த கடற்கரையில் நீச்சல் ஆடையில் படுத்து கொண்டிருக்கும் மக்கள் போல் அல்ல. அது ஆலயத்திற்கு நடக்க செய்யும். கீழே சென்று கால்ஃப் விளையாட அல்ல... ஓ சகோதரனே அது உங்களை சுட்டெரிக்கிறதா. கீழே அந்த கடற்கரையில் நடந்து சென்ற போது சிறு பெண்கள் அந்த கடற்கரை சுற்றிலும் படுத்து கிடக்கின்றனர்... சிறு பெண்கள், அவர்களை பெரிய பெண்கள் என்று சொல்ல முடியாது. பெரிய பெண்கள் அப்படிப்பட்ட காரியங்களை செய்வதில்லை. அந்த கடற்கரையில் நீச்சல் உடையில் நீட்டி படுத்து கொண்டு சூரிய ஒளியில் நிறம் மாற படுத்து கிடப்பர். 78. எனக்கு ஒரு மகள் இருக்கிறாள், அவளுக்கு ஆறு வயது ஆகிறது . அப்படி அவள் படுத்து கிடப்பதை நான் பார்க்கட்டும்; அவளுக்கு மகன் மங்கும் நிறம் (son tan) கிடக்கும். ஆனால் அது சார்லி பிரன்ஹாமுடைய மகனின் ஒரு தடியால் எவ்வளவு கடினமாக அடிக்க முடியுமோ, அவ்வளவு கடினமாக சரீரம் மங்கும்படி அடிப்பேன். அவள் வீட்டுக்கு உண்மையான நிறம் மங்கினதாக செல்வாள். அவள் அதை நெடு நாட்களுக்கு மறக்க மாட்டாள். இங்கே கென்டக்கியில் சில ஜனங்கள் அந்த பழைய தாய்மார்களை பற்றி அவர்கள் படிப்பு அறிவில்லாதவர்கள், மற்றும் அது போல அவர்களை பற்றி பேசுகிறார்கள். அவர்கள் வந்து, எப்படி உங்கள் பெண் பிள்ளைகளை வளர்ப்பது என்று உங்களுக்கு கற்று தரட்டும். அது சரி தானே. நீங்கள் உங்கள் சிறுமிகளின் மீது அந்த பழைய சிறிய உடைகளை போடுவீர்கள், அவர்கள் வீதியில் நிற்கும் போது, யாரோ சில பையன்கள் கிண்டல் அடிப்பார்கள், பின் அந்த பையன்களை குற்றவாளிகளை சீர்திருத்தம் சிறைச்சாலைக்கு அனுப்புவீர்கள். உங்களுக்கு தான் முதலில் சாட்டை அடி தேவை. அது சரி தானே. சகோதரனே தேவனுடைய அன்பு உங்கள் இருதயத்தில் இருக்கும் என்றால் அது அங்கே இருக்க வேண்டாம். நீங்கள் உங்களுடைய பிள்ளைகளை அந்த விதத்தில் உடுத்துவிக்க மாட்டீர்கள். வியூ, நான் வாயை மூடிகொள்வது நல்லது. இந்த பசங்கள் உங்களுக்கு சுவிஷேசத்தை பிரசங்கிக்க வந்துள்ளனர். 79. சகோதரனே நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதை நான் நம்புகிறேன். ஆமென். மேலும் இப்படிப்பட்டதான காரியங்களிலிருந்து எல்லாம் பரிசுத்த ஆவியின் வல்லமை உங்களை சுத்திகரிக்கிறது என்பதை நம்புகிறேன். நீங்கள் உங்களை அங்கே தரம் குறைந்தவராக ஆக்கி கொள்ள வேண்டாம். சகோதரனே எனக்கு செவி கொடுங்கள். உங்கள் உணவு நாள், நீங்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம். பஸ்ஸார்ட்ஸ் என்பவர்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுவார்கள். புறாக்களுக்கு அதன் உணவு என்னவென்று தெரியும். அது சரி தானே. ஒருவரோடு ஒருவரின் தோழமை அதற்கு இல்லை. ஒரே சிறகுகளுடைய பறவைகள் ஒன்று கூடி பறக்கும். அப்படிப்பட்டவர்கள் இருக்கும் இடத்திலிருந்து இருந்து விலகி கொள்ளுங்கள். தேவனை நேசியுங்கள். உங்கள் ஆண்டவரை முழு மனதோடு நேசிப்பீர்கள் என்றால் அது போல காரியங்களுக்கு இடமே இருக்காது. அது சரியா. இன்றைய நாளில் நமக்கு எது தேவை என்றால் மற்றும் ஒரு......உயிர்மீட்சி, அதை பற்றியும் அதற்காக நிற்கும் ஜனங்களை பற்றி பேசுங்கள். எல்லாம் சரி. நாம் செய்திக்கு திரும்புவோம். எல்லாம் சரி, எப்படியாயினும். 80. இயேசு பிரபலமான பிறகு, அவர் வெளியே சென்று, மற்றும் அற்புதங்கள் அவரை தொடர்வதை நான் பார்க்கிறேன். அவர்களை அவர் கூப்பிட்டு, அவர்கள் யார் என்று அவர்களுக்கு சொன்னார். தேவன் அவரோடு இருந்து, அவருக்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். மற்றும் ஒரு நாள், அவர், மார்த்தாள், மரியாள், மேலும் அவர் நண்பன் லாசருவுடன் தங்கும்படி சென்றார். பின் அவர் அங்கு லாசருவிடம் சென்றடைந்த பின்பு ........ஒரு நாள் அவர் விட்டை விட்டு சென்று விட்டார். அவர் கட்டாயமாக செல்ல வேண்டும் என்பதற்காக அல்ல, ஆனால் அவருடைய ஊழியும் அவரை வேறொரு நாட்டிற்கு தள்ளிக் கொண்டு போனது. மற்றும் தேவன் தனக்கு கொடுத்த ஒரு வெளிப்பாட்டை நிறைவேற்றுவதற்காக அவர் அப்படி செய்தார். கவனியுங்கள். அவர் வீட்டை விட்டு சென்றார். அவர் வீட்டை விட்டு சென்ற பிறகு, வியாதியும், வியாகுலமும் உள்ளே வந்தது. மற்றும் அவர் உங்கள் வீட்டை விட்டு போனால், வியாதியும், வியாகுலமும் வந்து கொண்டிருக்கும். நல்லது. 81. லாசரு சுகவீனமானான். இறையியல் வல்லுனர்கள் அவனுக்கு நுரையீரலில் இரத்த கசிவு இருந்ததாக நம்புகின்றனர். அது எனக்கு தெரியாது. வேதாகமம் அது பற்றி ஒன்றும் கூறவில்லை. யாரோ சில எழுத்தாளர்கள் அது அப்படி தான் என்று கூறினர். எல்லாம் சரி. அவன் வியாதிப்பட்டான். மற்றும் தேவன் சில வேளைகளில் உங்களுடைய விசுவாசத்தை சோதிக்கிறார். நீங்கள் அதை நம்புகிறீர்களா-? தேவனிடத்தில் வருகிற ஒவ்வொரு மகனும் சோதிக்கபடுகிறான். அக்கினி சோதனைகள் வரும் போது, ஏதோ விநோதமாக இருக்கிறதே என்று யோசிக்க வேண்டாம், உங்களுடைய விசுவாசத்தை பூரணபடுத்தவும், உங்களை அவரிம் கிட்டி சேர்க்கவும் அவைகள் வருகின்றது. அவைகள் தங்கத்தை விட அதிக விலையேற பெற்றவைகள். நல்லது. மேலும் இந்த காரியங்கள் நடக்க துவங்கும் போது “மரியாளும், மார்தாளும் இயேசுவிடம் ஆட்களை அனுப்பி," இயேசுவை திரும்பி வந்து, அவனுக்கு ஜெபிக்குமாறு." சொல்ல சொன்னார்கள். மற்றும் இயேசு அவர்களின் அழைப்பை கண்டு கொள்ளவில்லை. அவர் தூரத்திலுள்ள வேறொரு நகரத்திற்கு சென்று விட்டார். நல்லது, மீண்டும் அவர்கள் அவரை அழைத்தனர். அவர் தொடர்ந்து கண்டு கொள்ளவில்லை. 82. இப்போது, உங்கள் போதகர் அப்படி செய்வார் என்றால், ஓ அவ்வளவு தான். நீங்கள் சொல்வீர்கள், "ஏன், அந்த வயதான மாயமாலக்காரன்." இப்போது, இதை சொல்லு என்று அவர்கள் சொல்லவே இல்லை. ஆனால் நீங்கள் சொல்வீர்கள், "அந்த வயதான மாய்மாலக்காரன், நான் சென்று டாக்டர் இன்னார், இன்னாருடைய சபையில் சேர்ந்து கொள்வேன். அவர் வர... என்றால். " தேவனை நேசிப்பவர்களுக்கு எல்லாம் நன்மைகேதுவாக நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியாதா-? அது தான் காரணம். அவர் உங்களுக்கு உதவி_ செய்யக் கூடாது என்பது அல்ல. அவர் தேவனுடைய குமாரன், ஆனால் நீ அவரை நம்பும் வரைக்கும் அவரால் உனக்கு உதவி செய்ய முடியாது. உங்கள் போதகர் ஒரு நல்ல மனிதர் என்றால் நீங்கள் அவரை நம்புவீர்கள். அவர் தெய்வீக சுகமளிப்பதில் விசுவாசம் கொண்டு, அதை போதித்து, அதில் நிலையாய் நின்று, மற்றும் ஒரு சரியான வாழ்கையை நடத்துவாரானால், இந்த பூமியில் ஜெபிப்பதற்கு எந்த மனிதனுக்கும் இருக்கின்ற அதே உரிமை உங்களுக்கும் இருக்கும். ஆனால், அவர் தேவனுடைய மனிதன் என்று அவரை நம்பி அவரில் நம்பிக்கை வைக்க வேண்டும். மேலும் அவர்கள் அவரை மீண்டும் அழைத்து வரும்படி ஆட்களை அனுப்பினார்கள். ஆனால் அவரோ சென்று கொண்டே இருந்தார். இப்போது கவனியுங்கள். இந்த பாகத்தை தான் நான் மிகவும் நேசிக்கிறேன். அவர் திரும்பி அவர்களிடம் சொன்னார்-? நம்முடைய சினேகிதன் நித்திரை அடைந்து இருக்கிறான் மற்றும் அவன் உண்மையிலே என்னவாக இருந்தான்-? நம்முடைய சினேகிதன் லாசரு நித்திரை... இருக்கிறான்." மற்றும் அவருடைய சீஷர்கள் சொன்னார்கள், "ஓ" அவர்கள், "ஆண்டவரே, அவன் நித்திரை அடைந்திருந்தால் சுகமடைவான்." என்று சொன்னார்கள். பின்பு அவர்கள் அறியும்படி அவர்களுடைய சரியான பாஷையில், "லாசரு மரித்துப் போனான் என்று வெளிப்படையாய்ச் சொல்லி, நான் அங்கே இராததினால், நீங்கள் விசுவாசம் உள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள் நிமித்தம் சந்தோஷப் படுகிறேன். ஆனால் நான் அவனை எழுப்பப் போகிறேன்." ஓ என்ன, தேவன்..... அந்த கல்லறையை கவனியுங்கள், தேவன் அவரிடம் ஏற்கனவே அதை பற்றி காண்பித்து இருந்தாரா என்பதை பார்க்கலாம். "நான் போய் அவனை எழுப்புவேன்." அவர்கள் திரும்பி சென்றார்கள். 83. நல்லது, அந்த சிறிய வீட்டில் முதல் நாள் கடந்து சென்றது. அவர்கள் லாசருவை எடுத்து, நறுமணம் பூசி, கல்லறையில் வைத்தார்கள். லாசரு குடும்பத்திற்கு உணவளிப்பவராக இருந்தார். லாசரு தேவாலயத்தில் எழுத்தராக இருந்தார் என்று நமக்கு கற்பிக்கப்பட்டு இருக்கிறது. மற்றும் மார்த்தாவும், மரியாளும் சுவரின் மீதான சித்திர தொங்கலாடைகளை மற்றும் அது போல செய்தனர்: அவர்கள் பெற்றோர் மரித்து போயிருந்தனர். மேலும் அந்த உணவளிப்பவர் இப்போது மரித்து விட்டார் : இருண்ட நேரம். இரண்டாம் நாள் கடந்து சென்றது. அவர்கள் கல்லறைக்கு சென்று துக்கித்து அழுதனர். மூன்றாம் நாள் கடந்து சென்றது. நான்காம் நாளும் கடந்து சென்றது. 72 மணி நேரத்தில் அழுக ஆரம்பிக்கும். மூன்று நாட்கள் இரவும் பகலும். உடம்பு முழுவதிலும், இருந்து புழுக்கள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டன. எல்லா நம்பிக்கையும் அற்று போய்விட்டது. அந்த குடும்பத்திற்கு பார்த்ததிலேயே மிகுந்த இருண்ட நேரமாக இருந்தது. அந்த மணி நேரத்தை எப்போவாவது நீங்கள் சந்திக்க நேர்ந்ததா-? என் வீட்டில் நான் சந்தித்து இருக்கிறேன். நேசித்தவர்களை இழந்து இருள் சூழ்ந்தது. 84. அந்த சிறிய குடும்பத்துக்கு நேர்ந்ததிலே மீகவும் இருண்ட நேரம். மேலும் அதற்கு பிறகு இயேசு அங்கு வந்தார். எப்போது உள்ளதிலேயே இருண்டு இருக்கிறதோ அந்த நேரத்தில் தான் அவர் பொதுவாக வருவார். நான் அங்கே மாயா மருத்துவமனையில் படுத்து கிடந்தேன். மாயா சகோதரர்கள் என்னை பார்த்து என்னை பரிசோதிக்க முற்பட்டு, சொன்னார்கள்." மரியாதைக்குரிய பிரன்ஹாம் அவர்களே, உங்களிடம் இதை சொல்வதற்கு மன்னிக்கவும். ஆனால் உங்களுக்கு முடிந்தது. உங்களுக்கு ஒன்றுமே செய்யமுடியாது. உங்களுக்கு அவ்வளவு தான், முடிந்தது. மற்றும். இயேசு அங்கே வந்தார். ஓ என்ன சொல்ல, ஓ இரக்கம்-! உங்களுடைய இருண்ட காலமாக இப்போது இது இருக்கலாம், சகோதரனே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஆடிக் கொண்டிருக்கும் சகோதரனே. நான் உங்களை இரண்டு இரவுகள் கவனித்தேன். இந்த நேரத்தில் இயேசு இந்த பக்கமாக வந்தால் அது அற்புதமாக இருக்கும் அல்லவா-? உங்களை குறித்து என்ன, அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு கேன்சர், மருத்துவர்கள், நீங்கள் பிழைக்க முடியாது என்று சொன்னார்கள். உங்களுடைய இருண்ட நேரமாக இருக்கிறது. மற்றும் அதற்குப் பிறகு இயேசு அந்த வழியாக வந்தார். அவர், இருப்பதிலேயே இருண்ட நேரத்தில் தான் எப்பொழுதுமே அவர் வருவார். எரிகின்ற சூலையில், அந்த எபிரேய பிள்ளைகள், அவர்களுடைய கடைசி அடி எடுத்து வைக்கும் போது தான், இயேசு அங்கு வந்தார். உத்திர போக்கு இருந்த பெண்ணை... தன்னிடம் இருந்த எல்லா பணத்தையும் மருத்துவர்களுக்கு செலவழித்த பிறகு, ஒருவர் கூட ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கும் போது இயேசு அந்த வழியாக வந்தார். அவர் சரியாக அங்கே இருப்பார். சோர்ந்து போக வேண்டாம். நீங்கள் அவரிடம் அன்புக் கூறுவீர்கள் என்றால் அவரோடு சரியாக அங்கேயே இருங்கள். அவர் அங்கு இருப்பார். இயேசுவே அங்கே வாரும். 85. அவர்களின் சிலர், "போதகர் வந்திருக்கார்." என்று சொன்னார்கள். இப்போ மரியாள் எப்பொழுதுமே சரியாக இருப்பாள், ஆனால் மார்த்தாள் கொஞ்சம் தாமதமாகவே நேரத்தை கடத்துவாள். ஆனால் அவள் இருதயமோ அனலாய் இருந்தது. அவள் தன்னுடைய முகத்திரையை முகத்தின் மீது மூடிக்கொண்டு ஓடினாள். அங்கிருக்கும் சிலர் சொல்வதை என்னால் கேட்க முடிகிறது. "அந்த பரிசுத்த உருளையரான போதகர் எங்கே. அவர் தான் தெய்வீக சுகம் அளிப்பதை பற்றி பிரசங்கத்தார்-? ஊ சோதனை வரும் போது அவர் ஒடி விடுவார். அவர் அப்படித்தானே. அவர் இப்போது எங்கே இருக்கிறார்-? தெய்வீக சுகம் அளிப்பவர் எங்கே -?" மார்த்தாவும் அவளோட இருந்தவர்களும் ஆலயத்தை விட்டு வெளியே வந்து விட்டனர். ஏனென்றால் யாராவது இயேசுவை பின்பற்றினால் கண்டிப்பாக ஆலயத்திலிருந்து வெளியேற்றபடுவார்கள் என்று சொல்லப்பட்டு இருந்தது. கடுமையான கட்டுப்பாடு இருந்தது. ஆகையால் அதோ அவர்கள், ஆலயத்தில் ஒருபோதும் யாரிடமும் தோழான்மை வைக்க முடியாமல் இருந்தனர். சபையை இழந்தார்கள், போதகரை இழந்தார்கள், நண்பர்களை இழந்தார்கள், எல்லாவற்றையும் இழந்தார்கள், எல்லாமே போய்விட்டது. எல்லா நம்பிக்கையும் போய் விட்டது. அவர்கள் மாத்திரம் தனிமையாக உட்கார்ந்து கொண்டு இருந்தனர். அதற்கு பிறகு இயேசு அங்கே வருகிறார். பின்பு மார்த்தாள்....... தன்னுடைய ஆடைகளை எடுத்து போட்டுக் கொண்டு, அங்கிருந்து ஓடுவதை என்னால் பார்க்க முடிகிறது. அங்கிருக்கும் ஒருவர் சொல்வதை என்னால் கேட்க முடிகிறது. "இப்போது அவள் எங்கே ஓடுகிறாள் என்று ஆச்சரியமாக இருக்கிறது." இப்போது, நான் எப்பொழுதுமே கற்பனை பண்ணி பார்த்தது என்னவென்றால், மார்த்தாளுக்கு... தெரிந்தது என்னவென்றால், அவள் இயேசுவிடம் மட்டும் சென்றால் தனக்கு என்ன தெரிய வேண்டுமோ அதை எல்லாம் கண்டு பிடித்து விடுவார் என்று தெரியும். 86. இப்போது திரும்பவும் வேதாகமத்தில் அங்கே... சூனாமித்தை பெண் போல, மார்த்தாள் ஒரு வேளை இதை வாசித்திருப்பாள். அந்த சூனாமித்தை பெண் தன்னுடைய குழந்தையை இழந்தவுடன்... அதற்கு ஒரு சூரிய ஒளி தாக்கி இருக்கும் போல நான் நினைக்கிறேன். தேவன் அவளுக்கு குழந்தையை கொடுத்தார். மற்றும் அது வளர்ந்து 9, 10, 12 வயதானது. ஒரு நாள் அந்த வயலில் சுமார் 11:00 மணி அளவில், தன்னுடைய தகப்பனிடம் சொன்னது "என்னுடைய தலை, என்னுடைய தலை" சொல்லும் போது அதுக்கு சூரிய ஒளி தாக்கி மற்றும் அது மரித்து போய்விட்டது. இப்போது அவள் சொன்னாள், "கழுதை மேல சேணம் கட்டுங்கள், தொடர்ந்து முன்னே செல்லுங்கள், நான் சொல்கின்றவரைக்கும் நிற்க வேண்டாம். கர்மேல் மலையில் உள்ள அந்த தேவ மனிதனிடம் சொல்லுங்கள்" என்றாள். அவளுக்கு கர்த்தர், எலியாவுக்குள் இருந்தார் என்று தெரியும், இப்போது நான் முடிப்பதற்கு முன்பாக இதை கவனமாக கேளுங்கள். அவளுக்கு கர்த்தர் எலியாவுக்குள் இருந்தார் என்று நன்றாக தெரியும், மற்றும் அவள் எப்படியாவது எலியாவிடம் சென்று விட்டால் அவளுடைய குழந்தை கிடைக்காமல் போய்விடும், ஆனால் எதற்காக அவளுடைய குழந்தை மரித்தது என்று அவளுக்கு அறிய முடியும். மற்றும் அவளுடைய கணவர்," இது பௌர்ணமியும் அல்ல, பஸ்காவும் அல்ல. அவர் அங்கு இருக்க மாட்டார் என்று சொன்னார். அவள், "எல்லாம் நல்லது... செல்லவும்" மேலும் அவர்கள் சவாரி செய்து........" மற்றும் நான் சொல்லும் வரைக்கும் தளராமல் போ. " என்று சொன்னாள். 87. அவள் தேவனுடைய மனிதனிடம் போய் சென்றதை நான் பார்க்கிறேன். இப்போது அவருக்கு தெரியாது. கர்த்தர் எல்லாவற்றையும் தம்முடைய தீர்க்கதரிசிகளிடம் சொல்வது இல்லை. அவர் சொன்னார் "இதோ அந்த சூனாமித்தியாள் வருகிறாள், மற்றும் அவளுக்கு ஏதோ பிரச்சனை இருக்கும் போல தெரிகிறது. அவளுக்கு இருதயத்தில் வேதனை இருக்கிறது, மேலும் கர்த்தர் என்னிடம் அதை மறைத்து விட்டார்." அது சரியா-? அவனுக்கு அது என்னவென்று தெரியவில்லை. ஆகையால் அவன் வந்து... அவளிடம்... அவன் சொன்னான். உன்னுடைய காரியம் எல்லாம் நலமாக இருக்கிறதா, உன்னுடைய கணவர் நலமாக இருக்கிறாரா, உன்னுடைய பிள்ளை-? நான் இதை நேசிக்கிறேன். "எல்லாம் நலமாக உள்ளது." அவள் தீர்க்கதரிசியிடம் சென்றதால், எல்லாமே சரியாகத் தான் இருக்கும் என்பதை அவள் அறிந்தாள். ஆகையால் அவள் அந்த பக்கமாக ஒடி சென்று... கீழே குதித்து அவருடைய பாதத்தில் விழுந்தாள். கேயாசி அவரை பின்னால் இருந்து அவளிடம் இருந்து இழுத்தான். அது என்ன-? அவளை விலக்கினது என்ன. அவர் சொன்னார் "அவளை தனியே விட்டு விடு." சொன்னான் "அவளுக்கு துயரம் இருக்கிறது, தேவன் அதை என்னிடம் இருந்து மறைத்து விட்டார்." ஆகையால் அவள் குழந்தை மரித்து விட்டது என்பதை அவருக்கு வெளிப்படுத்தினாள். 88. இப்போது பாருங்கள், சுகவீனம் உள்ளவர் மீது கைகுட்டைகளை வைக்கும்படி சகோதரர்களுக்கு போதிக்க வேண்டும் என்று இங்கே தான் பவுலுக்கு அந்த எண்ணம் உதித்து இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அவன் சொன்னான், "என்னுடைய கோலை எடுத்துக்கொள்" மேலும் எந்த மனிதனும் உனக்கு வணக்கம் சொன்னாலும், நீ வணக்கம் சொல்ல வேண்டாம்." நமக்கு தரகு/தள்ளுபடி கிடைப்பது தான் இன்றைக்கு இருக்கும் பிரச்சனையே. நாம் அதை நிறுத்தி விட்டு மற்ற காரியங்களை செய்ய வேண்டும். நீங்கள் பாருங்கள். ஆனால் சொன்னார், "திரும்பி வணக்கம் சொல்ல வேண்டாம். என்னுடைய கோலை எடுத்து அந்த குழந்தை மீது வை." மேலும் அவன் எதையெல்லாம் தொட்டானோ அவை எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது. அந்த பெண்ணையும் அதே போல நம்பும் படியாக அவன் செய்தான்... நான் நினைக்கிறேன் அங்கே தான் பவுலும் கைக்குட்டைகளை தன்னுடைய சரீரத்திலிருந்து எடுத்த அவர்கள் மேல் போடுவதற்கு ஏவப்பட்டான். கர்த்தர் அவனோடு இருந்தார் என்றும் மற்றும் அவன் எதை எல்லாம் தொட்டானோ அவை எல்லாம் ஆசீர்வதிக்கபட்டு இருந்தது என்று அவனுக்கு தெரியும். ஆனால் ஜனங்கள் மட்டும் அதை நம்பினால். 89. ஆகையால் கேயாசி முன்னே சென்றான். மேலும் அந்த குழந்தை எழும்பவே இல்லை, ஏனென்றால் அந்த பெண் எலியாவை நம்பி இருந்தாள். அவள் சொன்னாள், "தேவனாகிய கர்த்தர் ஜீவிக்கிறதினால், உம்முடைய ஆத்துமா மரிக்கவே போவதில்லை. உம்மை நான் விடமாட்டேன்." அவன் அந்த வீட்டுக்கு சென்று அந்த மரித்து போன குழந்தை அங்கே கிடத்தி இருப்பதையும் மற்றும் ஜனங்கள் கதறிக் கொண்டிருப்பதை பார்த்தான். நல்லது, எவ்வளவு கச்சிதமா உள்ளது. அவள் அவனுக்கு ஒரு சிறிய வீட்டை கட்டினாள், ஆகையால் அவள் அந்த குழந்தையை எடுத்து, அவன் படுத்திருந்த படுக்கையின் மேல் குழந்தையை கிடத்தினாள். அதை கிடத்துவதற்கு நல்ல இடம் அல்லவா-? படுக்கையின் மீது. பின்பு அந்த தீர்க்கதரிசி உள்ளே சென்றார், அவர் மேலும் கீழும் ஆக அந்த தடத்தில் நடந்தார், முன்னும் பின்னும் ஆக நடந்து அந்த தடத்தில் மேலும் கீழுமாக நடந்தார். பின்பு அந்த தன்னுடைய சரீரத்தை மரித்த குழந்தையின் மீது வைத்து அதன் மீது படுத்து கொண்டார். மற்றும் அது 7 முறை தும்பி உயிரடைந்தது. தேவன், தீர்க்கதரிசியோடு இருந்தார். 90. மற்றும் மரியாள் நினைத்தாள்......மன்னிக்கவும் மார்த்தாள் சொன்னாள் "தேவன் அந்த தீர்க்கதரிசியோடே இருப்பாரானால், நிச்சயமாக தேவன் அவருடைய குமாரனோடு இருப்பார்." ஆகையால் அவள் அவரை சந்திக்க ஓடினாள். ஓ சகோதரனே-! ஓ அல்லேலுயா. அவள் ஓடினாள்......நான் உற்சாகம் அடையவில்லை. நான் சரியாக எங்கு இருக்கிறேன் என்று எனக்கு தெரியும். இப்போது, கவனியுங்கள். அந்த குற்றம் பிடிப்பவர்கள், "அற்புத்தத்தின் நாட்கள் முடிந்து விட்டன " என்று கொக்கரிக்கும் போது, அவர்களை தள்ளிக் கொண்டு அவள் அவரை சந்திக்க ஓடினாள். அவள் அவரிடம் சேரவேண்டும் என்றிருந்தாள். இப்போது அவள் அவரிடம் சென்ற போது, அவள் "ஏன் நீங்கள் என்னுடைய சகோதரனிடம் வரவில்லை" என்று சொல்லி அவரை இகழ்சிப்படுத்தியிருக்கலாம், அவரை திட்டி இருக்கலாம். நல்லது, அது 1951 ஆம் பதிப்பு. ஆனால் அப்போ இல்லை. ஆகையால் அவள் அப்படி சொல்லி இருந்தால், அற்புதம் நடந்தே இருக்காது. ஆனால், அவள் தன்னால் இயன்ற மட்டும் கடினமாக ஓடினாள், மேலும் அவரிடம் அவள் சென்றடைந்து, அவருடைய பாதங்களில் விழுந்தாள், அதை நான் மிகவும் நேசிக்கிறேன். இப்போது அவள் மிகவும் எளிமையாக இருந்தாள். அவள் சரியான விதத்தில் அவரை அனுகினாள். 91. நான் என்ன அர்த்தம் கொள்கிறேன் என்று உங்களால் அறிய முடியும் என்றால், அனுகுவதற்கு ஒரு வழி உண்டு: எளிமை மற்றவர்களை காட்டிலும் நீங்கள் மேன்மை ஆனவர்கள் என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம். தேவன் உங்களுக்கு கடன் பட்டவர் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் தான் அவருக்கு கடன் பட்டவர்கள். தாழ்மையாக வாருங்கள், "ஒன்றும் இல்லை கர்த்தாவே. என்னிடம் ஒன்றுமே இல்லை, நான் தாழ்மையாக வருகிறேன்." கீழே மெக்சிகோவில் அந்த ஸ்பெயின் நாட்டவர்கள் வரும் போது அவர்கள் கத்தோலிக்க ஜனங்கள்; அவர்களை பார்த்த மாத்திரத்தில் காரியங்கள் நடக்கும், அவர்களுக்கு மற்றவர்கள் ஜெபம் செய்வதை விரும்பவில்லை. அவர்களிடம் கிட்ட சேர நேர்ந்தால் அவர்களை கடந்து செல்ல வேண்டும். அது தான் அவர்களுக்கு தேவையாக இருந்தது. மற்றும் அவர்கள் ஒருத்தர் கூட மனம் மாறியதாக இன்னும் எனக்கு தெரியவில்லை. தாழ்த்துங்கள், நிச்சயமாக நமக்கு அதிக கல்வி இருக்கிறது. நமக்கு அதை பற்றி எல்லாம் தெரியும், அதின் ஒவ்வொரு நுணுக்கமும் தெரியும். பாருங்கள்-? அதை பற்றி அதிகம் தெரியும். 92. இதோ, மார்த்தாள் வருகிறாள்; அவள் ஓடி அவர் பாதங்களில் விழுந்து சொல்கிறாள், தேவனே... அது தான் அவரது சரியான பெயர். அவர் தேவன் தானா-? "ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். "ஓ நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்க மாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவது எதுவோ, அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன்." அதோ, அங்கே தான் நீங்கள். அங்கே தான் நீங்கள். அவருடைய பாதத்தில் விழுந்து தாழ்த்துங்கள், தான் யார் என்று கோரும் அந்த மனிதனை நோக்கி பார்த்து கூப்பிடுங்கள், அவரை பரிசுத்த உருள்ளையர் என்றும், பெயல்சபூல் என்றும், ஆன்மீகவாதி என்றும், குறி சொல்லுபவன் என்றும், இந்த உலகம் சொன்னாலும் பரவாயில்லை. அவள், " தேவனே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்க மாட்டான்." என்று சொன்னாள். அவரிடம் அவள் தன்னுடைய விசுவாசத்தை அறிக்கை செய்து, அவர் யார் என்பதின் சரியான அவரது தலைப்பை அவருக்கு கொடுத்தாள். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ, அதை தேவன் உமக்கு தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன்." ஓ, நான் அதை நேசிக்கிறேன். 93. நீங்கள், "சகோதரன் பிரன்ஹாம்! இந்த வழியில் நான் வெகு நாட்களுக்கு முன்பே இருக்கிறேன் என்று சொல்லலாம்." ஆனால் இப்பொழுதும் கூட... சகோதரன் பிரன்ஹாம்-! மருத்துவர் எனக்கு இருதய நோய் இருப்பதாக கூறினார். நான் எந்த நிமிடத்திலும் மரித்து போவேன்." ஆனால் இப்பொழுதும், தேவனே... நீங்கள் சொல்லலாம் ஆனால் சகோதரன் பிரன்ஹாம், நான் புற்றுநோயால் அரிக்கப்பட்டு உள்ளேன். ஆனால் இப்பொழுதும் தேவன், நீங்கள் ஆண்டவரிடத்தில் எதை கேட்டாலும், ஆண்டவர் அதை உங்களுக்கு தருவார். அவர் தேவனுடைய வலது பாரிசத்திலிருந்து உங்களுக்காக பரிந்து பேசிக் கொண்டு இருக்கிறார். "இப்பொழுதும் கூட, தேவன் நீங்கள் எதை வேண்டுமானாலும் ஆண்டவரிடம் கேட்டால், ஆண்டவர் அதை உங்களுக்கு கொடுப்பார்." 94. நான் அவரைப் பார்க்கிறேன். அவர் பார்ப்பதற்கு அவ்வளவாக நன்றாய் இல்லை. வேதம் சொல்லுகிறது, நாம் பார்க்க தக்க ரூபம் அவருக்கு இல்லாமல் இருந்தது. அவர் ஒரு பெரிய 6 அடி உயரம் உள்ளவர் அல்ல. அவர் ஒரு சிறிய மெலிந்த உடல் உள்ளவர். அவர் நேரே நிமிர்ந்து, தோள்கள் சற்று சரிந்து காணப்பட்டார். அவர் 30 வயதுக்கு முன்பே தாடி எல்லாம் நரைத்து இருந்தது. தோள்கள் சரிந்தவாறு, "உன்னுடைய சகோதரன் மீண்டும் உயிர்த்து எழுந்திருப்பான் இருப்பான் " என்று சொன்னார். ஓ என்ன-!! அவள் சொன்னாள், "ஆம் ஆண்டவரே, உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளில் அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்." அவன் ஒரு நல்ல பையன். மற்றும் கடைசி நாளில் ஆண்டவர் அவனை எழுப்புவார் என்றாள். இயேசு சொல்வதை என்னால் பார்க்க முடிகிறது, "நானே உயிர்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன்." நான் இருக்கிறேன், "நான் இருப்பேன் ; நான் இருந்தேன்" என்று அல்ல. நான் இருக்கிறேன் (நிகழ் காலம்) நானே உயிர்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்." ஓ என்ன மகிழ்ச்சி. அவர் சொன்னார்," நானே உயிர்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்." என்று கர்த்தர் சொன்னார்.," என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்." உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான். "இதை விசுவாசிக்கிராயா-?" என்றார். அவள் சொன்னாள், "ஆம் ஆண்டவரே, நான் உம்மை விசுவாசிக்கிறேன், நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன். நீர் இந்த உலகத்திற்கு வந்த பரலோகத்தின் தேவன் என்று விசுவாசிக்கிறேன். மேலும் நீர் தேவனை கேட்டுக் கொள்வதெதுவோ அதை தேவன் அருள்வார், நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன்" என்றாள். ஓ, ஏதோ ஒன்று கண்டிப்பாக நடக்க வேண்டும். ஏதோ ஒன்று கண்டிப்பாக நடக்க வேண்டும். காரியங்கள் இவ்வாறாக வந்து கொண்டிருந்தன, எல்லாம் ஒன்று கூடி வந்தன. ஓ-! அவர், "அவனை எங்கே வைத்தீர்கள்." என்றார். "ஆண்டவரே வந்து பாரும்" என்றார்கள். அவர் சென்றார். 95. ஒரு குறிப்பிட்ட ஆலயத்துக்கு சொந்தமான ஒரு சிறு பெண்மணி சமீபத்தில் என்னோடு கூட வக்குவாதம் செய்வதற்கு முயற்சித்தாள். அது ஒரு விஞ்ஞானி ஆலயம். எல்லாம் விஞ்ஞான பூர்வமாக அறிந்திருந்தனர். அவள் சொன்னாள், "மதிப்பிற்குரிய போதகர் பிரன்ஹாம், அவர் தெய்வீகமானவர் என்று நம்புகிறீர்களா-? நான் சொன்னேன், "அவர் தெய்வீகமானவர் என்று எனக்கு தெரியும்." அவள், "அவர் ஒரு சாதாரணமான மனிதன்." என்று சொன்னாள். நான், "அவர் மனிதனுக்கும் மேலானவர், நான் சொன்னேன் அவர் தேவ மனிதன் என்று சொன்னேன்." அவள் சொன்னாள், "அவர் மனிதனை தவிர ஒன்றுமில்லை." நான் சொன்னேன், "தேவன் கிறிஸ்துவுக்குளிருந்து இந்த உலகத்தை தம்முடன் ஒப்புரவாக்கி கொண்டார்." நான் சொன்னேன் அவர், "அவர் தெய்வீகமானவர்." "அவர் அப்படி இல்லை, அவர் மனிதன் தான்." என்று சொன்னாள். நான், "அவர் தெய்வீக மனிதன்" என்று சொன்னேன். அவன் சொன்னாள், "அது அப்படி இருக்கவே முடியாது. மேலும் நான் வேதாகமத்தின் மூலமாக அவர் தெய்வீகமானவர் இல்லை என்பதை நிரூபிப்பேன்." என்றாள். நான் சொன்னேன், "பாருங்கள் பெண்மணியே. சர்வ வல்லவர் ஒரு கன்னியின் மேல் நிழலிட்டார். மேலும், ஒரு குழந்தை பிறந்ததென்றால் அது ஒரு மனிதன் மூலமாக பிறக்கிறது என்று நமக்கு தெரியும். அதனுடைய ரத்த அணுக்கள் ஆணிடமிருந்து வருகிறது, நீங்கள் அதை நம்புகிறீர்கள் அப்படித் தானே. 96. இங்கே, உங்கள் எல்லாரிடமும் கோழிகள், மற்றும் அது போன்ற காரியங்கள் இருப்பதை நான் கண்டேன். செடிகள் துளிர் விடும் காலத்தின் பறவைகள். ஒரு வயதான தாய்ப் பறவை வெளியே சென்று ஒரு கூடு நிறைய முட்டையிடும். மேலும் அது அதன் மேலே சுற்றி வந்து, அந்த முட்டைகள் மேல் அடை காக்கும். அது வயதாகி, பறக்க முடியாத சூழ்நிலை வரும் வரைக்கும் அது அந்த முட்டையை சூடாக வைத்துக்கொள்ளும். ஆண் பறவையோட சேராத பட்சத்தில், அந்த முட்டைகள் பொரிக்கவே செய்யாது. அவைகள் அப்படியே தான் கிடக்கும். மேலும் கெட்டுப் போய்விடும். அது சரிதானே. நான் நினைக்கிறேன், இன்றைய நாளில் ஆலயங்கள் அப்படித்தான் இருக்கிறது. நமக்கு ஒரு பெரிய கூடு நிறைய கெட்டு போன முட்டைகள் தான் இருக்கிறது. அந்த காரியங்களை கழுவி, மீண்டும் புதிதாக துவங்க வேண்டிய நேரம் வந்து விட்டது. யாராவது கிறிஸ்துவோடு ஐக்கியம் கொண்டவர்களுக்கு மட்டும் இது பொருந்தும்... ஆமாம் ஐயா. மற்றும் அங்கே..... அந்த கோழிக்கு முட்டை இட முடியும் என்றால், அது ஆண் பறவையிடம் சேராத பட்சத்தில் பொறிக்கவே செய்யாது. அனு ஆணிடம் இருந்து மட்டும் தான் வருகின்றது. உங்களுக்கு...இல்லை. இரத்த அனு ஆணிடத்திலிருந்து மட்டும் தான் வரும். 97. மேலும் நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டுள்ளோம். மற்றும், சர்வ வல்ல தேவன் ஆவியாக இருக்கிறார். மேலும் அவர் கன்னி மரியாளின் மேல் நிழலிட்டு சிருஷ்டித்தார்... தேவன் சிருஷ்டித்தார், எந்த மனிதனையும் அறியாமல், பாலியல் விருப்பத்தினால் இல்லாமல், இரத்த அணுவை அந்த பெண்ணின் கர்ப்பத்தில் சிருஷ்டித்தார். நீங்கள் நம்புகிறீர்களா-? மற்றும் அந்த அனுவாகப்பட்டது ஒரு மனிதனாக வளர்ந்து தேவக்குமாரனானார். மேலும், பாலின ஆசையினால் உண்டாகாமல், யெகோவா சிருஷ்டித்த தேவகுமாரனுடைய கலப்படமற்ற, கல்வாரியில் சிந்தின அந்த இரத்தமானது, நம்மை பாவங்களிலிருந்தும், வியாதிகளிலிருந்தும் மீட்டது. அல்லேலூயா-! சகோதரனே, இந்த மதியம் நான் அதற்காக மரிக்க தயாராக இருக்கிறேன். நீங்கள் அதை நம்பவில்லை என்றால், நீங்கள் தொலைந்து விட்டீர்கள். என்னுடைய முழு இருதயத்தோடு அதை நம்புகிறேன். ஆமாம் ஐயா. 98. நான் சொன்னேன், "ஆமாம், அவர் தெய்வீகமானவர். அவர் சிருஷ்டிக்கப்பட்ட தேவனுடைய குமாரன்." மற்றும் நான் சொன்னேன், " தேவன் அவருக்குள் இருந்து, இந்த உலகத்தை தமக்கு ஒப்புரவாக்கிக் கொண்டார்." அவள்-?"அவர் வெறும் ஒரு மனிதன் தான். அவர் தெய்வீகமானவர் அல்ல." சொன்னாள், "வேதத்தின் மூலமாக நான் அதை நிரூபிக்கிறேன். நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளுவீர்களா-? நான் சொன்னேன், "வேதாகமத்தின் மூலமாக நீங்கள் நிரூபிக்க முடியும் என்றால் நான் அதை ஏற்றுக் கொள்வேன்." மற்றும் உனது கொள்கை பொய் என நிரூபிப்பேன் என்றால், நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா-?" அவள் சொன்னாள், "முதலாவது நீங்கள் தவறு என்பதை நான் நிரூபிக்கிறேன்." நான் சொன்னேன், "உங்களுடைய வாக்கின் மூலமாகவே செல்வோம்." என்றேன். அவள் சொன்னாள், "லாசருவின் கல்லறைக்கு அவர் சென்ற போது" சொன்னாள், "அவர் கல்லறைக்கு சென்று அங்கு அழுதார்." "அது எதை காட்டுகிறது என்றால், அவர் ஒரு மனிதனே தவிர வேறு ஒன்றும் இல்லை, ஏனென்றால் அவருக்கு உள்ளத்தில் வருத்தம் இருந்தது. அவர் அழுதார். அவர் ஒரு சாவை உடையவராக இருந்தார்." நான் சொன்னேன், "ஆமாம் அம்மையாரே-! அவர் லாசருவின் கல்லறைக்கு சென்ற போது, ஒரு மனிதனை போன்று அழுதார் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அவர் அந்த மெலிந்த உடல் உருவத்தோடு நிமிர்ந்து நின்றுக் கொண்டு, சொன்னார், "லாசருவே வெளியே வா." அது ஒரு சாவையுடையவனை விட மேலானது. அது தேவன் தன்னுடைய குமாரன் மூலமாக பேசிக் கொண்டிருந்தார்." அல்லேலூயா. மற்றும் நான்கு நாட்களுக்கு முன்பாக மரித்த ஒரு மனிதன், அங்கு தன்னுடைய சொந்தக் கால்களில், நின்றுக் கொண்டு, மீண்டும் ஜீவித்தான். நீங்கள் அதை நம்புகிறீர்களா-?" ஆமாம் ஐயா. 99. நான் சொன்னேன், "பெண்மணி, அது உண்மை. அன்று இரவு அவர் மலையிலிருந்து கீழே இறங்கி வரும்போது, அவர் ஒரு மனிதனாக இருந்து தனக்கு பசி எடுப்பதினால் அவர் சுற்றிப் பார்த்து ஒரு மரத்தின் மேல் சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா என்று தேடினார். அவர் மனிதனைப் போல சாப்பிடுவதற்கு, ஏதாவது கிடைக்குமா என்று தேடினார். அவர் பசியாக இருந்தார். ஆனால் அந்த ஐந்து அப்பங்களையும் (biscuits) மற்றும் சிறிய மீன்களையும் எடுத்து, ஐயாயிரம் பேர்களுக்கு போஷித்தார், அது ஒரு மனிதனை காட்டிலும் மிக அதிகம். அது தேவன், அந்த சிருஷ்டிகர் தாமே, தன்னுடைய மகன் மூலமாக பேசிக்கொண்டு இருந்தார்." அல்லேலூயா. வியூ. எப்படியும், என்னை பரிசுத்த உருளையர் என்று கூப்பிட போகிறீர்கள், நான் இங்கு இருக்கும் போதே ஒரு பெரிய களிப்பூட்டும் நாளாக கொண்டாடுவோம். சகோதரனே, நான் ஒன்று சொல்கிறேன். ஆமாம் ஐயா. கவனியுங்கள். அவருக்கு பசி எடுக்கும் போது அவர் ஒரு மனிதனாக இருந்தார். ஆனால் ஐயாயிரம் ஜனங்களுக்கு போஷிக்கும் போது, அவர் தேவனாக இருந்தார். அந்த படகின் பின் புறமாக படுத்துக் கொண்டிருக்கும் போது, அந்த இரவில் கடல் கொந்தளிக்கும் போது, படகை மூழ்க செய்வோம் என்று பத்தாயிரம் சாத்தான்கள் சத்தியம் பண்ணும் போது அவர் ஒரு மனிதனாக இருந்தார். மிகுந்த களைப்பால், தன்னால் அசையக்கூட முடியாமல், அந்த படகின் பின் புறத்தில் படுத்துக் கொண்டிருக்க, அந்த வல்லமையான அலைகள் அவரை எழுப்பாமல் இருக்கும் போது அவர் மனிதனாக இருந்தார். அவர் தூங்கும் போது அவர் மனிதனாக இருந்தார்; அவர் எழும்பும் போது (அல்லேலூயா), அங்கு சென்று, கால்களை அந்த படகு பாயின் நுனி கயிறு இருக்கும் இடத்தில் நின்று சொன்னார்" "அமைதலாய் இரு" அந்த காற்றும், கடலும் அவருக்கு கீழ்படிந்தது. அவர் தேவனாக இருந்தார். காற்றும் கடலும் அவருக்கு கீழ்படியும் போது அவர் ஒரு சாகக் கூடிய மனிதனை விட மேலானவராக இருந்தார். அவர் தேவனாக இருந்தார். 100. சகோதரனே அவர் கல்வாரி சிலுவையில் மரிக்கும் போது, அவர் கூப்பிட்டு, "என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர்-?" அவர் ஒரு மனிதனைப் போல மரித்தார், ஆனால் ஈஸ்டர் காலையில், அவர் எல்லா மரணத்தின் கட்டுகளையும், பாதாளத்தையும், கல்லறையும் உடைத்துக் கொண்டு எழுந்தார். அவர் தேவன் என்பதை நிரூபித்தார். இம்மானுவேல் இன்று அவர் உயரத்தில் எழுந்தார். இதை நம்புகிறீர்களா-? இந்த கட்டிடத்தை சுற்றி பரிசுத்த ஆவி சுற்றிக்கொண்டு இருப்பதை நான் நம்புகிறேன். நீங்கள் நம்புகிறீர்களா-? சரியாக இப்பவே, நாம் எல்லோரும், ஒவ்வொருவரையும் குணமாக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இதை நீங்கள் நம்புகிறீர்களா-? தேவனுடைய தூதர், சரியாக இப்பொழுதே இந்த கட்டிடத்தை சுற்றிக் கொண்டு இருக்கிறார். இங்கு இருக்கும் எந்த ஆணோ அல்லது பெண்ணோ சுகம் அடைய வேண்டுமென்றால், எழும்பி காலூன்றி நின்றால், இப்பொழுதே சுகத்தை பெற்றுக் கொள்வர் என்பதனை நான் நம்புகிறேன். இதை நீங்கள் நம்புகிறீர்களா-? காலூன்றி நில்லுங்கள். அல்லேலூயா. ஓ ஆண்டவரே, ஜீவனுக்கெல்லாம் அதிபதியே, எல்லா நன்மையான ஈவுகளை தருபவரே, உம்முடைய ஆசீர்வாதங்களை இந்த ஜனங்களுக்கு இப்பொழுதே அனுப்பும். ஒவ்வொருவரையும், குணமாக்கும் தேவனே. உம்முடைய இரக்கம் விழுவதாக. இப்பொழுதே உம்முடைய வல்லமை இங்கிருக்கும் எல்லார்மேலும் இறங்கி சுகத்தை அளிக்கட்டும். அவர்களெல்லாம் முன்னே வந்து தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் சுகமாக இருக்கட்டும். கரங்களைப் பிடித்துக் கொண்டு அவரை துதியுங்கள். அவர் இங்கே இப்பொழுதே இருக்கிறார். அவர் ஜனங்களை சுகமாக்கி கொண்டு இருக்கிறார். நன்மையான காரியங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அல்லேலூயா. அவர் இங்கே இருக்கிறார் என்பதை நம்புகிறீர்களா-?... *******